ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
தேவியின் கண்மணி நாவல் போட்டியில் என்னுடைய நாவலான ‘யாழினிது’ம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எங்கும் நிறை பேரருளின் கருணைக்கு நன்றி!
இந்தக் கதையில் சூட்சமமாக இடம்பெற்ற, வாழ்க்கையைத் துய்த்து வாழ்ந்த என் அலுவலக நண்பர் பிரையனை இந்த நேரத்தில் அன்புடன் நினைவு கூர்கிறேன். அவரோ, அவருடைய வாழ்க்கையோ இந்நாவலில் இல்லை. எனினும் அவருடைய விடாமுயற்சியின் சுவடுகள் எத்தனை கனமாக என்னுள் ஊடுருவியுள்ளது என்பதை இக்கதையை எழுதும்போது தான் நானும் உணர்ந்தேன். இப்போது நீங்கள் இருந்திருந்தால் உங்களிடம் தான் இதை முதலில் சொல்லியிருப்பேன் பிரையன். இது என்ன போட்டி என்று ஒரு மணி நேரம் நகர விடாமல் நீங்களும் என்னை துளைத்திருந்திருப்பீர்கள்
.
