"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Showing posts with label ஹேமா ஜெய். Show all posts
Showing posts with label ஹேமா ஜெய். Show all posts

Friday, November 20, 2020

இதழ் வரி கவிதை

அன்புள்ளவர்களுக்கு,
 
இதழ் வரி கவிதை - புதிய நாவல் இப்போது கிண்டிலில். 

இது ஒரு ஜாலியான நாவல் தான். சிறு சிறு கவிதைகளுடன் மென்மையாக நகரும் இக்கதை வாசிக்கும் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். வாசித்து விட்டுச் சொல்லுங்கள்.

Monday, August 31, 2020

பூக்கள் விற்பனைக்கல்ல - புத்தகமாக

அனைவருக்கும் வணக்கம்,

“பூக்கள் விற்பனைக்கல்ல” நாவல் புத்தகமாக வெளி வந்துள்ளது. இவ்வினிய தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி நட்புகளே! கடவுளுக்கு முதற்கண் நன்றி! எம்ப்ரியாலாஜி துறை எந்தளவு மனித குலத்திற்கு வரப்பிரசாதமாக உள்ளதோ, அதற்குச் சரியாக வியாபார நோக்கும், சிலரின் குற்றங்குறைகளும் இருக்கவே செய்வதால் - இத்துறையில் நிகழும் அர்ப்பணிப்பு, அத்துமீறல்களை முழுநீள நாவலாக எழுத முடிந்தால் நன்றாக இருக்குமே என்கிற கனவு நனவாக இயன்றது நிச்சயம் இறைவனின் அருளே!

Wednesday, March 4, 2020

பூக்கள் விற்பனைக்கல்ல - 'இது தமிழ்' தளத்தில்

'இது தமிழ்' இணைய தளத்தில் வெளியான 'பூக்கள் விற்பனைக்கல்ல' நாவலுக்கான விமர்சனம். வாசித்து விமர்சித்த நண்பர். திரு. நந்தகுமார் நாகராஜனுக்கு நன்றிகள்!

https://ithutamil.com/pookkal-virpanaikkalla-novel-review/

Friday, September 27, 2019

ஆயிரம் ஜன்னல் மனசு - வாசகர் பார்வை

எழுதும்போது நமக்கு தோன்றும் உணர்வுகளை வாசிக்கும்போது புரிந்து கொள்ள இயன்றால் தான் அந்த எழுத்து சரியாக போய் சேர்ந்ததாக கொள்ளலாம். உங்கள் மதிப்புரை மூலம் அந்த உணர்வுகள் இயல்பாக கடந்திருப்பது அறிந்து  நிறைவாக உள்ளது.

Thursday, September 26, 2019

கண்ணாடிக் கோணங்கள்

கண்ணாடிக் கோணங்கள் என்னும் சிறுகதை செப்'2019 தென்றல் இதழில் பிரசுரமாகி உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் வாசித்துச் சொல்லுங்கள்.

பூவிதழ் தூரிகை - சில பார்வைகளும் பின்னூட்டங்களும்

பூவிதழ் தூரிகை - சில பார்வைகளும் பின்னூட்டங்களும்