"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Sunday, June 28, 2020

மனமது நலமாக...

சும்மா இருந்து இருந்தே டயர்ட் ஆகி, மீண்டும் சும்மா இருந்து, இன்னும் டயர்ட் ஆகி என பழகப்பழக பாலும் புளிக்கும் என்கிற மாதிரி கடந்து கொண்டிருக்கின்றன நாட்கள். 'ஹை ஜாலி.. ஸ்கூல் இல்ல...' என்று ஓடி வந்த பிரீ-ஸ்கூல் பிள்ளை கூட 'என்னடா வாழ்க்கை இது? போரடிக்கிறது' என்று கவிழ்ந்து படுத்துக்கொண்டு தத்துவம் பேச ஆரம்பித்திருக்கிறது.

Saturday, June 27, 2020

mitr - My friend

வேறு ஏதோ தேடத்துவங்கி எதேச்சையாக யூ-டியுப்பில் கண்டடைந்த திரைப்படம் mitr - My friend.

மாப்பிள்ளை வீட்டினர் முன் அமர்ந்து கீர்த்தனம் பாடி, NRI -ஐ திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா செல்லும் நாயகியுடன் படம் தொடங்குகிறது. அந்நிய மண்ணில் ஆரம்பிக்கும் நிறைவான மணவாழ்க்கை. தாய்மை அடைந்து குழந்தையும் பிறக்க, கணவன், மனைவி, மகள் என்று வாழ்கிற மகிழ்ச்சியான குடும்பம் என ஆர்ப்பாட்டங்கள் இல்லாத அமைதியான சிற்றோடையாக நகர்கிறது திரைக்கதை.

Wednesday, June 24, 2020

ஒரு வாசகக் கடிதம்

சமீபத்தில் மின்னஞ்சல் வாயிலாக தோழி ஒருவர் அளவளாவினார். அவரது கடிதம் கண்டு நெகிழ்ந்து போனேன்.

ஏதேதோ எண்ணங்களுடன் உறக்கம் வாய்த்திராத நள்ளிரவொன்றில் எங்கிருந்தோ ஒரு குரல் நமக்காக 'Praying God' என்று சொல்கிற இந்த அன்பையும் தாண்டி வேறென்ன வேண்டும்!? 

முதல் துளி

'முதல் துளி' சிறுகதை ஜூன் மாத தென்றல் இதழில் வெளியாகியுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் வாசித்துப் பாருங்கள். ஒலி வடிவிலும் இக்கதையைக் கேட்கலாம்.

Monday, June 22, 2020

மன சோர்வுகள்


ஆரம்ப லாக்டவுன் அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்தில் ஒரு வித பதட்டம் இருந்தாலும் நிறைய நம்பிக்கை இருந்தது. உலகமே சேர்ந்து போராடுகிறது, இரு வாரங்களில் நிலைமை சீராகிவிடும். மிஞ்சினால் ஒரு மாதத்திற்குள் இயல்புநிலை திரும்பும், எப்படியும் மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் என்கிற எண்ணமே பலரிடமும் மிகுந்திருந்தது.

Ayla - My korean daughter

என் தாத்தாவிற்கு ஒரு பழக்கம் உண்டு. அவருக்குப் பிடித்தமான உணவை யாராவது மறுத்தால் அடம் செய்து ருசிக்க வைக்கிற பிடிவாதமுண்டு அவரிடம். பேரன் பேத்திகள் ஏதாவது உணவு வேண்டாம் என்றால் கெஞ்சி, கொஞ்சி, பக்கத்திலேயே அமர்ந்து ஊட்டி விட்டு தான் ஓய்வார். 'இதை.... இதை மட்டும் சாப்பிட்டு பாரு....' என்று கெஞ்சுபவரின் பாசப்பிடியில் இருந்து வெளிவர முடியாமல் அவர் கொடுப்பதை வாங்கி ருசித்து, அவர் சிலாகிக்கும் அழகிலேயே நமக்கும் அது ருசியான உணவாக மாறிப் போகும். அவர் இல்லாமலாகி இருபது வருடங்கள் கடந்து இருந்தாலும் அந்த அன்பு மட்டுமே இப்போதும் அவரை எல்லா நினைவுகளிலும் இருத்தி வைத்திருக்கிறது. 

லாக்டவுன் காலத்து கிறுக்கல்கள்


முகநூலில் ஏதாவது தலைப்புகள் கொடுத்து நான்கே வரிகள் எழுத சொல்லி கவிதை சவால் விளையாடிக் கொண்டோம். 'சோறு' என்ற பெயர் கொடுத்துவிட்டு எப்படி லிமிடெட் மீல்ஸ் பரிமாறுவது என்றெல்லாம் கெத்தாக சொல்லி சமாளித்து விட்டாலும் நறுக்கென நாலு வரியில் ஒன்றும் தோன்றவில்லை என்பது தான் உண்மை. பின்வருவனவற்றை 'கவிதை' என்றும் சொல்லலாம். வார்த்தைகளை வெட்டிப் போட்ட 'கிறுக்கல்' எனவும் குறிக்கலாம். சோறு சமைத்ததுடன் ஒதுங்கிக் கொண்டாயிற்று. இனி பெயர் வைத்துக் கொள்வது அவரவர் கவலை.

இரு திரைப்படங்கள்

இரண்டு வாரங்களாக கொஞ்சம் கொஞ்சமாக பார்த்து முடித்த திரைப்படங்கள் - Miracle in cell no.7 மற்றும் First they killed my father. முன்னது மென் கவிதையெனில் பின்னது நம் உணர்வுகளை உலுக்கிப் போடுகிறது.