"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, October 22, 2018

மலரினும் மெல்லிய - சில பார்வைகள்

வணக்கம்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? நான் இந்த பக்கம் வந்தே ரொம்ப நாட்கள் ஆகி விட்டன.  வேலைகள் நெருக்குவதால் தெரிந்தோ, தெரியாமலோ பெரிய இடைவெளி விழுந்துடுச்சு. எந்தப் பதிவும் இல்லை என்றாலும் தவறாமல் இங்கு வந்து எட்டிப் பார்த்து செல்லும் நண்பர்களுக்கு என் அன்பும், நன்றியும்!

மலரினும் மெல்லிய  நாவலுக்கு வந்துள்ள சில வாசகர் பார்வைகளை சேகரித்து வைக்கலாம்னு ஒரு எண்ணம். ஸெல்ப் டப்பா-லாம் இல்லைங்க. வயசான காலத்துல புரட்டிப் பார்க்க ஒரு குட்டி archive. இல்லேனா ஈமெயில், பேஸ்புக் , chat என அங்கங்கே பதிவுகள் நழுவிப் போயிடுது.

வாசித்தவுடன் நாவல் குறித்த  தங்கள் பார்வைகளை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! விரிவான பார்வைகள், அலசல்கள் முதல் அவரவர் உலகின் அவசரங்களுக்கு இடையே குறுஞ்செய்திகள், பின்னூட்டங்கள்  என இக்கதை குறித்து  பகிர்ந்து கொண்ட  தங்களது ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு மிக மிக முக்கியமானவை. பதிப்புக்கு கொடுத்தபின் fingers crossed -ஆகவே சுற்றிக் கொண்டிருப்பவளுக்கு இவ்வார்த்தைகள் தரும் ஆசுவாசத்தை விவரிக்கவே முடியாது. மிகுந்த நன்றிகள் மக்களே!

குறிப்பு:
சில கடிதங்களை privacy காரணமாக இங்கே பதிவு செய்யவில்லை. இக்கதை வாசிப்பவரின் மனதில் ஏதோ ஒரு மூலையில் நல்லெண்ணத்தை விதைத்திருந்தால், சிறு நுனியளவு ஜாக்கிரதை உணர்வை தூண்டியிருந்தால் கூட அதுவே இம்முயற்சிக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக கொள்வேன்.

Mercy Aruna Alex - Jun 21st 2018:

Hello madam,
Bought Malarinum Melliya from we can books yesterday. Read the story today.
Superbly written Mam. Like the story plot very much. I am a mother of 2 daughters
And the sexual abuse of girls is our society makes me very much worried and some news makes me cry.

You wrote very well about what the parents should teach them and how they should be careful in this matter. Thanks for the story Mam. I always feel your stories are not only a story but it is very much closer to the reality.  The positive hero character which you create in your stories are really amazing.Very mature and well mannered heroes. Good  suspense and I like the way you didn't go deep into that ugly matter. Love Adhi character very much.

Alamu Palaiappan - Jun 25th 2018 :

ஹேமா 

" மலரினும்மெல்லிய " புத்தகம் வாசித்தேன் .பெயர் மற்றும் அறிமுகத்தை வைத்து ஒரு மென்மையான காதல் கதை என்ற எண்ணத்துடன் அரம்பித்த என்னை மனம் கனக்கச்செய்துவிட்டீர்கள் ஹேமா. 

ஆதி, சஹானா மற்றும் நேத்ரா  - இவர்கள் யார்நாம் மற்றும் நம்மைச்சார்ந்தவர்களே. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

சஹானா - பெண் குழந்தைளை பெற்றெடுத்த தாயின் பிரதிபிம்பம் (பெறாத தாய்). தான் பெற்ற  வேதனை தன்  பெண்ணுக்கு நேர்ந்து விடக்கூடாது என்ற அவளது தவிப்பு என் கண்களில் கண்ணீர் வரச்செய்தது. 

ஆரம்பம் முதலே ஒரு சஸ்பென்ஸ்சுடனே கதை நகர்ந்தது. ஆதி, அருண்,  Sahana, Nethra, தேவி,செல்வி, கங்கா, புவனா, "தி கிரேட் சந்திரசேகர் ." இவர்கள் அனைவரும் யார் யார் இவர்களுக்குள் என்ன உறவு  என்ற  யாேசனையுடனேயே பயணிக்கவைத்துள்ளீர்கள் . சவாரசியமாகவே இருந்தது. அது பாேல் உங்கள் கதைகளை  பாெறுத்த வரை நண்பர்களுக்கிடையில் மற்றும் நாயகன் நாயகி இருவரிடையே நடக்கும் உரையாடல்களில் ஒரு மெல்லிய நகைச்சுவை உணர்வு இழையாேடும் அது நாம் ரசிக்கும் வகையில் இருக்கும் இந்தக்கதையில் அவ்வுணர்வு கதையின் இறுதிரை இருந்ததாகவே எனக்கு தாேன்றியது. 

" Child abusement"  இன்றைய தேதியில் செய்தித்தாள்களில் இது அன்றாடச்செய்தி ஆகிவிட்டது. நான்கு வரி படித்ததுமே மனதில் ஒரு பதைபதைப்புடன் பக்கத்தை  திருப்பும் என்பாேன்றவர்கள் இருக்கிறாேம். காரணம் நம்மால் ஒன்றும்செய்ய முடியாத இயலாமை மற்றும் நம் குழந்தைகளை  எப்படிப்பாதுகாக்கப் பாேகிறாேம் என்ற பயம்.  மேலும் அச்செய்திகளில் உள்ள விஷயங்களை தாங்க இயலாத ஆற்றாமை. 

இவ்விஷயத்தில் இளைஞர்கள் ,   வயாேதிகர்கள்  யாரையும் நம்பக் கூடாது என்பதற்கு பல சாட்சிகள் உண்டு இங்கு. இந்த          விஷயங்களை அழகாக கதையில் காெண்டுவந்து ஒரு மறக்கவே  முடியாத கதையை  காெடுத்துள்ளீர்கள் ஹேமா.

கதையைப்பற்றி  மேலும் பல விஷயங்கள் உள்ளது ஹேமா சாெல்வதற்கு ஆதி அவனதுசெயல்களால் சஹியின் மனதை மயிலிறகால் வருடுகிறான் . குழந்தை கதை முழுதும் அதன் பேச்சால் நம் மனதை அள்ளுகிறது.   வேறு என்ன வேண்டும். 

அருமையான  கதைக்கு நன்றி
ஹேமா.

v.sathyabhama venkanna -  Jun 26,2018

As usual Hema has done a great job handling a very heavy subject. Done it beautifully. Keep it up Hema.
Hema,
You have done a great job of handling a very heavy subject beautifully. Enjoyed reading it. Thanks.

Uma Manoj - Jun 26,2018
நான் படிச்சிட்டேன் ஹேமா. .ரொம்ப நல்லா இருக்கு. ..இறுதியில் சஹி எடுக்கும் குழந்தைகளுக்கு ஆன ஒவ்வொரு முடிவுகளும் எல்லா பள்ளிகளிலும் கொண்டு வந்தால் ரொம்ப நல்லா இருக்கும். 

Alamu Palaniappan - Jun 25 2018
Hema ,

I think in February when I went to my native and started back to Salem at that last minute my dad gave me a weekly magazine ( Varamalar sunday edition)and said go home and read this . After a few days , I referred the book and I was not able to find out what particularly he wanted me to read. Mostly he will mark in blue in all books I found that missing. So I called him and asked he said to read " பா கே ப " (பார்த்தது கேட்டது படித்தது ) by Andhumani . 

The same is the thing , a working parent who left her 8 year old daughter in her uncle s (mom s elder brother)  house to help her uncle who is sick was abused by him. At last after some years they came to know only after consulting a psychologist and then they treated her. 

After reading your story this thing came in my mind. .

Rama Karuppasamy Jun 28, 2018

Wow.....மலரினும் மெல்லிய..சூப்பர்.. அருமையா இருக்கு..ஹேமா..
வித்தியாசமன கதை..சமூகத்தில் இப்போ நடப்பதை பத்தி அருமையா சொல்லிருக்கிங்க.

A Kanimozhi - Sep 18, 2018

Hi Hema, 

eppadi irrukenga...ungalin malarinum mellia padithu vittean...shahana Aadhi character super...shahana Pola society la neriya pear ullar kal...indraya soolalil ungalin indha kadhai avasiyamana msg udan irrundhadu...


Kripnythaa Deepi - Sep 23 2018

"மலரினும் மெல்லிய"

மலர் போன்ற மென்மையான மனம் மங்கைகளுக்கு என்று கூறுபவர்களுக்கு மலரினிடை விட மெல்லியவர்கள் மழலைகள் என்பதை அழகிய எளிய நடையில் தந்தமைக்கு வாழ்த்துகள். 

சஹியின் பிடிவாதமும், அர்த்தமற்ற கோபமும் ஒருவித ஆதங்கத்தை ஏற்படுத்திய பொழுதும், நேஹாவின் மீதான பாசமும் ஆழ்மனதில் புதையுண்ட சஹியின் கடந்த கால கசடுகளும், கட்டாயமாக சமுதாயத்தில் வெட்டியெறிய வேண்டிய களைகளின் முன்பாக அவள் முன்னேறிய விதம் பாராட்டப் பட வேண்டியதே!


ஆதியின் பாசமும், காதலும் தேவையான இடங்களில் அழுத்தமாகவே பதிந்துள்ளது. அனைத்தையும் விட மழலைகள் பற்றிய சஹானாவின் உரை மனதை கலங்க செய்தது. 

உண்மைதானே! நமக்கு நாடாகும் சில நரக வேதனைகளை மனதில் சமூக போலி வேடத்திற்கு பயந்து பூட்டிவைத்து கொள்வது தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலகாரணம். இன்றைய நிலையில் நடைபெறும் நிகழ்வுகளை அருமையாக காட்டியமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

மலரினும் 
மெல்லிய 
மனதை 
மீட்டும் 
மழலையின் 
மகிழ்ச்சி!

Sudha Ravi - Sep 24,2018

அருமை தீபி... எனக்கும் ரொம்ப பிடிச்சுது ஹேமா கதை. வாழ்த்துகள் ஹேமா!

Ammu on 21st September 2018

Good job of handling a tacit subject. Need of the moment.

Anuon 25 September 2018

Very good story with excellent message.. parents please read..


Haridharani Somasundaram - Oct 17, 2018

மலரினும் மெல்லிய" En Ullaarntha Urangum Unarvugalai Elupi, Enakaana Samooga Poruppai, Pennaaga irupatharkoru nimirvai thanthathu.

ithaividavum alagaa solla mudiumaanu theriyalai.. great words "Malarinum Melliya Mazhalaigal" 
Ipoyirukkum societyku.thevaiyaana ondru

Ani Siva - Oct 17, 2018

Overnightla padichen, romba naal kappuram non stop a padicha story..

Lakshmi Laya Perumal - Oct 17,2018

Semma story ... Oru pen kuzhanthai Amma illama vazha mudiyathu athu en ... Kannithaya irukka en ivvalavu thavikkura ... Ellam puriyum bothu kanneer varuvarhai thavirkka mudiyathu ..

ஜான்சி மிக்கேல் - Oct 17, 2018

ஹேமாவின் #மலரினும் மெல்லிய ( கிண்டிலில்)

நம் நாட்டு வக்கிரத்தை, குழந்தைகள் மேல் பாலியல் பிரயோகம் செய்யும் பெரிய மனிதர்களாக காட்டிக் கொள்ளும் சில உறவினர்கள் செய்யும் நம்பிக்கைக்கு மாறான துஷ்பிரயோகத்தை , அதனால் மனதளவில் பாதிக்கப் படும் நாயகியை விவரிக்கின்றது கதை.

தாய் தந்தை இழந்த தோழியின் குழந்தைக்காக உருகும் இடம், குழந்தை தொலைந்ததும் துடிக்கின்ற விதம் நாயகி சஹானாவும் மலரினும் மெல்லியவள் தான்.

முதலில் சிடுசிடுப்பு, பின்னர் அன்பு என ஆதியும் மனம் கவர்கின்றான்.

நேஹா க்யூட்...இருவரையும் இணைக்கும் பாலம்..

அழகான கதை Hema Jay

Faranas on April 17, 2020

Hi hema I read ur mm novel Was so nice. Well plotted Adhi and charu portyed very well Child trafficking issue was soo well explained Always we feel educated, statisfied while reading ur novel I felt the same in this novel too. Is this ur new novel? Happy for you hema Please give more novels.

Sri Vr on April 21, 2020


மலரினும் மெல்லிய....ஹேமா ஜெய்.

எப்போவும் இவங்க கதை எல்லாமே அருமையா இருக்கும்.

அது போலவே இந்த கதையும்.

கவிதையான தலைப்பு.

ஆனால் கனமான மனதை உருக்கும் கதை.

மலரினும் மெல்லியது காமம்.

அதனினும் மெல்லியது மழலைகள்.

குழந்தை பாதுகாப்பு.சைல்ட் அபியூஸ் ஹராஸ்ட்மெண்ட் ல இருந்து எப்படி பாத்து காக்கிறது, என்பதை பற்றிய கதை.

இந்தியாவில் நூற்றில் ஐம்பத்தி மூன்று குழந்தைகள் ஒரு விதத்தில் பாலியல் ரீதியாக வன்முறைக்கு உள்ளாக்கப்படுறங்க என்பது புள்ளி விவரம்.
நானும் எவ்வளவு நியூஸ் பார்த்துருப்போம் .

எவ்வளவு பெரிய உண்மை,நம் கண் முன்னாடி இருக்கும் ஆளுங்க,ஸ்கூல் பியூன்,வேன் டிரைவர்,பக்கத்து வீட்டு அங்கிள்,சித்தப்பா,மாமா இப்படி போன்ற ஆளுங்களாளந்தான் குழந்தைகள் சீரழிக்க படுகின்றனர்.

குழந்தைகள் மீது அக்கறையும் கண்காணிப்பும் அதிகம் தேவை என்பதை சொல்லும் கதை.

காதல் கதை. அதை விட விழிப்புரணவு கதை.

சஹானா தன் தோழி பூரணி குழந்தையை வளர்கிறாள்.
தான் பெற்ற மகளை போல் வளர்க்கும் அவளுக்கு குழந்தையின் அம்மா பாட்டி தேவி full சப்போர்ட்.

குழந்தை சித்தப்பா ஆதி குழந்தையை பார்த்து கொள்கிறான்.

மகளாக பார்த்து கொள்ளும் இருவருக்கும் எப்போதும் சண்டை தான்.

நடுவில் உண்மையான,உரிமையான பாட்டி நானே வளர்க்கிறேன் என் பேத்தி யை என்று பயமுறுத்துகிறார்.

கோவிலுக்கு கூட்டிட்டு போகும் பாட்டி குழந்தையை தவற விடுகிறார்.

அதன் பின் சஹானா ஆதி இருவரும் குழந்தையை எப்படியெல்லாம் தேடினார்கள்,எங்க எப்படி கண்டு பிடித்தார்கள் என்பது தான் கதை.

அருமையான நல்ல msg சொல்லும் கதை.


Sep 10 2022 Ms. Hema Moorthy

Hello Mam, I'm Hema.This story is very Nice and interesting.thanks for this story.All The Best for Ur Upcoming Updated....

Kindle Comments :

Reviewed in India on 25 September 2018

Goodreads :
rated it it was amazing
Lovely

Actual I just read the story for time pass but it was very good. Neha adhi sahi Chanceless what a character sahi so sweet of her.
Saranya Kannan
Jun 08, 2019rated it really liked it
Super novel.
Ammu
Sep 18, 2018rated it it was amazing
Good job of handling a tacit subject. Need of the moment.

No comments: