"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Showing posts with label சிறுகதைகள். Show all posts
Showing posts with label சிறுகதைகள். Show all posts

Friday, March 5, 2021

'அரசியல் பழகு' - சிறுகதை

 நண்பர்களுக்கு, வணக்கம்!

மகளிர் சிறப்பிதழான இந்த மாத தென்றல் இதழில் என்னுடைய சிறுகதை ஒன்று வெளியாகி உள்ளது.
'அரசியல் பழகு' - அலுவலகங்களில், நட்பு வட்டங்களில், முகநூலில், வாட்ஸ்அப் குழுக்களில் என இந்த உலகில் அரசியல் இல்லாத இடமே இல்லை. காற்று இல்லாத இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது அரசியலே. ஏன் வெளியே தேட வேண்டும்? நம் குடும்ப உறவுகளில் இல்லாத அரசியலா? நிறைய நேரம் அதன் நுட்பங்களை புரிந்து கொள்ளவே நேரம் எடுக்கும். புரியும்போதோ இது தெரியாமல் இத்தனை நாள் இருந்திருக்கிறாமே என்று மலைப்பாக இருக்கும்.

Wednesday, June 24, 2020

முதல் துளி

'முதல் துளி' சிறுகதை ஜூன் மாத தென்றல் இதழில் வெளியாகியுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் வாசித்துப் பாருங்கள். ஒலி வடிவிலும் இக்கதையைக் கேட்கலாம்.

Tuesday, May 12, 2020

கண்ணாடி கோணங்கள்

கண்ணாடி கோணங்கள்  - சிறுகதைகளின் தொகுப்பு இப்போது கிண்டிலில். 

பொதுவாக சிறுகதை தொகுப்புக்கு விமர்சனங்கள் வருவது அரிது. அமேசானில் சென்ற வாரம் பதிவாகி உள்ள விமர்சனம் கண்டு  மகிழ்ச்சி!

Thursday, September 26, 2019

கண்ணாடிக் கோணங்கள்

கண்ணாடிக் கோணங்கள் என்னும் சிறுகதை செப்'2019 தென்றல் இதழில் பிரசுரமாகி உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் வாசித்துச் சொல்லுங்கள்.

Wednesday, May 15, 2019

காக்கை குருவி எங்கள் ஜாதி


ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரம் கழிந்தப் பிறகும் கூடக் குளிரும் பனியும் இங்கே குறையவில்லை. அவ்வப்போது எட்டிப் பார்க்கும் சூரியன் வெயில் ஆசையைக் காட்டிவிட்டு பின்னாடியே ஊதல் காற்றை அனுப்பி வைக்க இந்த வருட வானிலை ரொம்பவே போக்குக் காட்டுகிறது.

Saturday, April 20, 2019

இலையுதிர்காலம்


“குக்கூ.. குக்கூ” குருவிகள் இரண்டும் ஒன்றோடொன்று தலைமுட்டி கிரீச்சிட...

உறக்கம் லேசாய் கலைந்த பிரமை நிலையில் உணர முடிந்தது மண்டையில் அடித்தால் போல அலறும் அழைப்பு மணியின் ஓசையை. லேசாக விழித்துப் பார்த்ததில் கண்கள் தீயாய் எரிந்தன.

Sunday, April 14, 2019

குவிகம் சிறுகதை போட்டி

குவிகம் சிறுகதை போட்டியை செம்மையாக நடத்திய குவிகம் இலக்கிய வாசல் குழுமத்தினருக்கும், திரு. கிருபானந்தன் ஐயா அவர்களுக்கும், அன்பார்ந்த நடுவர் திருமதி. கிரிஜா ராகவன் அவர்களுக்கும், புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட இத்தலைமுறை பெண் எழுத்தாளர்களுக்கான ஆதர்ச முன்னோடியான திருமதி. வித்யா சுப்பிரமணியம் அவர்களுக்கும் என் வணக்கங்களும் நன்றிகளும்!

Saturday, October 27, 2018

ஈரம் - சிறுகதைத் தொகுப்பு

நண்பர்களுக்கு,

அமேசான் கிண்டலில் ஈரம் சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பல்வேறு இதழ்கள், வலைப்பூக்கள், மின்னிதழ்களில் வெளிவந்த/பரிசு பெற்ற சிறுகதைகள் மற்றும் சில கட்டுரைகள் ஒருங்கிணைக்கப்பட்டு இவ்விடம் மின்னூலாக வெளியிடப்பட்டுள்ளது.

Thursday, June 14, 2018

Monday, May 14, 2018

அமிழும் நிகழ்கள்


பனிமலர் மே - 2018 இதழில் வெளியான சிறுகதை : 

ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்த நிமிஷம் குழந்தைகள் இருவரும் அந்த பன்னாட்டு உணவு விடுதியை நோக்கி ஓட, “ஏன்டா... எப்பப்பாரு அந்த கோழிக்காலேதான் வேணுமா?” சலித்துக்கொண்டே பின்னால் நடந்தாள் பிருந்தா. “இங்கயே என்ன வேணுமோ சாப்ட்டுட்டு வந்துடுங்க. வீட்டுக்கு போய் ‘தோசை ஊத்தேன், தயிர்சாதமாச்சும் கொடேன்’னு படுத்தாதீங்க...” என்னிடம் திரும்பியவள் அழுத்தமாக சொல்ல, சிரிப்போடு முறைத்தேன். “ஆமா. அப்படியே கேட்டவுடனே செஞ்சு கொடுத்துட்டுத்தான் மறுவேலை பார்ப்ப பாரு...” உள்பாக்கெட்டில் வைத்த கார் பார்க்கிங் ரசீதை நெருடியபடி உட்கார்ந்தபோதுதான் கவனித்தேன்.

Thursday, February 1, 2018

புன்னகை என்ன விலை?

ஒரு குட்டிக்கதை...

"காலங்கார்த்தாலே எவ்ளோ ட்ராபிக் பாரு?" ஒரு கையில் காபி மக்கும், மறுகையில் ஸ்டீரிங்குமாக தீபக் போக்குவரத்தில் கலக்க, "மண்டேல.. அதான்" பக்கத்திலிருந்த சுஷ்மா காம்பேக்ட்டை ஒற்றிக்கொண்டாள். "ஓ.. மை காட்.. எட்டு இரண்டு ஆச்சு. எட்டேகால் ட்ரைன் போயிடும்.. சீக்கிரம் போங்களேன்." நேரத்தை கவனித்தவள் அவசரமாக லிப்ஸ்டிக்கை சரிசெய்ய, "போயிடலாம், டோன்ட் வொர்ரி" தீபக் ஆக்சிலேட்டரை முழு வேகத்தில் அழுத்தினான்.

Sunday, December 24, 2017

ஈரம்

டிசம்பர் மாத தென்றல் இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகி உள்ளது. தென்றல் குழுமத்தினருக்கு நன்றி! நண்பர்களின் பார்வைக்கென முழு கதை வடிவையும் இங்கு இணைத்துள்ளேன்.

Sunday, July 16, 2017

வானம்பாடிகள்

ஜூலை மாத தென்றல் இதழில் என்னுடைய சிறுகதை ‘வானம்பாடிகள்’ வெளியாகி உள்ளது. தேர்ந்தெடுத்து வெளியிட்ட தென்றல் குழுமத்தினற்கு என் நன்றிகள்! 

Tuesday, July 4, 2017

வலிய சிறகுள்ள பறவைகள்

ரொம்ப நாட்களுக்கு முன்னால் எழுதிய சிறுகதை. முடிந்தவரை தூசி தட்டிப் போட்டிருக்கிறேன். 'வலிய சிறகுள்ள பறவைகள்' இணைப்பில்.

Monday, December 12, 2016

கனமாய் கரையும் கணங்கள்

எழுதும்போதே உணர்ந்தேன், இது சற்றே பெரிய சிறுகதை என்று. ஆனாலும் குறைக்க மனம் வரவில்லை. 'அப்படியே ஒரு ஹவுஸ் வைப்பின் வாழ்க்கை, நான் என்னை உணர்ந்தேன் இதில்' என்று கருத்துக்கள் வந்தபோது நீளம் பெரிய விசயமாக தோன்றவில்லை. நீங்களும் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

Sunday, December 4, 2016

வானப்ரஸ்தம்

லேடிஸ் விங்க்ஸ் தளத்தில் நடந்த 'தீபாவளி சிறுகதை போட்டி - 2016' -ல் முதல் பரிசு பெற்ற சிறுகதை இது. மதிப்புமிகு நடுவர் காஞ்சனா ஜெய திலகர் அவர்கள் கதைகளை வாசித்து தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார். நடுவர் அவர்களின் கடிதத்தையும் தள நிர்வாகியின் அனுமதியுடன் இங்கே இணைத்துள்ளேன். தேர்வுக் குழுவுக்கும் , போட்டிகள் நிகழ்த்திய  லேடிஸ்விங்க்ஸ் குழுமத்தினருக்கும், பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தும் சிறகுகள் பதிப்பகத்தினருக்கும், பின்னணியில் இதற்கென உழைத்த முகமறியா தோழிகள்  அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றிகள்!   

Saturday, November 12, 2016

நாசி சூழ் உலகு


கடைக்குள் நுழைந்த அறிவு மீண்டும் ஒருமுறை தன் சட்டையையும் பேண்ட்டையும் குனிந்து பார்த்துக் கொண்டான். இருப்பதிலேயே நல்ல உருப்படி, நேற்றிரவே மடித்து தலையணைக்கடியில் வைத்தெடுத்ததால் அந்த இளபச்சை சட்டையும் க்ரேநிற பேண்ட்டும் படிமானமாக தனக்கு பொருந்தியிருப்பதாகத்தான் தோன்றியது. முடியை கோதிக்கொண்டு எதிரிலிருந்த கண்ணாடியில் தன்னுருவத்தை மீண்டுமொருமுறை பார்த்தவன், திருப்தியுடன் கைமடிப்பை சரி செய்து கொண்டான்.

Tuesday, November 1, 2016

அப்பாவின் நிழல்

குளியலறையின் கதவை திறந்து நான் வெளியே வந்த நொடி, நானாவித நறுமணங்களும் என் நாசியை சூழ்ந்துக்கொண்டன. நெய்யில் முந்திரி திராட்சை வறுபடும் மணமும், முருங்கைக்காய் சாம்பாரின் வாசமும், ஏதோ ஒரு காய் எண்ணைய்சட்டியில் ரோஸ்டாகும் காந்தல்மணமும்....

மூக்கை இழுத்து அவற்றை அனுபவித்துக்கொண்டே மீனு எல்லாம் ரெடி ஆயிடுச்சா...? நேரம் ஆகிட்டே இருக்கு...பாரு” கேசத்திலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருக்க, தலையையும் முகத்தையும் துடைத்தபடி சமையலறை வாசலில் வந்து நின்று குரல் கொடுத்தேன்.

Wednesday, October 12, 2016

ஏணிப்படிகள்

பால்யம் என்பதே தீரா சுவை கொண்ட பருவம் அல்லவா!? வாயில் அடக்கிக் கொண்ட தின்பண்டம் மெல்ல மெல்ல கரைந்து ருசி கொடுப்பது போல, அந்த பிராயத்தின் நினைவுகளை அசை போடும்போதெல்லாம் நம் அகமும் முகமும் சொல்லாமலேயே மலர்ந்து போகும். 

பள்ளி கல்லூரி காலங்களில் நம் ஒவ்வொருவருக்கும் எத்தனை வித விதமான சந்தோசங்கள், இன்ப நினைவுகள், அனுபவங்கள், படிப்பினைகள்...? ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிச்சயம் வண்ணம் சேர்த்த பருவம் இந்த பருவம். படிப்பு ஒன்றே கடமையாய், பரீட்சைகளே சுமையாய் இருந்த காலம் அது. இப்போது தூசி போல தோன்றும் விஷயம் எல்லாம் அப்போது பெருமலையாக அச்சுறுத்தின. அன்று அல்பத்தனமாக செய்தது எல்லாம் இப்போது திரும்பிப் பார்க்கும்போது அழகியலாக காட்சியளிக்கிறது.  இது தான் வாழ்க்கையினுடைய நகைமுரணும் அல்லவா...!?

Monday, September 12, 2016

அவள் - சிறுகதை


வணக்கம்,

எப்படி இருக்கீங்க? பெயர் தெரியாத மின்முகவரியிலிருந்து வந்திருக்கிற இந்த மடலை பார்த்து விழிக்கிறீங்களா? என் பேரு முக்கியம் இல்லீங்க. நான் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் கொஞ்சம் கேளுங்க,ப்ளீஸ்! 

இது எனக்கு ரொம்பவே நெருக்கமான ஒரு பொண்ணைப் பத்தின கதை தான்.