"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Wednesday, May 15, 2019

சோறு


சமீபத்தில் உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்தோம். உள்ளே நுழையும்போதே எண்ணற்ற ஒளி விளக்குகள் ஜொலிக்க, தேவலோகம் போல மிளிர்ந்தது திருமண மண்டபம். வாசலிலேயே இரு வீட்டு பெற்றோர்களும் நின்று இருகரம் கூப்பி விருந்தினர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்று உபசரிக்கும் காலமெல்லாம் மலையேறிப் போயிருக்க, ஈவன்ட் மேனேஜ்மென்ட்டின் ஒரே மாதிரி சீருடை அணிந்த பெண்கள் செதுக்கி வைத்த புன்னகையுடன் பன்னீர் தெளித்து வரவேற்றார்கள்.

Saturday, October 27, 2018

ஈரம் - சிறுகதைத் தொகுப்பு

நண்பர்களுக்கு,

அமேசான் கிண்டலில் ஈரம் சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பல்வேறு இதழ்கள், வலைப்பூக்கள், மின்னிதழ்களில் வெளிவந்த/பரிசு பெற்ற சிறுகதைகள் மற்றும் சில கட்டுரைகள் ஒருங்கிணைக்கப்பட்டு இவ்விடம் மின்னூலாக வெளியிடப்பட்டுள்ளது.

Monday, May 28, 2018

சோறு

செந்தூரம் வைகாசி இதழில் இடம்பெற்ற உணவு பற்றிய கட்டுரையை கீழே இணைத்துள்ளேன். செந்தூரம் இதழில் இடம்பெற்ற சுட்டி இங்கே : சோறு

Monday, September 26, 2016

எது ஆண்மை ?


அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

நா. முத்துக்குமாரின் இவ்வைர வரிகளை உணர்ந்து, அனுபவித்து, நெக்குருகி, மனம் நிறைந்து போகாத மனிதர்கள் யாரும் இருக்கமுடியாது.

Monday, August 29, 2016

வாய்ப்பூட்டு

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - சமயங்களில் இந்த வார்த்தைகள் பிரபல கதையின் பெயரையோ, சினிமாவையோ மட்டும் நமக்கு நினைவூட்டுவதில்லை. சக மனிதர்களிடமிருந்து சொல்லாலோ, செயலாலோ நாம் அடி வாங்கிக் கொள்கிற தருணங்களில், விரக்தியோடோ வெறுப்போடோ இவ்வார்த்தைகளை மௌனமாக உச்சரிக்காதவர்கள் வெகு குறைவு.