"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Thursday, August 20, 2026

‘கணம்’ சிறுகதைக்கான விமர்சனங்கள்

100 சிறுகதைகள், 100 எழுத்தாளர்கள், 1 வருடம் எனும் நிகழ்வுக்கான புலனக்குழுவில் ‘கணம்’ சிறுகதையைத் தேர்ந்தெடுத்து விமர்சித்திருந்தார்கள்.

குழுவில் பகிரப்பட்டு என்னை வந்தடைந்த விமர்சனங்களை இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.


ஏப்ரல் 2024ல் வாசகசாலையில் வெளிவந்த சிறுகதை இது. வாய்ப்புள்ளவர்கள் வாசித்துப் பாருங்கள்.

https://vasagasalai.com/kanangal-sirukathai-hema-jai-vasagasalai-93/

Thursday, January 8, 2026

2026 January Chennai Book Fair - My new books - 'Kadal Neelam' Novel and 'Kanangal' short stories collection

இந்த வருட புத்தக கண்காட்சிக்கு எனது இரண்டு புத்தகங்கள் வெளியாகின்றன. புத்தம் புதிய நாவல் ‘கடல் நீலம்’ மற்றும் 'கணங்கள்' சிறுகதைத் தொகுப்பு.


பிரியா நிலையத்தில் புது வரவான ‘கடல் நீலம்’ மற்றும் எனது அனைத்து நாவல்களும் கிடைக்கும். ‘கணங்கள்’ சிறுகதைத் தொகுப்பை புஸ்தகா வெளியிடுகிறது. பதிப்பாளர்களுக்கு என் நன்றிகள்.

2024ல் வெளியான 'சிற்றெறும்புகளின் காலம்' சிறுகதைத் தொகுப்பு புலம் பதிப்பகத்தில் கிடைக்கும்.

வாசகர்கள் எனது புத்தகங்களை வாங்கி வாசித்து உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்துங்கள். நன்றி உங்கள் அனைவருக்கும்!











Tuesday, November 5, 2024

சில வாசகர் கடிதங்கள்

மூத்த வாசகி ஒருவர் சமீபத்தில் அனுப்பியிருந்த மின்னஞ்சலை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி! இதன் வாயிலாக நினைவுக்குறிப்புகளிலும் சேகரித்து வைத்துக் கொள்கிறேன் :) 

எழுத்து வழியாகக் கிடைக்கும் பெருவெளியின் சுதந்திரம் தாண்டி எழுதுவதின் பயன், மகிழ்வு, நிறைவு என அனைத்தும் வாசகர்கள் வாசித்து இவ்விதம் அளிக்கும் மறுமொழிகளில் தான் உறைந்துள்ளன. முதிர்ந்து அனுபவம் மிக்கவர்களின் ஆசிகள் நற்பேறு! 


மகிழ்ச்சியும் அன்பும் ஆழ்ந்த நன்றிகளும் அம்மா!


One more letter from a Young reader. Thank you Thambi :) 


Feedback received for Poonai manidhargal short story - 











பூனை மனிதர்கள்’ சிறுகதைக்கு திரு. அ. ராமசாமி அவர்களின் விமர்சனப்பார்வை

அந்திமழை இதழில் வெளிவந்த ‘பூனை மனிதர்கள்’ சிறுகதைக்கு திரு. அ. ராமசாமி அவர்களின் விமர்சனப்பார்வையை இங்கு பகிர்வதில் மகிழ்கிறேன்.

பூனைகள் -யானைகள் -நாய்கள்

இம்மாத அந்திமழையில் "பூனை மனிதர்கள்" என்றொரு சிறுகதை அச்சிடப்பட்டுள்ளது. அதனை எழுதியவர் ஹேமா ஜெய். இந்தப் பெயர் கொண்ட எழுத்தாளரின் எந்தப் பனுவலையும் இதற்கு முன் வாசித்ததில்லை. அவர் எழுதி நான் வாசிக்கும் முதல் கதை இதுதான்.
மனிதர்களின் வளர்ப்பு மிருகங்களில் நாய்களுக்கும் பூனைகளுக்கும் கடும்போட்டி உண்டு. நண்பர்கள் தெரிந்தவர்கள் எனப் பலரது வீடுகளுக்குப் போகும்போது நாய்கள் வளர்ப்பது பற்றிய பேச்சுகள் இருப்பவர்கள், பூனைகள் வளர்ப்பது பற்றிப் பேசுவதில்லை என்பதைக் கவனித்திருக்கிறேன். இதன் மறுதலையாகப் பூனைகள் வளர்ப்பவர்கள், நாய்களின் மீதான பிரியத்தைக் காட்டுவதையும் பார்த்ததில்லை. நாய்ப்பிரியர்களும் பூனைப்பிரியர்களும் எதிரெதிராய் நிற்பவர்களாகவே தோன்றுகிறது. ஆனால் கதைகளுக்குள் இப்படியான எதிரெதிர் நிலைபாடுகளை எழுதிக்காட்டிய பனுவல்கள் வாசிக்கக் கிடைக்கவில்லை. பூனை வளர்ப்பவர்களின் பிரியங்களும், நாய் வளர்ப்பவர்களின் நேசமனநிலைகளிலும் தனித்தனியாகவே தான் வாசிக்கக் கிடைக்கின்றன. நேரனுபவத்திலும் புனைகதைகளுக்குள்ளும் பூனையின் மீது காதல் கொண்டவர்கள் அதிகமும் பெண்களாக இருப்பதையும் நாய்களின் நேசர்களில் ஆண்களாக இருப்பதையும் வாசிக்க முடிகிறது.
ஹேமா ஜெய்யின் கதையில் பூனைமீது காதல் கொண்டவர் ஆண். நாய்களின் மீது பிரியங்கொண்டவர் பெண். காதலுக்கும் பிரியத்துக்கும் வேறுபாடு உண்டுதானே? கதையில் வரும் ஈஸ்வரி (மனைவி)க்கு நாய்கள் மீது விருப்பம் என்றால், சிவம் (கணவன்) பூனையின் பக்கம் நிற்பவன். சிவத்திற்கு ராணி என்ற பூனையின் மீது இருப்பது பிரியமல்ல; காதல். காதலுக்கும் மேலாக ராணியின் அடிமையாக இருப்பவன் என்பதுபோல மனைவியின் பார்வைக்கோணத்தில் கதையைச் சொல்லும் கதாசிரியர் எழுதிக்காட்டுகிறார். அந்த எழுத்து, மனிதர்களின் இயல்புகள் சிலவற்றைப் பூனையின் மீது ஏற்றி, பூனையை மனிதர்களின் உருவகமாக மாற்றிக் கட்டமைக்கிறார்.
கணவன் சிவம், தன் மீது காட்டும் காதலை- பிரியங்களைப் புரிந்துகொண்டு பூனை, அவனது மனைவியான ஈஸ்வரியைப் பொருட்படுத்துவதில்லை என்பதைக் கதையின் ஆரம்ப நிகழ்வில் எழுதிக்காட்டிவிட்டு, கதையைக் குடும்பத்து உறவுகளின் மனநிலைக்குள் நகர்த்தியிருக்கும் இந்த உத்தி கவனிக்கத்தக்க உத்தி.
நிலவுடைமைச்சாதிகளின் குடும்பங்களில் நடக்கும் சொத்துப்பிரிப்புக் கோபதாபங்களை அனுபவங்களைக் கொண்டு எழுதிய வெளிப்பாடாக இருக்கிறது.
இந்தக்கதையைப் படித்தபோதுக் கடந்தமாத உயிர்மையில் (செப்டம்பர், 2024) பெருமாள் முருகன் எழுதிய செம்மி என்ற சிறுகதையும் சரவணன் சந்திரன் எழுதிய ஓங்கல் என்ற சிறுகதையும் நினைவுக்கு வருகின்றன. அந்தக் கதைகளில் இருவருமே விலங்குகளின் குணங்களை ஏற்றுக்கொண்டு அவற்றைக் கதாபாத்திரங்களாக்கியிருக்கிறார்கள். ஓங்கல் என்பது யானை; செம்மி என்பது நாய்.
யானை எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ளும்; தனக்கு நேர்ந்த துன்பத்திற்குப் பழிவாங்கவும், உதவிக்கு மறு உதவி செய்யவும் நேரம் பார்த்துக்கொண்டிருக்கும். அதற்குப் பொருத்தமான நேரம் வரும்போது திருப்பிச் செய்துவிடும் என்பது இங்கே இருக்கும் பொதுப்புத்தி சார்ந்த கருத்து அல்லது நம்பிக்கை. அதேபோல் நாய்களின் பொதுக்குணம் நன்றியுடையது. தனது எஜமானர்களிடம் மிகுந்த நன்றியோடு நடந்துகொள்ளும்; பாதுகாக்கும். எந்தத் தருணத்திலும் அவர்களை விட்டுக்கொடுக்காதவை நாய்கள் என்பதும் நாய்கள் சார்ந்த பொதுப்புத்திக் கருத்து; நம்பிக்கை. இவ்விரு பொதுப்புத்தி சார்ந்த கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொண்டு கதைகளை எழுதியிருக்கிறார்கள்.
தனது கதைகளைப் பெரும்பாலும் சொல்லும் முறையிலேயே எழுதிவரும் சரவணனின் கதை, பின்னோக்கியும் முன்னோக்கியும் நகரும் உத்திகளோடு இருந்தாலும் கதையின் நிகழ்வுகளைப் பரப்பிக்காட்டும் தன்மை இல்லாததால், கதையின் சொல்லியாக இருக்கும் அந்தப் பாத்திரத்தின் நம்பிக்கையாகவே கதை அமைந்துள்ளது. அந்தப் பாத்திரத்தின் நம்பிக்கை என்பது யானைகளைப் பற்றிய பொதுப்புத்தியை ஏற்றுக்கொண்ட வெளிப்பாடாக இருக்கிறது. இது நவீன மனத்தின் இருப்பாக இல்லை.
பெருமாள் முருகனின் கதை, சின்னச்சின்ன நிகழ்வுகளைப் பரப்பி வைத்துள்ள கதையாக வடிவம் கொண்டுள்ளது. கதாபாத்திரங்களுக்குப் பெயரிடுதல் தொடங்கி, அவற்றைப் பற்றிய குணாம்சங்களைப் பற்றிய விவரிப்புகள் வரைத் தொடர்ந்து எழுதிய அனுபவத்தின் வெளிப்பாட்டைக் கதை சொல்லலில் வாசிக்க முடிகிறது.பூனையிடம் அன்பு காட்டிய மஞ்சுவுக்கு நாயின் மீது ஈடுபாடும் தேவையும் ஏற்பட்டதை விவரிப்பதோடு, அற்பனார் என்ற பட்டப்பெயரிட்டு அழைக்கப்படும் பாத்திரத்தின் வக்கிரப் பார்வையை விவரிப்பதில் கதைக்கான முரணை உருவாக்கித் தந்துள்ளார். அந்த வக்கிரப்பார்வையிலிருக்கும் அற்பனாரிடமிருந்து காப்பாற்றும் துணையாக செம்மி என்ற நாய் இருப்பதைக் கதை விவரிக்கிறது. இங்கும் நாய்கள் பற்றிய பொதுப்புத்தி மனநிலை மீது கதாசிரியருக்குக் கேள்விகள் இல்லை.
ஒரு நவீனத்துவ மனநிலை என்பது மனிதர்களின் நடத்தைகள் குறித்தே அவநம்பிக்கைகளைக் கொண்டதாக இருக்கிறது. எல்லாவற்றையும் அப்படியே ஏற்று வெளிப்படுத்துவதைத் தாண்டிக் கேள்விகளையும் ஐயங்களையும் பின்னணிக் காரணங்களையும் தேடுவதாகவும், தேடி விவாதப்படுத்துவதாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அதன் வழியாகவே நவீன கதைகளின் அடுக்குகள் உருவாக்கப்படுகின்றன. அப்படியான அடுக்குகளை உருவாக்காமல் எளிமையான நேர்கோட்டில் கதைகளை எழுதியுள்ளனர்.
இம்மூன்று கதைகளையும் ஒருசேரத் திரும்ப நினைக்கும்போது ஹேமா ஜெய்யின் பூனை மனிதர்கள் நவீன மனநிலையின் அடுக்குகளோடு எழுதப்பெற்ற கதையாக இருக்கிறது. புது எழுத்தாளராக இல்லாமல் எழுதிப்பழகிய கையாக வெளிப்பட்டுள்ளார் எனச் சொல்லத்தோன்றுகிறது.


-----------------------------------

அடி பெண்ணே! - Kindle Release

 ஹாய் டியர்ஸ்,

வாசகர்கள் நீங்கள் வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘அடி பெண்ணே!’ இப்போது கிண்டிலில் பதிவேற்றப்பட்டுள்ளது. நிறைய நட்புகள் கிண்டலில் பதிவேற்றம் செய்வது குறித்து நினைவூட்டிக் கொண்டே இருந்தீர்கள். நன்றிப்பா. இல்லை இன்னும் நாள் எடுத்திருப்பேன்.



வாசித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் நன்றி!

Tuesday, August 6, 2024

I15 பனியுதிர்காலம் இப்போது கிண்டிலில்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,

I15 பனியுதிர்காலம் இப்போது கிண்டிலில். 03 ஜூலை 2024 கண்மணியில் வெளிவந்த நாவல் இது. குறுநாவல் பாணியில் விரைவில் வாசித்து விடலாம். வாசகர்கள் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். நன்றி!


அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேருந்து ஒன்றில் தொடங்கும் இக்கதை இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் நடப்பது. எதிர்பாராத ரீதியில் ஒரு இரவையும் பகலையும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளும் இளைஞனும் யுவதியும் தத்தம் வாழ்க்கையை ஒருவருக்கொருவர் மெல்ல அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். சுவாரஸ்யமான அவர்களின் மறுபக்கம் வெளியே வெளிச்சமெனத் தெரியும் அமெரிக்க வாழ்க்கையின் இருண்ட மூலைகளையும் தொட்டுச் செல்ல முனைகிறது. அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களை இணைத்துச் செல்லும் நெடுஞ்சாலை I15 தான் கதையின் களம். பனியுதிர்காலத்தில் நாமும் இவர்களுடன் இணைந்து கொள்வோமா? வாருங்கள். பயணிப்போம்.


https://www.amazon.in/dp/B0DCBPWS9P


https://www.amazon.com/dp/B0DCBPWS9P


Thursday, June 27, 2024

பனியுதிர்காலம் - கண்மணி நாவல்

ஹாய் மக்களே, இந்த வார கண்மணியில் எனது நாவல் 'பனியுதிர்காலம்' வெளி வந்துள்ளது.






அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேருந்து ஒன்றில் தொடங்கும் இக்கதை இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் நடப்பது. எதிர்பாராத ரீதியில் ஒரு இரவையும் பகலையும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளும் இளைஞனும் யுவதியும் தத்தம் வாழ்க்கையை ஒருவருக்கொருவர் மெல்ல அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். சுவாரஸ்யமான அவர்களின் மறுபக்கம் வெளியே வெளிச்சமெனத் தெரியும் அமெரிக்க வாழ்க்கையின் இருண்ட மூலைகளையும் தொட்டுச் செல்ல முனைகிறது. அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களை இணைத்துச் செல்லும் நெடுஞ்சாலை I15 தான் கதையின் களம். பனியுதிர்காலத்தில் நிகழும் இக்கதைக்கு நான் வைத்த பெயர் 'I15 - பனியுதிர்காலம்' 🙂

குறுநாவல் பாணியில் விரைவில் வாசித்து விடலாம். வாய்ப்புள்ளவர்கள் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். புத்தக அட்டையை இன்று காலை பாரதி பகிர்ந்தபோது அடைந்த மகிழ்வு வாசகர்கள் நீங்கள் வாசித்து சொல்லும்போது இரட்டிப்பாகும். 🙂 🙂 நன்றி! நன்றி!