இந்த நூல் வெளியான நாளில் இருந்தே மிக ஆவலாக காத்துக் கொண்டிருந்தது, இப்போது மின்னூலாக வாசிக்க இயன்றது எனக்கு அமைந்த பாக்கியம் என்றே கருதுகிறேன். எழுத்தாளர் திருமதி. சிவசங்கரி தன்னுடைய நினைவலைகளை "சூரிய வம்சம்" என்கிற இரு தொகுதிகளாக பதிவு செய்திருக்கிறார்.
"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)
Showing posts with label பதிவுகள்/பகிர்வுகள். Show all posts
Showing posts with label பதிவுகள்/பகிர்வுகள். Show all posts
Wednesday, August 26, 2020
Wednesday, August 19, 2020
எழுத்து என்ன தரும்?
சில சமயம், 'எதற்காக எழுதுகிறாய்?' என்று என்னைத் தெரிந்த சில நட்புகளும், உறவுகளும் கேட்பதுண்டு. சிலர் அக்கறையுடனும், சிலர் ஆர்வத்துடனும், 'வேலை வெட்டியை கவனிக்காம இது ஏதோ செய்து கொண்டிருக்கிறதே!?' என்கிற என் மேலான உண்மையான அன்பு கொண்டும், 'இவளுக்கு வேற வேலை இல்ல...' என்று கிண்டலாகவும் விதவிதமான தொனிகளில் இந்தக் கேள்வியை எதிர்கொண்டது/ள்வது உண்டு.
Sunday, June 28, 2020
மனமது நலமாக...
சும்மா இருந்து இருந்தே டயர்ட் ஆகி, மீண்டும் சும்மா இருந்து, இன்னும் டயர்ட் ஆகி என பழகப்பழக பாலும் புளிக்கும் என்கிற மாதிரி கடந்து கொண்டிருக்கின்றன நாட்கள். 'ஹை ஜாலி.. ஸ்கூல் இல்ல...' என்று ஓடி வந்த பிரீ-ஸ்கூல் பிள்ளை கூட 'என்னடா வாழ்க்கை இது? போரடிக்கிறது' என்று கவிழ்ந்து படுத்துக்கொண்டு தத்துவம் பேச ஆரம்பித்திருக்கிறது.
Wednesday, June 24, 2020
ஒரு வாசகக் கடிதம்
சமீபத்தில் மின்னஞ்சல் வாயிலாக தோழி ஒருவர் அளவளாவினார். அவரது கடிதம் கண்டு நெகிழ்ந்து போனேன்.
ஏதேதோ
எண்ணங்களுடன் உறக்கம் வாய்த்திராத நள்ளிரவொன்றில் எங்கிருந்தோ ஒரு குரல் நமக்காக 'Praying God' என்று சொல்கிற
இந்த அன்பையும் தாண்டி வேறென்ன வேண்டும்!?
Monday, June 22, 2020
மன சோர்வுகள்
ஆரம்ப லாக்டவுன் அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்தில் ஒரு வித பதட்டம் இருந்தாலும் நிறைய நம்பிக்கை இருந்தது. உலகமே சேர்ந்து போராடுகிறது, இரு வாரங்களில் நிலைமை சீராகிவிடும். மிஞ்சினால் ஒரு மாதத்திற்குள் இயல்புநிலை திரும்பும், எப்படியும் மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் என்கிற எண்ணமே பலரிடமும் மிகுந்திருந்தது.
Sunday, April 14, 2019
அமிழ்தம் மின்னிதழ் - கேள்வி பதில்கள்
அமிழ்தம் தை மாத மின்னிதழில் வெளியான "ஒரே கேள்வி, வெவ்வேறு பதில்கள்" பகுதியில் இடம்பெற்ற எனது பதில்களுடன் கூடிய மின்னிதழின் திரைச்சொட்டுகள் கீழே.
இளம் எழுத்தாளரான என்னையும் கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பினை அளித்து கௌரவப்படுத்திய அமிழ்தம் மின்னிதழ் குழுமத்தினருக்கும், சகோதரி எழுத்தாளர் திருமதி. ஷெண்பா அவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்!
இளம் எழுத்தாளரான என்னையும் கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பினை அளித்து கௌரவப்படுத்திய அமிழ்தம் மின்னிதழ் குழுமத்தினருக்கும், சகோதரி எழுத்தாளர் திருமதி. ஷெண்பா அவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்!
குவிகம் சிறுகதை போட்டி
குவிகம் சிறுகதை போட்டியை செம்மையாக நடத்திய குவிகம் இலக்கிய வாசல் குழுமத்தினருக்கும், திரு. கிருபானந்தன் ஐயா அவர்களுக்கும், அன்பார்ந்த நடுவர் திருமதி. கிரிஜா ராகவன் அவர்களுக்கும், புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட இத்தலைமுறை பெண் எழுத்தாளர்களுக்கான ஆதர்ச முன்னோடியான திருமதி. வித்யா சுப்பிரமணியம் அவர்களுக்கும் என் வணக்கங்களும் நன்றிகளும்!
Monday, May 14, 2018
காதல்
மிகுந்த யோசனைக்குப் பிறகு இந்த பதிவை
இங்கு பதிவிடுகிறேன். அதீத புனிதமாக்கப்படும் எந்த விஷயமும் ஆபத்தானதே. அவரவர்
கருத்து, விருப்பம், சாதி, கடவுள்,
மதம் தொடங்கி நட்பு, காதல் வரை சகல
விஷயங்களுக்கும் இது பொருந்தும்.
Wednesday, February 14, 2018
உனக்கென்ன !!!?
“உனக்கென்ன !!!?” எள்ளலாக, புகைச்சலுடன் ஒலிக்கும் இந்த வார்த்தையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் சுறுசுறுவென்ற எரிச்சல் பற்றிக்கொண்டு வரும். வெறும் நிமிடக்கணக்கில், மணிக்கணக்கில் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அடுத்தவரின் வாழ்க்கையைப் பற்றி என்ன புரிதல் இருக்கும்? இதில் அர்த்தமில்லா அல்ப விஷயங்களுக்கெல்லாம் ஒப்பிட்டு அனல்மூச்சு விடுவது???!!!
Wednesday, December 6, 2017
சிங்கப்பூர் நூலகம்
எழுதி முடித்ததும் கதைகளை பதிப்பகத்திற்கு
அனுப்பி வைப்பதோடு நம் பணி முடிந்தது. பதிப்பிற்கு பிறகு புத்தகங்கள் எங்கு எங்கு அனுப்பப்படுகின்றன என்பது குறித்தோ, டிஸ்ட்ரிப்யுஷன் பின்னல்கள் பற்றியோ மேலதிக தகவல்கள் எதுவும் பொதுவாக தெரிவதில்லை.
Saturday, February 18, 2017
மனசாட்சி
இங்கே அரசியல் என்பது பெருத்த லாபம் கொழிக்கும் வியாபாரமாக மாறிப் போய் எத்தனையோ காலம் ஆகி விட்டது. தலைமைக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்து சீட் வாங்கி, பல லட்சங்களை தொகுதியில் வாரி இறைத்து ஜெயித்து வந்தவர்கள் எல்லாம் தம் முதலை காப்பாற்றிக் கொள்ள மெனக்கெடத் தான் செய்வார்கள். இருக்கிற ஐந்து ஆண்டுகளில் முடிந்த வரை தொற்றிக் கொண்டு எவ்வளவு தேத்த முடியுமோ அவ்வளவு தேத்தத் தான் முயற்சிப்பார்கள். அது காலில் விழுந்தோ, முதுகு வளைந்தோ, இன்னுமின்னும் காசு வாங்கிக் கொண்டோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
Sunday, January 22, 2017
ஜல்லிக்கட்டு
கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு மட்டும் அல்ல, தமிழ் உள்ளங்கள்
எங்கெல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ அங்கெல்லாம் தீப்பற்றிக் கொண்டதைப் போல மக்கள்
எழுச்சி. சிறு தீப்பொறியாக தோன்றிய நெருப்பு பெரும் உத்வேகமாக மாறி நம் எல்லோர்
மனதிலும் தூங்கிக் கொண்டிருந்த தமிழர் எனும் உணர்வை, அடங்கி கிடந்த அடிமை
எண்ணங்களை, தூங்கி வழியும் மந்தத்தனத்தை களைந்து வெள்ளமாக பீறிட்டு வெளியே வந்ததை
யாராலும் மறுக்க முடியாது. உண்மையில் சொல்கிறேன். இந்த போராட்டக் களம் மக்கள் களமாக
மாறி மெரினா தளும்பி நிறைந்ததை டிவியில் பார்க்கையில் உடலெல்லாம் சிலிர்த்து நின்றது.
உணர்ச்சி வேகத்தில் கண்கள் கலங்கிப் போயின. அதையெல்லாம் மீறி போராட்டக் களத்தில்
நாமும் சென்று நிற்க முடியவில்லையே என்ற சூழ்நிலை காரணமாக உள்ளூர உறுத்தலும் கூட.
நல்ல வேளை! வெள்ளியன்று இங்கு நிகழ்ந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றப்பிறகு
தான் அந்த குற்றவுணர்வு நீங்கியது. நிற்க! இது சொந்த பெருமை பேசும் பதிவல்ல.
Monday, January 2, 2017
பனி இரவும் தனி நிலவும்
அன்பு தோழமைகளுக்கு,
இந்த புதிய ஆண்டில் இனிய செய்தியாக என் மூன்றாவது நாவல் “பனி இரவும் தனி நிலவும்” புத்தகமாக மலர்ந்துள்ளது. நாவலை வெளியிட்ட பிரியா நிலையத்தினருக்கு நன்றிகள் பல! இந்த முயற்சியில் என்னுடன் துணை வந்த தோழிகள், சகோதரிகள், கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நட்புகள் என் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! Special Thanks to Manjula Senthil Kumar, Lady's Wings Group and LW Friends!
Thursday, September 15, 2016
பட்டாம்பூச்சி பற பற !
ஹாய் ஃப்ரண்ட்ஸ்,
எல்லோரும் எப்படி இருக்கீங்க.? நலம். நலமறிய ஆவல்.
ஒரு நல்ல செய்தி - என் இரண்டாவது நாவல் 'பட்டாம்பூச்சி பற பற !' பிரியா நிலையத்தினரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
எல்லோரும் எப்படி இருக்கீங்க.? நலம். நலமறிய ஆவல்.
ஒரு நல்ல செய்தி - என் இரண்டாவது நாவல் 'பட்டாம்பூச்சி பற பற !' பிரியா நிலையத்தினரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
Wednesday, August 24, 2016
குட்டீஸ் சுட்டீஸ்
நான் ரெகுலரா குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை பார்ப்பதுண்டு. மனசு சந்தோசமா இருந்தாலும் சரி, சோர்வாக இருந்தாலும், இல்ல என்ன பண்றதுன்னு புரியாம முழிச்சிக்கிட்டு உட்காரும்போதும் சரி, அந்த மாதிரி நேரங்களில் பெரும்பாலும் என்னோட சாய்ஸ் இந்த நிகழ்ச்சியோட பழைய பதிவுகளை எடுத்துப் பார்ப்பது தான். என் பசங்களுக்கும் இந்த நிகழ்ச்சி பிடிக்கும் என்பதால் அவர்களும் முனகாமல் டிவியை கொஞ்ச நேரம் எனக்கு விட்டுத் தருவாங்க.
Monday, August 22, 2016
ஹலோ நண்பர்களே,
இந்த வலைப்பதிவு உங்களை இனிதே வரவேற்கிறது. தமிழில் நிறைய எழுத வேண்டும் என்ற ஆசையில் துவங்கப்பட்ட முயற்சி இது. நிறைய கதைகள் வாசிச்சு, ஆன்லைனில் கிடைக்கும் புத்தகங்கள் படித்து, கண்ணுல படுற பொட்டலம் கட்டிக் கொடுக்குற பேப்பரைக் கூட விடாம படிச்சு, நாமும் எழுதலாமே, எழுதித்தான் பார்க்கலாமே என்ற விபரீத ஆசையில் நானும் கதைகள் எழுத ஆரம்பிச்சிருக்கேன்.
Subscribe to:
Posts (Atom)
-
மார்ச்' 30 வார கண்மணியில் எனது நாவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'தூரங்கள் நகர்கின்றன' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியாகி உள்ளது.
-
வணக்கம், எல்லோரும் எப்படி இருக்கீங்க? நான் இந்த பக்கம் வந்தே ரொம்ப நாட்கள் ஆகி விட்டன. வேலைகள் நெருக்குவதால் தெரிந்தோ, தெரியாமலோ பெரிய இட...