"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Wednesday, December 6, 2017

சிங்கப்பூர் நூலகம்

எழுதி முடித்ததும் கதைகளை பதிப்பகத்திற்கு அனுப்பி வைப்பதோடு நம் பணி முடிந்தது. பதிப்பிற்கு பிறகு புத்தகங்கள் எங்கு எங்கு அனுப்பப்படுகின்றன என்பது குறித்தோ, டிஸ்ட்ரிப்யுஷன் பின்னல்கள் பற்றியோ மேலதிக தகவல்கள் எதுவும் பொதுவாக தெரிவதில்லை.

போன வாரத்தில் தோழி ஒருவர் 'பனி இரவும் தனி நிலவும்'  நாவல் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் இருப்பதாகக் கூறி புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். ‘அட’ என்று ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

எந்த இடம் என்று வினவியதில் நூலகக் கிளையின் பெயர் Tampines Regional Library என்று சொன்னார். மற்ற இரு புத்தகங்கள் கூட அங்கு இருக்கின்றனவா என்று கேட்க நினைத்து, ரொம்ப துளைக்க வேண்டாம் என்ற கூச்சத்தில் விட்டு விட்டேன்.

இரண்டு நாட்கள் கழித்து கூகுளில் நோண்டியதில் மூன்று நாவல்களும் அங்கு இடம் பெற்றிருப்பது தெரிந்தது. மேலும் இதுவரை அறியாத நிறைய தகவல்கள் வந்து விழுந்தன. எண்ணற்ற தமிழ் புத்தகங்களின் இருப்பும், நூல்களின் உள் வெளி விபரங்கள் உட்பட அனைத்து கிளைகளின் தகவல்களையும் ஆன்லைனில் பராமரிக்கிறார்கள். புத்தகத்தின் அளவு, பக்கங்கள், பதிப்பகம் குறித்த விவரங்கள், அது போலவே தமிழ் சினிமா டிவிடி பற்றிய குறிப்புகள் என அனைத்தும் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

உண்மையில் இணையமும், தகவல் தொடர்பும் இந்த யுகத்தின் வரங்கள் என்று சொன்னால் மிகையில்லை. இருக்கும் இடத்தில் இருந்தபடி நண்பர்கள் மூலம் எத்தனை விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது!? ‘சிங்கப்பூர் நேஷனல் லைப்ரரி போர்ட்’ என்ற பெயர் கூட இதற்கு முன்பு எனக்குத் தெரியாது. இதனை சாத்தியப்படுத்தி இருக்கும் பிரியா நிலையத்தினருக்கு தான் முதலில் நன்றி சொல்லவேண்டும். 

எனக்கு இணையான மகிழ்ச்சியுடன் இந்த தகவலை பகிர்ந்து கொண்ட தோழி அலமு மற்றும் அவரது சகோதரிக்கு என் அன்பான நன்றிகள்! இது போல வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் நம் புத்தகம் கிடைக்கிறது என்பது தெரிய வருகையில் ஒரு கதவு திறந்து போன்ற சந்தோஷம்! 

நினைவுக் குறிப்புகளாக சில புகைப்படங்கள் கீழே :

http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/REFSET/EXPNOS/BIBENQ/3921577?REFINE_OPER=&QRY=AU%3A%20%27.%20HEMA%20.%27&SQL=&QRYTEXT=Creator%3A%20He%CC%84ma%CC%84








1 comment:

Anonymous said...

Wow!!!....superb...