"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Showing posts with label ebook release. Show all posts
Showing posts with label ebook release. Show all posts

Friday, April 19, 2024

அன்பான அதிதிக்கு | Anbana Adhithikku - Kindle Publication

ஹாய்,

உங்கள் பெரும் அன்பையும் வரவேற்பையும் பெற்ற 'அன்பான அதிதிக்கு' இப்போது கிண்டிலில். நண்பர்கள் வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி !


நாவலின் முன்னுரையில் இருந்து -
‘அன்பான அதிதிக்கு’ வாயிலாக நீங்கள் சந்திக்க இருக்கும் ஆதனும் அதிதியும் எதிரெதிர் துருவங்களில் நின்றிருப்பவர்கள். ஆதன் இன்றைய போட்டி யுகத்தின் பிரதிபலிப்பு எனில் அதிதி அன்பின் சங்கமம்.
சிலநேரம் வேகத்தடைகள் தான் வாழ்வின் பொருளை உணர்த்துகின்றன, அல்லவா!? வெற்றி மனிதனுக்கு அங்கீகாரம் தந்து அவனுடைய செயல் வல்லமை குறித்து அவனுக்கே நம்பிக்கை அளிக்கிறது என்றால் சரிவு அவனுடைய கால்கள் தரையில் தான் ஊன்றியுள்ளனவா என்று பரிசோதிக்கின்றன.
---
அன்புடன்,
ஹேமா ஜெய்
No photo description available.

All reaction

Sunday, November 21, 2021

மனங்கொத்திப் பறவை

அனைவருக்கும் வணக்கம்!

‘மனங்கொத்திப் பறவை ’ - புதிய நாவல் இப்போது கிண்டிலில். 
 
தன் வேட்கைகளுக்கும் குடும்ப கடமைகளுக்கும் இடையே எதற்கு முன்னுரிமையளிப்பது என்று புரியாமல் அல்லாடும் எண்ணற்ற பெண்களில் ஒருத்தி தான் இந்நாவலின் நாயகியான கயலும். அவளது தேடலுக்கும் மகிழ்ச்சிக்கும் இடையே நழுவி செல்லும் வாழ்க்கையைப் பறவை பார்வையாக நோக்கும் சிறு அனுபவமே ‘மனங்கொத்திப் பறவை’யாக இருக்கும். இந்நாவலை வாசித்து உங்களது மேலான விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

Monday, May 31, 2021

நினைவெல்லாம் செண்பகப்பூ

அனைவருக்கும் வணக்கம்! 

'நினைவெல்லாம் செண்பகப்பூ’ - புதிய நாவல் இப்போது கிண்டிலில். அதிகம் பேசா பொருளைப் பேசவிருக்கும் கதை கரு இது. வாசித்து உங்களது மேலான விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

நன்றிகளுடன்!
ஹேமா ஜெய்
https://www.amazon.in/dp/B095NBLSKV

Sunday, April 25, 2021

தூரங்கள் நகர்கின்றன - கிண்டிலில்

அனைவருக்கும் வணக்கம்,

தூரங்கள் நகர்கின்றன - புதிய நாவல் இப்போது கிண்டிலில். 
 
கண்மணியில் வெளியான நாவல் இது. வாசித்து விட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே. நன்றி!

Wednesday, October 30, 2019

பூக்கள் விற்பனைக்கல்ல

வணக்கம், நண்பர்களுடன் இந்த இனிய செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். எமது புத்தம் புதிய நாவல் ஒன்று அமேசான் கிண்டிலில் இன்று வெளியாகிறது. பூக்கள் விற்பனைக்கல்ல - மருத்துவப் பின்னணி கொண்ட சுவையான நாவல். வித்தியாசமான கதைக்களன், என்னளவில் சவாலான முயற்சியும்கூட.