"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Wednesday, October 30, 2019

பூக்கள் விற்பனைக்கல்ல

வணக்கம், நண்பர்களுடன் இந்த இனிய செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். எமது புத்தம் புதிய நாவல் ஒன்று அமேசான் கிண்டிலில் இன்று வெளியாகிறது. பூக்கள் விற்பனைக்கல்ல - மருத்துவப் பின்னணி கொண்ட சுவையான நாவல். வித்தியாசமான கதைக்களன், என்னளவில் சவாலான முயற்சியும்கூட.
இந்நாவல் குறித்து மேலும் நான் சொல்வதைவிட வாசித்து நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதிலே மிகுந்த ஆவல் கொண்டுள்ளேன். வாசித்து தவறாமல் உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை (Ratings & Reviews) அமேசான்.இன்(amazon.in) தளத்தில் பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறேன். இக்கதைக்கரு உங்களுக்குப்பிடித்திருந்தால் வாசிப்புச்சுவை விரும்பும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துரையுங்கள். உங்கள் ஆதரவும், விமர்சனங்களுமே எழுதவேண்டும் என்கிற ஆவலைத் தரும் கிரியாஊக்கிகள். இந்த முயற்சியிலும் உங்கள் அன்பும் ஆதரவும் தொடரும் என்ற நம்பிக்கையுடன்.

புத்தகம் ஆரம்பச்சலுகை விலையாக ரூ. 99/- மட்டுமே.

#PenToPublish2019 https://www.amazon.in/dp/B07ZS7NX7N/ref=sr_1_10?keywords=hema+jay&qid=1572493156&sr=8-10




No comments: