"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Showing posts with label போட்டி. ஹேமா ஜெய். Show all posts
Showing posts with label போட்டி. ஹேமா ஜெய். Show all posts

Monday, January 20, 2020

பூக்கள் விற்பனைக்கல்ல - விமர்சனங்கள் (5)

Very very constructive review from the author of 'யூனிட் 109', 'அன்று வந்ததும் அதே நிலா', 'கடாரம்' - எழுத்தாளர் மாயா.

டிசம்பர் முதல் தேதியில் அவர் பகிர்ந்த விமர்சனத்தை இப்போது எடுத்துப் போடுவதெல்லாம் - என்னுடைய டக்-ஐ நினைத்தால் எனக்கே கண்ணு வேர்க்குது. ஒவ்வொருமுறை நினைவு வரும்போதும் மொபைலில் குழுமத்திற்குள் தேடி காபி செய்ய முயன்று.... பப்பரக்கா என swipe செய்யும் என் திறமையால் எங்கெங்கோ போகஸ் நழுவி ஓடி... மடிக்கணினியில் காபி செய்து சேகரித்து கொள்ள வேண்டும் என்ற நினைவுடனே... Better late than never- ஆக இன்று என் டைம்லைனில் பத்திரம் செய்து விட்டேன். Many many thanks for your read and the valuable feedback Malar ! Malarvizhi Baskaran 🙏🙏

பூக்கள் விற்பனைக்கல்ல - விமர்சனங்கள் (4)

பூக்கள் விற்பனைக்கல்ல - எழுத்தாளர் தோழி ஆர்த்தியின் பார்வையில். ஆர்த்தி குறிப்பிட்டு இருப்பது போல செயற்கை முறைகள் மனதிற்கு சங்கடம் தருபவை தான், எனினும் இன்று பல குடும்பங்களுக்கு பல தாய்மார்களுக்கு வரமாக உள்ளதை நாம் மறுக்க முடியாது. ஆழ்ந்த வாசிப்பும் தீர்க்கமான விமர்சனமும். - இவருடைய விமர்சனம் பொங்கல் அன்று கிடைக்க எனக்குக் கிடைத்த பொங்கல் பரிசாகவே நினைத்துக் கொண்டேன் - மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் ஆர்த்தி. With Budding Novels AR

Wednesday, January 1, 2020

ஆயிரம் ஜன்னல் மனசு - விமர்சனங்கள்

‘ஆயிரம் ஜன்னல் மனசு’ நாவலுக்கான விமர்சனங்களின் தொகுப்பு இது. நாவல் குறித்த தத்தம் பார்வைகளைப் பகிர்ந்து, குறை நிறைகளைச் சுட்டி உதவும் சக எழுத்தாளர் மற்றும் வாசக நண்பர்களுக்கு என்றென்றும் நன்றிகளுடன்! கதைக்கான விமர்சனங்களை இப்படி தொகுத்து வைப்பது நரையெய்தி கிழப்பருவம் ஏகும் ஓர் நாளில் புன்னகையுடன் புரட்டிப் பார்ப்பதற்காகவே. 'இப்பயே நரை வந்துடுச்சே'ங்கிற உண்மையைச் சொல்லி யாரும் என் சின்ன இதயத்தை பழுதாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு...

Sunday, September 15, 2019

ஆயிரம் ஜன்னல் மனசு & காதல் கஃபே

ஹாய் மக்களே!

எல்லோரும் எப்படி இருக்கீங்க? Hope everyone is doing well and everything is going on good. அவ்வப்போது எட்டிப் பார்ப்பதாலும், அடிக்கடி காணாமல் போவதாலும் என் பெயர் உங்கள் நினைவடுக்குகளில் இருந்து சற்றே அவுட் ஆப் போகஸ் ஆகியிருக்கலாம். சில பல அலைச்சல்களில் நான் முகநூல் வருவதே மிகவும் குறைந்து விட்டது. அன்றாட வேலைகளிலே கவனம் செல்வதில் எழுத்து வேலைகளிலும் சிறு தேக்கம். நினைப்பதை தாமதமின்றி பதிய என ஆரம்பித்த வலைப்பதிவிலும் பதிவுகள் இட்டு வெகு நாட்களாகின்றன. கொஞ்சம் ஒழுங்குப்படுத்திக் கொண்டு அவ்வப்போதேனும் சில பதிவுகள் எழுத வேண்டும் என நினைக்கிறேன். Though I procrastinate  it everyday, hope I could streamline slowly and with no doubt I trust you guys will understand this gap.
BTW, “ஆயிரம் ஜன்னல் மனசு” என்னும் புத்தம் புதிய நாவல் புத்தகமாக வெளிவந்துள்ளது. Thanks to the Almighty for this moment! 

Wednesday, May 15, 2019

காக்கை குருவி எங்கள் ஜாதி


ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரம் கழிந்தப் பிறகும் கூடக் குளிரும் பனியும் இங்கே குறையவில்லை. அவ்வப்போது எட்டிப் பார்க்கும் சூரியன் வெயில் ஆசையைக் காட்டிவிட்டு பின்னாடியே ஊதல் காற்றை அனுப்பி வைக்க இந்த வருட வானிலை ரொம்பவே போக்குக் காட்டுகிறது.

Saturday, April 20, 2019

இலையுதிர்காலம்


“குக்கூ.. குக்கூ” குருவிகள் இரண்டும் ஒன்றோடொன்று தலைமுட்டி கிரீச்சிட...

உறக்கம் லேசாய் கலைந்த பிரமை நிலையில் உணர முடிந்தது மண்டையில் அடித்தால் போல அலறும் அழைப்பு மணியின் ஓசையை. லேசாக விழித்துப் பார்த்ததில் கண்கள் தீயாய் எரிந்தன.