"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, January 20, 2020

பூக்கள் விற்பனைக்கல்ல - விமர்சனங்கள் (5)

Very very constructive review from the author of 'யூனிட் 109', 'அன்று வந்ததும் அதே நிலா', 'கடாரம்' - எழுத்தாளர் மாயா.

டிசம்பர் முதல் தேதியில் அவர் பகிர்ந்த விமர்சனத்தை இப்போது எடுத்துப் போடுவதெல்லாம் - என்னுடைய டக்-ஐ நினைத்தால் எனக்கே கண்ணு வேர்க்குது. ஒவ்வொருமுறை நினைவு வரும்போதும் மொபைலில் குழுமத்திற்குள் தேடி காபி செய்ய முயன்று.... பப்பரக்கா என swipe செய்யும் என் திறமையால் எங்கெங்கோ போகஸ் நழுவி ஓடி... மடிக்கணினியில் காபி செய்து சேகரித்து கொள்ள வேண்டும் என்ற நினைவுடனே... Better late than never- ஆக இன்று என் டைம்லைனில் பத்திரம் செய்து விட்டேன். Many many thanks for your read and the valuable feedback Malar ! Malarvizhi Baskaran 🙏🙏
பூக்கள் விற்பனைக்கல்ல
அத்தி பூத்தார்போலத்தான் இப்படிப் பெண் ஜானர் எழுத்தாளர்கள் அமைகிறார்கள் போல. எழுத்து கத்தரித்துப்போட்டது போல அத்தனை துல்லியம். நல்ல மொழியாளுமை. நாயகனும் நாயகியும் அறிமுகமாகும் காட்சியில் பொறி பறக்கிறது. மருத்துவத்தில் நடக்கும் சீர்கேடுகளுக்குச் சம்மந்தமில்லாமலே அதில் சிக்குண்ட பின்னும் விட்டுக்கொடுக்காத ஆழ்ந்த காதலோடு சேவையாற்றும் மருத்துவர்களை கண்முன் நிறுத்துகிறார்.
மருத்துவமனை சார்ந்த பகுதிகளில் மிகத்தெளிவான காட்சிப்படுத்தல். இது மெடிக்கல் சார்ந்த த்ரில்லராக இல்லாமல் குடும்ப நாவலாகவும் தெரிகிறது. அதனால் கொஞ்சம் கவனம் தவறுகிறது. குடும்ப நாவல்கள் பக்கமிருந்து முழுமையான மெடிக்கல் த்ரில்லருக்கும் கொஞ்சம் அடி போடலாமே சகோ. You have everything that is needed.
கதை இன்னும் நீளம் குறைவாக இருந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. ரசித்தேன்.
வாழ்த்துகள்.

----------------------------------------------------------------------------------------------------------------------
Ms. Sivaranjhani - Mar 6 2020

குடும்பம்,காதல் என்பதில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு, மருத்துவ பின்னணியை மையமாக கொண்டு புனையப்பட்ட கதை.
வரத்தையும், சாபத்தையும்,மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும், வலிகளையும், ஏக்கத்தையும், பழிகளையும்‌ பெண்களுக்கு தரும் ஒற்றை சொல் தான் தாய்மை. அதற்கான விலைக் கொடுத்தல்கள் அதிகம்.அதை பற்றி பல நுணுக்கமான மருத்துவ தகவல்கள் மற்றும் குழந்தையின்மை மருத்துவ தீர்வு முறைகளை கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் விளக்கும் கதை.
முதல் மூன்று அத்தியாயங்களை ஊன்றி படித்து விட்டால் போதும்,அடுத்தடுத்த அத்தியாயங்களில் இருந்து நம்மை கைப் பிடித்து தன்னுடன் அழைத்து சென்று மருத்துவ உலகில், குழந்தை என்ற ஒற்றை வார்த்தையில் நடக்கும் அத்தனை முறை கேடுகளையும் நம் கண்முன் நிறுத்துகிறாள் நேஹா.
ஒரு புறம் அருணா போன்ற பலருக்கு ஃபெர்டிலிட்டி சென்டர்கள் வரமென்றாலும், மறுபுறம் இதனால் பாதிப்படையும் அப்பாவி பவானி போன்றோரை நினைக்கையில் வாசிக்கும் போதே மனதை என்னவோ செய்கிறது.
காலம்காலமாக இதில் பெண்கள் படும் கஷ்டம் மட்டுமே பேசப்படுகிறது,நம்மிடம் சொல்வதற்கும் ஆயிரம் கதைகள் இருக்கும். ஆனால், சஞ்சய்யின் மூலமாக ஆண்கள் படும் வேதனையும் அறிந்து கொள்ள முடிகிறது.
தன் தாயை போலவே நல்ல மருத்துவர் என்று பெயரெடுக்க வேண்டும், குழந்தையில்லா தம்பதியினருக்கு மருத்துவத்தில் உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு தன் உறவினர் மருத்துவ மனையிலயே வேலைக்கு சேரும் நேஹா. தொடக்கத்தில் எதுவும் தெரியாமல் "கருப்புக்கும்,வெளுப்புக்கும் இடையில் நிறைய நிறங்கள்" இருப்பதை உணராமல் தன் வேலையை மட்டுமே ஈடுபாட்டோடு செய்கிறாள், அதில் வெற்றியும் பெறுகிறாள்.
தன்னிடம் கருமுட்டை தானம் தரும் பவானியின் மரணம் அவளுக்கு தன்னை சுற்றி நடக்கும்,தனக்கு தெரியாத பலவற்றை தெரிய வைக்கிறது.அவளை பிரச்சனையிலும் தள்ளுகிறது,அவளை நேசிக்கும் இளா அதிலிருந்து வெளியில் வர உதவுகிறான் உண்மையின் துணைக் கொண்டு.
இளா சொல்லியும் கேட்காது மறுபடியும் அதே மருத்துவமனையில் வேலையை தொடர்கிறாள், தான் மதிக்கும் மூத்த மருத்துவர் ஆஷி, எப்போதும் புன்னகையுடன் இருக்கும் மாமா நந்தா அவர்களின் பின்னால் இருக்கும் நிஜ முகங்களை அறிந்து கொள்கிறாள்.
கருமுட்டை, வாடகைத் தாய் இந்த பதங்களை நாம் சாதாரணமாக தெரிந்து வைத்திருந்தாலும், ஒரு படி மேலே போய் வெளிநாட்டில் இருந்து மனித கரு கடத்தல் என்பதையெல்லாம் படிக்கும் போது,மிக பெரும் அதிர்ச்சியை நமக்களிக்கிறது.
அந்த கடத்தலை அவள் எப்படி தடுத்தாள்? மேற்கொண்டு தனது வாழ்க்கையில் என்ன செய்தாள்?தான் நேசிக்கும் மருத்துவ துறையில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டு வந்தாளா என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அர்ச்சனா அத்தை,இளா என்னை மிகவும் கவர்ந்தார்கள். இளாவின் அறிமுக காட்சி ரசனைக்குரியது.
அத்தனை தகவல்களையும் கதையின் போக்கில் நேர்த்தியாய் கொடுத்தது பெரும் வியப்பை அளித்தது. ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் வரும் கருத்து கணிப்புகள் நிச்சயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை.

-------------------

Ms. Nithya -  Jun 12,2020
Hi sis,
Read ur பூக்கள் விற்ப.. and பூவிதழ் தூரி..
Simply superb. Specially Arjun character is awsome👏

👏👏👏👏

------------------------------

Ms. Usha - Oct 26 2020

Read your pookal virpanaikalla. You must have done a lot of research to give all the technical details.
For almost all the parts of body medical science has developed in leaps and bounds and faster than it becomes commercial and innocent people are exploited. 
Happy I read it.Only a handful are their I think who are dedicated. Education has become expensive and there starts all the problems and they become slaves of drug companies and equipment companies and on top their personal loans or lifestyle.
 
------------------------
 
Ms. M, Feb 6, 2021
 
Hai Hema Iam *********.iam your crazy fan .Almost all your recent novels I have read.you are chanceless hema.let me give my intro before that.I worked in ******* Bank as a manager and took VRS retirement.Being a banker I have worked in new delhi, Bangalore,cbe,and chennai..I used to read a lot right from my childhood and at present I have read all your novels.The above novel  just now completed and fascinated by your novel.what a clear idea about the subject you have taken for this novel simply superb.usually all your novel in a way or other it will attract me.no words to tell about my feelings.In my college days oru Indumati mam novel padicha that effect will not leave me so easily.Like that your novel brings that feeling so also Jeffrey Archer and Sydney sheldon.iam unable to express it in my email.oru thakkathai erpaduthukiradhu.Iam happy that some youngsters are writing nicely.Love,romance enru mattum pogamal intha Mathiri ezhudhanum.my tamil writing will not be very good .that is why iam giving my feedback in English  Regards

No comments: