‘பூக்கள் விற்பனைக்கல்ல’ நாவலுக்கான விமர்சனங்களின் தொகுப்பு. அமேசான் மற்றும் Goodreads விமர்சனங்கள் நீங்கலாக முகநூல் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக சேகரிக்கப்பட்ட மதிப்புரைகள் இவை. நாவல் குறித்த தத்தம் பார்வைகளைப் பகிர்ந்து, குறை நிறைகளைச் சுட்டி உதவும் சக எழுத்தாளர் மற்றும் வாசக நண்பர்களுக்கு என்றென்றும் நன்றிகளுடன்!
எழுத்தாளர் திருமதி. லாவண்யா – Nov 8, 2019
இது போன்ற ஒரு கதையை சுவாரசியமாக எழுதியதுக்கு எழுத்தாளரைப் பாராட்ட வேண்டும். மருத்துவத்துறை என்பது மிகவும் உன்னதமானது. மனிதனின் மனத்திலிருந்து, உயிர் வரையில் பாதுக்காக்கும் துறை இது. ஆனால் சிலரின் பணத்தாசைக்காக எவ்வாறு இத்துறைப் பந்தாடப்படுகிறது என்பதை தகுந்த விவரங்களுடன் விளக்கி இருக்கிறார் ஆசிரியர்.
குழந்தைப் பேறு என்பது மகத்தானது. அதில் பெருகிவரும் பிரச்சனைகள் காரணமாக மருத்துவரை அணுகினால் அதில் சிலரின் செயல்கள் எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
எல்லோரும் நல்லவர்கள் என நம்பும் கதையின் நாயகி, பின்னாளில் நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு எவ்வாறு காய் நகர்த்தி வெற்றியடைகிறாள் என்பதை மிகவும் எதார்த்தமாக, எவ்வித ஹீரோசயிசம் இல்லாமல் நகர்கிறது கதை.
இளா, நேஹாவுக்குப் பக்கபலமாக எல்லா விதத்திலும் துணை நிற்கிறான். குடும்பச் சிக்கல்கள், உறவுச் சிக்கல்கள் என இதோடு இழைந்து கதை வெகு சுவாரசியமாக நகர்கிறது.
தன் மருத்துவத்துறையை விட்டுக் கொடுக்காமல், சட்டத்துக்குப் புறம்பாக வேலை செய்பவர்களையும் தண்டனை அனுபவிக்க வைப்பதில் தெரிகிறது நாயகியின் பணியின் மீதான அர்ப்பணிப்பு.
அதேபோல் கடினமான விளக்கங்களையும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியிருப்பதில் தெரிகிறது ஆசிரியரின் அர்ப்பணிப்பு.
என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது என்னவென்றால், கணினித்துறையில் இருந்து கொண்டு நுணுக்கமான விவரங்கள் அனைத்தையும் அத்துறையில் கைதேர்ந்தவரைப் போல் கதை நெடுக அவர் கையாண்டிருப்பது. பரிசு பெற வாழ்த்துகள்!
என்றும் நட்புடன்,
லாவண்யா
-----------------------------------------
எழுத்தாளர். ஆர்த்தி – Nov 12, 2019
இப்போ நான் நல்ல நாவல் ஒன்றைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கேன்.
கதை: பூக்கள் விற்பனைக்கல்ல
எழுத்தாளரின் பெயர் ஹேமா ஜெய்.
பொதுவா இவங்க கதைகள் எல்லாம் நல்ல எழுத்துநடை, சிந்தனைகள் கொண்டவை. இந்தக் கதையும் நம்ம எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் வந்து இருக்கு.
குழந்தையின்மை, அதன் பொருட்டு தற்போது மக்கள் நாடும் மருத்துவத் தீர்வுகள் என்பதை மையமாக வச்சு எழுதி இருக்காங்க.
இது ரொம்ப sensitive topic.
‘Infertility and the medicine’ and behind the scenes
இந்த டாபிக்கை உள்ளும் புறமும் அலசி ஆராய்ந்து பல கருத்துகளுடன் வருது கதை. காதல், குடும்பம் என்பதைத் தாண்டி மாறுபட்ட கதை. மருத்துவதுறையில் இருக்கும் ஹீரோயின். மீடியா பெர்சன் ஹீரோ.
படிச்சுப் பாருங்க. கதை நிறைய விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது.
கிண்டிலில் இருக்கு.
வாசிக்கிறவங்க மறக்காமல் உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
#PenToPublish2019 கிண்டில் போட்டிக்களத்தில் இருக்கு. நல்ல கதை வெற்றி பெற வாழ்த்துகள் Hema Jay!
--------------------------------------
திரு. ஜெகந்நாதன் வெங்கட் – Nov 13, 2019
ஹேமா அவர்கள் எழுதிய ‘பூக்கள் விற்பனைக்கல்ல ‘புதினம் படித்தேன்.மிகவும் விறுவிறுப்பாக இருந்ததால் நிறுத்தாமல் படிக்க முடிந்தது.
கனமான கதை. பாயும் ந தியாய் நடை. அருமையான வார்த்தைப் பிரயோகங்கள்.அடுத்து என்ன என ஆவலைத் தூண்டும் திருப்பங்கள்.நேர்த்தியாய் படைக்கப்பட்ட கதை மாந்தர்கள்.மருத்துவத் துறை சார்ந்த ஒரு சமூகப் பிரச்சனையை எடுத்துக் கொண்டு அதை ஒரு கதையாகத் தருவதில் படைப்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்பதில் அய்யமில்லை.
மெய்யும் புனைவும் பாதி பாதியாக அமையும் இந்தக் கதையில் தரப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களும் ஆய்வு முடிவுகளும் படைப்பாளரின் கடுமையான உழைப்பை காட்டுகின்றன,வாழ்த்துக்கள்!
-------------------------------
எழுத்தாளர் திருமதி. ரமாலக்ஷ்மி – Nov 6, 2019
பூக்கள் விற்பனைக்கல்ல !
Amazonpentopublish 2019 போட்டிக்காக, Hema Jay சிஸ் எழுதியிருக்கும் நாவல்.
இன்று மட்டுமில்லை, இனி எதிர்காலத்திலும் மிக பெரிய பிரச்சனையாக இருக்க கூடிய 'குழந்தையின்மை' என்ற ஒரு விஷயத்தை மைய்ய கருவாக வைத்து எழுதப்பட்டிருக்கும் கதை. குழந்தையின்மை, அதனால் ஏற்படும் மன உளைச்சல், treatment என்ற பெயரில் மருத்துவமனைகளில் நடக்கும் வியாபாரம், வாடகை தாய் என்ற பெயரில் ஏழை பெண்கள் தங்கள் உயிரையே இழக்கும் அவலம், அவர்களை exploit செய்யும் மருத்துவமனைகள் என்று அருமையாக படைக்கப்பட்டிருக்கிறது இக்கதை. பொதுவாக குடும்ப நாவல்களில், நாயகன் நாயகி அவர்களுக்குள் இருக்கும் மோதல், காதல் இவையே முதன்மை கருவாக இருக்கும். மற்ற விஷயங்கள் secondry track ஆக இருக்கும். ஆனால் இந்நாவலில், மேலே சொல்லப்பட்ட மருத்துவம் சார்ந்த விஷயங்கள் main track ஆகவும், நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட குடும்ப பிரச்சனைகள் secondry track ஆகவும் படைக்கப்பட்டிருப்பதே 'பூக்கள் விற்பனைக்கல்ல' என்ற நாவலை தனித்துவமாக காட்டுகிறது. Embriyology, fertility, ovulation, egg donation, செயற்கை கருத்தரிப்பு, அது செய்யப்படும் முறைகள் என நிறைய technical விஷயங்களை, குறிப்பட்டுருப்பது கதை கருவிற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
'உலகத்தை நீ கருப்பு வெள்ளையா மட்டும் தான் பார்க்கிற. கருப்பு வெள்ளைக்கு நடுவே நிறைய நிறங்கள் இருக்கு.' இது நாயகன் நாயகியிடம் சொல்லும் வசனம், என்னை மிகவும் கவர்ந்த வசனமும் கூட.
மொத்தத்தில், அழுத்தமான கதை கருவை, அழகாக, தெளிவாக, அருமையாக காட்சிகளாக படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சிஸ் !! #Amazonpentopublish2019 போட்டியில் வெற்றிப் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
https://www.amazon.in/gp/product/B07ZS7NX7N/ref=dbs_a_def_rwt_hsch_vapi_tkin_p1_i0
"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)
Subscribe to:
Post Comments (Atom)
-
மார்ச்' 30 வார கண்மணியில் எனது நாவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'தூரங்கள் நகர்கின்றன' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியாகி உள்ளது.
-
நினைவெல்லாம் செண்பகப்பூ நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக...
No comments:
Post a Comment