பூக்கள் விற்பனைக்கல்ல - எழுத்தாளர் தோழி ஆர்த்தியின் பார்வையில்.
ஆர்த்தி குறிப்பிட்டு இருப்பது போல செயற்கை முறைகள் மனதிற்கு சங்கடம் தருபவை தான், எனினும் இன்று பல குடும்பங்களுக்கு பல தாய்மார்களுக்கு வரமாக உள்ளதை நாம் மறுக்க முடியாது. ஆழ்ந்த வாசிப்பும் தீர்க்கமான விமர்சனமும். - இவருடைய விமர்சனம் பொங்கல் அன்று கிடைக்க எனக்குக் கிடைத்த பொங்கல் பரிசாகவே நினைத்துக் கொண்டேன் - மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் ஆர்த்தி. With Budding Novels AR
🎈🌞பூக்கள் விற்பனைக்கல்ல
🌞🎈💐ஹேமா ஜெய்
💐
கதைப்பயணம் முழுக்க எனக்குக் கலவையான உணர்வுகளைத் தோற்றுவித்த கதைக்கரு. நுண்ணிய மருத்துவ முறை. பலருக்கு மனத்தாலும் உடலாலும் நுண்ணிய உணர்வுகளைத் தோற்றுவிக்கும் இத்தகைய உயிரூட்டலின் அவசியமென்ன?
எந்த விதமான அறிவியலிலும் இயற்கையை மீறிச் செயற்கையாக ஏற்படுத்தப்படும் முறைகள் நம்மை யோசிக்கத் தான் வைக்கின்றன. இவற்றின் பின்னணியில் எத்தனை விதமான மெனக்கெடல் இருக்கின்றன என்று தெரிந்திருந்தாலும், இவையெல்லாம் எத்தனை பெரிய அளப்பரிய மருத்துவச் சாதனைகள் என்று வியந்தாலும் என்றுமே செயற்கைக் கருவூட்டல் என் மனத்திற்கு ஒவ்வாத ஒன்று.
‘உனக்குப் பிடிக்கலைன்னா என்ன? இப்பரந்து விரிந்த உலகத்தில் பலருக்குத் தேவையாகிவிட்ட நுண்ணிய மருத்துவம் இம்முறைகள்.’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு இப்போது கதைக்குள் செல்கிறேன்.
முதலில் தோழி ஹேமாவிற்குப் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓர் ஆழமான கதைக்கருவைக் கையில் எடுத்துக் கொண்டு, அதனைத் திறம்பட ஆராய்ந்து; அவற்றை எப்படிச் சரியாகச் சொல்வது என்றுணர்ந்து; அதற்காகக் கதை ஒன்றை உருவாக்கி; எல்லாவற்றையும் சிறப்பாக நாவல் வடிவத்தில் தந்திருக்கிறார்.
மருத்துவத்துறையையோ இல்லை பொதுவான உயிரியல் துறையையோ சார்ந்தவரல்ல நாவலாசிரியர். எனினும் சவாலாக இக்கருவை எடுத்துக் கொண்டு இத்தனை விளக்கங்களுடனும் புள்ளி விவரங்களைத் திரட்டி வழங்கியமையும் ஆச்சரியப்பட வேண்டிய விசயமே!
நன்றாக ஆழ்ந்து சிந்தனையுடன் வாசிக்க வேண்டிய கதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் தொடக்கத்தில் ஒரு பத்தியாகத் தகவல்கள். கருவூட்டல் முறைகள், எங்கு என்ன முறை பொருந்தும், என்னென்ன மருத்துவக் குறைபாடுகள் காணப்படுக்கின்றன, possibilities for the impossible... இப்படி எத்தனை எத்தனையோ!
Oocytes, nucleus, cycote cells, embryos... முதல் இரண்டு மூன்று பக்கங்களைக் கடப்பதற்குள் ஒன்றிரண்டு முறை பக்கங்களைத் திருப்பி மீண்டும் மனத்தில் ஏற்றிக் கொண்டே மேலும் வாசித்தேன்.
ART, IUI, ICI, IVF, surrogacy, uterus transplants, artificial monthly cycle initiation... இப்படி நிறைய நுட்பமான அலசல்கள். Great study!
சரவண இளஞ்செழியன் - நேஹா
இவனுடைய பெயரின் கவர்ச்சியைப் போன்று இவனும் கவர்கிறான்.
நேஹாவைக் காட்டிய விதம் அருமை. சிறப்பாக வலம் வருகிறாள்.
அர்ச்சனா, அபி - பிடித்த பாத்திரங்கள்.
இனியா - சஞ்சய், அருணா மூர்த்தி அவர்களின் உணர்வுகள்.
நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் ஆழ்ந்த உழைப்பில் வடித்திருக்கும் படைப்பு! குடும்ப நாவல்களுக்குள் அபூர்வமாகக் காணக் கூடிய வகையிலான கதை.
Heartiest wishes Hema! 🎁❤️💐
இனிய பொங்கல் வாழ்த்துகள்!
அன்புடன்,
ஆர்த்தி ரவி
-------------------------
Ms. Meghna suresh - May 27,2020
ஹேமா ஜெய் அவர்களின் ‘பூக்கள் விற்பனைக்கு அல்ல’ கதை .
மழலை
மனிதிக்கு வரமா சாபமா என்றே புரியாத ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். முதலில்
நாம், நம்மை நம் சுயத்தை கொண்டாட வேண்டும். அதன் பிறகே நம் சந்ததிகள்.
திருமணம் முடிந்து இரண்டொரு மாதங்களிலேயே, “எங்கே..? எங்கே..?’ என
நச்சரிக்கும் சமூகத்திடம், பதில் சொல்ல பயந்தே இன்றைக்கு நிறைய இளம்
தம்பதிகள் அவசர அவசரமாய் குழந்தை பெறுகிறார்கள்.
அவர் கதையில் வந்ததை போல, குறையே இல்லை என்றாலும், எதையாவது செய்து என் வயிற்றில் ஒரு குழந்தையை உருவாக்குங்கள் என நிற்கிறார்கள்.
பெண் புரட்சி, சமத்துவம் என்று ஆயிரம் நீதி பேசும் நாம், முதலில் குழந்தை
பெறுவதற்கான சுதந்திரத்தை, முடிவெடுக்கும் உரிமையையும் பெண்ணுக்கு வழங்க
வேண்டும்.
பிள்ளை பெற முடியாதவர்கள், அதே கூட்டில் முடங்காமல்
நாவலின் இறுதியில் வரும் தம்பதியர் போன்று, வந்தா சந்தோசம், வரவில்லை
என்றால் வருத்தமில்லை என்ற எதார்த்தத்திற்கு பழக வேண்டும்.
அது சரி
நான் இங்கே ஏன் என் கதையை சொன்னேன். மருத்துவ அறம். ஆம் நான் பார்த்த அரசு
மருத்துவமனை மருத்துவர்கள் பயனாளிகள் ஏமாற்றம் கண்டு விடக் கூடாது என்று
எத்தனை கூட்டத்திலும், வாயில் சில நேரம் சுடு சொல் இருந்தாலும், அவர்கள்
நலம் குறித்த அக்கறை மிகுத்தே இருக்கும்.
ஹேமா அவர்கள் கதையில்
கண்டார் போல அறம் தவறிய மருத்துவர்களால் மருத்துவ உலகம் மட்டுமல்ல, சக
மனிதர்களாய் மனிதமும் தலை குனிந்து நிற்க வேண்டியுள்ளது.
ஒரு
குடும்ப நாவலில் மகப்பேறு மருத்துவ உலகை இணைத்து, அதோடு பரபர ஊடகத்தை
இணைத்து, கொஞ்சம் காதலையும், அதிக அறிவியலையும் கண்ணில் காட்டியது அருமை.
தகவல் பல அறிய நிச்சயம் வாசிக்கலாம்.
வாசிப்பின் நேசிப்பில்...
மீனு @ மேக்னா சுரேஷ்.
No comments:
Post a Comment