Ms. Jansi on Dec 27, 2019
பூவிதழ் தூரிகை | Poovidhazh Thoorigai (Tamil Edition)" by Hema Jay. Start reading it for free: http://amzn.in/gmDW44V
அழகான கதை ஹேமா
தனா யாழினி பகுதிகள் வாசிக்க இயலாமல் ஸ்கிப் செய்தேன்...கண்முன்னால் பார்த்த, உணர்ந்த, வலித்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் நினைவில் இடறின.
உங்களின் எழுத்துக்கள் அப்பட்டமாய் நிதர்சனத்தை உரைப்பவை... ஒவ்வொரு காட்சியும், கதாபாத்திரங்களும் அருமை
அர்ஜீன் ரொம்பவே பிடித்த கதாபாத்திரம்.
புரிதல் எக்ஸெட்ரா கற்பனையில் மட்டும் தான் இதுவெல்லாம் சாத்தியம் என்று மனம் முரண்டினாலும் நிஜத்திலும் பற்பல இவ்வாறு நடக்கட்டும் எனும் ஆசையை விதைத்தது கதையின் முடிவுப் பகுதி.
மிக அருமை
அழகான கதை
வாழ்த்துகள் Hema Jay 💐
------------------------------
Ms. Premaa Venkatachari on Jan 2, 2019
- Hema Jay, already i read ur books the way u r writing is impressing me particularly pattampoochi para para i started reading yazhini and arjun character will finish it and come back to u ma
- Poovithaz thoorigai ippathan mudithen yazigai character bharathi kanda puthumai pen character is super arjun character is also good novel i enjoyed while reading superma. Intha kathai padikkum pothu yazhiniyodaya travel panninem super novel ma
**************************************************************************************************************************
Ms. Uma Manoj on Jan 12, 2019
Hi hema...poovithazh thoorigai padichachu...Super..sema.. Yazhini n Arjun..hmm
Velinadu vellai climate situation etc...ellame polished ah soli irukinga.its too good Thana... psycho...irukanga poomile. Pani uruguvathu pol melliya menmaiyana love story.. Very nice Rombaaa pidichathu
But Arjun fb..romba pavama irunthathu... delivery Apo avan feelings azhaga theliva iruku.. super
Yazhini sema bold personality.. good.. Meendu varathu nalla iruku
**************************************************************************************************************************
Ms. Rajam Rajam on Mar 1 2019-
Kathai illai kavithai
இழை இழையாக வடித்த காவியம்
பின்னிட்டிங்க ஹேமா.
வர்ணிக்க வார்த்தை இல்லை
Such a great concept
Hats of to you.

Ms. Faranas Kani on Mar 7,2019
Hi hema just now finished reading ur poovithal thurigai novel
It was soo amazing
Nice pa
I can’t control my tears for yazhini
All the best for ur upcoming stories
Ur soo informative and very trendy
**************************************************************************************************************************
Ms. Uma Krishnan on Mar 14, 2019
Hi Hema,
Just finished reading your story Poovidazh
Thoorigai in Amazon kindle. Loved it so much. Yazhini and Arjun are such wonderful characters. You have written the story so realistically I could feel each moment. Not able to express my feelings in words. I would like to read more of your stories but could not find in Amazon. Please tell me where I can find your stories.
Thank you for writing such a heart wrenching story.
Eagerly waiting to know more about your other stories,
With love
Uma

Ms. Mala Sarathy on Mar 17, 2019
hi hema sis unga story poovithazh sthoorigai padichen. super pa. arjun character simply awesome. all the best sis
**************************************************************************************************************************
Mr. Nandhakumar on Apr 3 2019
Hi, happened to read your two novels. பூவிதழ் தூரிகை & பட்டாம்பூச்சி பற பற. பாராட்டணும்னு தோணுச்சு. My wishes to you to write these kind of matured content in family novels. All the best.
**************************************************************************************************************************
Ms. Sudha Ravi on Jan 27, 2019
Hema poovithazh thoorikai padichitten. Semaya irunthuthu kaiyil eduthathai keezhe vaikamal padichu mudichen.Muzhusum padichiten Hema...Athellam edhuvum illa...kurippa sollanumna avan panra torcher Arjunoda wife iranthathu patriya details ellam kodukama irunthathu nalla irunthathu..Athai koduthiruntha intha alavu crisp aaga vandhirukathu.அர்ஜீனை மனசு விரும்பினாலும் பழைய வாழ்க்கையிலிருந்து வெளிய வர அவளுடைய தடுமாற்றம் எல்லாம் அழகா வந்திருந்தது...அதே சமயம் அவன் மீதான உரிமை எல்லாம் ரொம்ப நீட்டாக இருந்தது..இந்த கான்சப்ட்டில் நிறைய கதைகள் வந்திருந்தாலும்..நீங்க பிரசன்ட் பண்ணிண விதம் டீசண்ட்டாகவும் இயல்பா அந்த சிக்கலில் மாட்டிய ஒரு பெண்ணிண் மனநிலையை பிரதிபலிச்சது.
**************************************************************************************************************
Ms. Suvitha on Feb 10, 2020
**************************************************************************************************************
Ms. Suvitha on Feb 10, 2020
ஹாய் ஃப்ரண்ட்ஸ்,
எனக்கு பரிசாகக் கிடைத்த Hema jay யின் ‘பூவிதழ் தூரிகை' யின் விமர்சனத்தோடு வந்திருக்கேன். கதை தான் எனக்கு புதிதேயன்றி ஆசிரியரின் எழுத்தல்ல.
எனக்கு பரிசாகக் கிடைத்த Hema jay யின் ‘பூவிதழ் தூரிகை' யின் விமர்சனத்தோடு வந்திருக்கேன். கதை தான் எனக்கு புதிதேயன்றி ஆசிரியரின் எழுத்தல்ல.
‘பூவிதழ் தூரிகை’ படிக்க ஆரம்பித்தேன்... உண்மையிலேயே மனது வலித்தது. இப்படி ஒரு திருமண வாழ்க்கை ஒரு பெண்ணிற்கு அமைந்து விட்டால்...அதுவும் பெற்றோரும் உற்றோரும் துணையில்லாத அயல் தேசத்தில் கொண்டவனே துணை என்று வந்த ஒரு பெண்ணிற்கு அமைந்து விட்டால்...அந்த பெண்ணின் நிலை என்ன? நரகம்...உண்மையிலேயே நரகம்...அந்த நரகத்தைக் கதையின் நாயகி யாழினிக்கு அவளின் கணவன் அந்த ராட்சஷன் தனா காட்டினான். தனாவாம் தனா...விளக்குமாறு க்கு பெயர் பட்டுக்குஞ்சமாம். எனக்கு இப்படி தான் பொறுமத்தோன்றியது அந்த சந்தேகத்திற்கு பிறந்தவனை பார்த்து. நின்றால் குற்றம் இல்லையில்லை சந்தேகம், இருந்தால் சந்தேகம், ஏன் மூச்சு விட்டால் கூட சந்தேகம். எவ்வளவு தான் அனசரித்தோ, பொறுத்தோ போகமுடியும் ஒரு பெண்ணால். முடியாத ஒரு கட்டத்தில் அவள் 'கடவுளே என்னை இந்த ராட்சஷனிடமிருந்து காப்பாற்று' என்று வெடித்து அழ, அவள் கூடவே சேர்ந்து என் மனமும் கதறி அழுதது அவளின் அதே வேண்டுதலோடு.
அந்த கற்பனைக் கதாபாத்திரம் யாழினிக்கு ஏற்பட்ட துன்பங்களை எல்லாம் ஏதோ எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட துயரம் போல எண்ணி என்னை துயரங்கொள்ள வைத்த ஹேமாவின் எழுத்தாழுமைக்கு ஒரு ராயல் சல்யூட் இந்த இடத்தில் நான் செய்தே ஆகவேண்டும்.
கொட்டக்கொட்ட குனியாமல் இந்த பெண்மைக்குள் மென்மை மட்டுமல்ல போராடும் குணமும் உண்டு என்று அந்த பொருந்தாத திருமணத்திலிருந்து வெளிவந்தது மட்டுமல்லாமல் அங்கேயே தேங்கி நில்லாமல் அடுத்தது என்ன என்று யோசித்து முன்னேற்ற பாதையை நோக்கி முயன்று சென்ற யாழினி கதாபாத்திரம் நிதர்சனத்தின் உண்மையைக் காட்டத் தவறவில்லை. முதல் பாதி வரை கதை நம்மை சோகத்தில் ஆழ்த்தியது என்றால் மறு பாதி கவிதை... அதிலும் அர்ஜூன்....ஆஹா...
யாழினி மீதான இவனோட பாசம், பரிவு, நேசம்,நட்பு, காதல், பொறுமை, எல்லாம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இப்படி ஒரு துணை மட்டும் ஒரு பெண்ணிற்கு கிடைத்துவிட்டால் காயங்கள் கூட மாயமாகிப்போகும்.
யாழினி மீதான இவனோட பாசம், பரிவு, நேசம்,நட்பு, காதல், பொறுமை, எல்லாம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இப்படி ஒரு துணை மட்டும் ஒரு பெண்ணிற்கு கிடைத்துவிட்டால் காயங்கள் கூட மாயமாகிப்போகும்.
கதையின் நடுவே வரும் பாடல் வரிகளும் கூட கதை சொன்னது சிறப்பு.
அழகான எழுத்து, எந்த குழப்பமும் இல்லாமல் நேர்த்தியாக கதை சொன்ன விதம் என்று ஆசிரியர் தன் எழுத்தால் நம்மை வசீகரிக்கத் தவறவில்லை. மொத்தத்தில் பூவிதழ் தூரிகை பலவண்ணக்கலவையான உணர்ச்சிகளை என்னுள் ஏற்படுத்தியது என்னவோ நிஜம்.

அழகான மயக்கும் எழுத்துக்கு சொந்தக்காரரான ஹேமா தன்னுடைய எழுத்துலக்தில் தன் எழுத்தால் இன்னும் பல உயரங்களை தொட வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்...
நன்றி...
நன்றி...
KIndle reviews :
No comments:
Post a Comment