Kindle reviews :
ஒவ்வொரு கதைகளை இதுதான் கதை என்று விமர்சிக்க இயலாது. கொஞ்ச நேரம் குறிப்பிட்ட இடத்திற்கு, நகரமோ நாடோ அங்கே சென்று நாயகன் , நாயகியுடன் உலவி, அவர்கள் உணர்வு பரிமாற்றங்களை உள்வாங்கி, அவர்களோடேயே பயணித்த உணர்வு தரும். இந்தக் கதையும் அதே ரகம்.
ஆதலின் கதை என்ன என்றெல்லாம் கூறப் போவதில்லை. எழுத்தாளரின் முன்னுரையில் அத்தனை விஷயமும் ஏற்கெனவே பகிரப் பட்டுள்ளதால் மறுபடி அதையே சொல்ல தேவையும் ஏற்படவில்லை.
அமேசானில் பகிர்ந்துக் கொண்ட கருத்தையே பகிர்ந்துக் கொள்கின்றேன்...
அருமையானதொரு வாசிப்பனுபவம். இனிமையான கதை. பிரமாதமான , நுணுக்கமானதொரு படைப்பு.
நாயகனும், நாயகியும் அவர்கள் குண இயல்புகளும் மனதை வருடிச் செல்கின்றன. பிசிரற்ற படைப்பு....கண்முன் வெவ்வேறு கலாச்சாரங்களை அழகாக காட்சிப் படுத்தி இருக்கிறார் எழுத்தாளர்.
வாழ்த்துகள் Hema Jay superb
*******************************************************************************************************************
Ms. யாழ் சத்யா - Nov 29 2018
கதையின் பெயரில் ஏற்பட்ட பிடித்தத்தில் தான் முகப்புத்தகத்தில் பதிவையே விலாவாரியாகப் படித்தேன். பாண்டிச்சேரியில் நடைபெறும் கதை என்றதும் எப்படியும் படித்து விட வேண்டும் என்ற எண்ணம். அந்த ஊரில் அப்படி ஒரு மயக்கம்.
ஆசிரியர் சொல்லியிருந்தது போலவே கதை முழுவதும் பிரெஞ்ச் உணவுகளுக்குக் குறைவில்லை. அதை அவர் விவரித்திருந்த விதம் நாவூறச் செய்யவும் தவறவில்லை. சில உணவுகள் தெரிந்திருந்தாலும் சிலவற்றை விரைவில் ருசி பார்த்து விட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டு விட்டார்.
ஜெனிட்டா அழகான குறும்பு வாயாடி. தட்டத் தனியாக ஒரு பெண் இவ்வளவு அழகாக ஒரு உணவுச்சாலையை நடத்துவதே அவள் மீது ஒரு சிறந்த அபிமானத்தை ஏற்படுத்துகிறது. அவள் அழகை மட்டுமல்ல, குணநலன்களைப் பார்த்தும், அவள்பால் ஈர்க்கப்பட்டுச் சித்தார்த் அவள்பால் தடுமாறி விழுந்ததில் ஒன்றும் அதிசயமில்லை.
சித்தார்த்தின் சீஸ் தொழிற்சாலை பற்றி விவரித்திருந்த விடயங்கள் எல்லாமே மிக நேர்த்தியாய் இருந்தது. நேரிலே ஒரு சீஸ் தொழிற்சாலையைப் பார்வையிட்டிருந்ததாலோ என்னவோ, எனக்கு அந்த அனுபவத்தை மீட்டிப் பார்க்கும் ஒரு உணர்வு தான் வந்தது.
“அது சரி சித்தார்த் பையா… அவனவன் ஐ போனை அடுக்கி கோலம் போட்டெல்லாம் புரபோஸ் பண்ணிட்டு இருக்கான். நீயென்னடா என்றால் குடுத்தியே ஒரு சர்ப்பிரைஸ். உண்மையிலேயே கவிதை தான்.” அந்தப் பொருளின் பழைய சரித்திர வரலாறு, புதுத் தகவல் எனக்கு.
கௌரியைப் போன்ற பெண்கள் உண்மையில் பூமா தேவிகள் தான். இத்தனை வருடங்களாய் காதலுக்காக மீதி அனைத்தையும் தியாகம் செய்து வாழும் வாழ்வு எல்லோராலும் முடியாதது. சாதாரண உணர்வுகளுள்ள பெண்ணாய் அவர் இடைக்கிடை கொந்தளிப்பதும், பின்னர் தானே சரியாகுவதுமாய் ஒரு யதார்த்தமான பாத்திரம். அவர் கணவரும் அவருக்கேற்ற புரிதலோடு.
சித்தார்த்துக்கு சர்ப்பிரைஸ் இல்லையோ என்னவோ இந்த டேனி மாட்டர் எனக்கு சர்ப்பிரைஸ் தான். அப்புறம் இந்த கியூட்டியும் அழகாய் இயல்பாய் ஒரு சர்ப்பிரைஸ்.
கதையில் பெரிய வில்லன்கள் எல்லாம் இல்லை. ஆனால் பெரியதொரு வில்லங்கம் இவர்கள் காதலுக்கு ஆப்படித்தது. சித்தார்த், ஜெனியை எப்படி அதிலிருந்து மீட்டெடுத்துக் கரம் பிடித்தான் என்பதே கதை. சித்தார்த் போன்ற நேர் சிந்தனை உடையவர்கள் தான் எங்கள் சமூகத்துக்கு அதிகம் தேவை.
பாண்டிச்சேரி பற்றிய வர்ணனைகளும் பாரதியிலிருந்து, புறநானூறு, ஏஆர் ரஹ்மான் பாடல்கள் வரை உரிய இடத்தில் புகுத்திய விதம் அழகு. அதே போல திரைப்படக் காட்சிகளும் கதையமைப்போடே ஆங்காங்கே நகைச்சுவையாய் தெளிக்கப்பட்டிருந்த விதம் ரசனை. உதாரணமாய் கோலமாவு கோகிலா படம் பற்றிச் சொல்லியிருந்தது.
பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து, நோமண்டி போமாஸ் வரை ஆங்காங்கே பிரான்ஸ் நாட்டுத் தகவல்களும் அறிவுக்கு விருந்து.
ஒட்டு மொத்தத்தில் மனதை இதமாக்கத் தாராளமாகப் பருகக் கூடிய கஃபேயே. ஒவ்வொரு கோப்பையையும் மடமடவென்று குடித்து விடலாம். கதை சலிப்படைய வைக்காமல் நகர்கிறது. ஜெனியின் கஃபேயும் சித்தார்த்தின் சீஸ்ஸும் நன்றாகவே கமகமக்கிறது.
சமூகத்திற்குத் தேவையான கருவொன்றை பல புதிய விடயங்களோடு அழகாய்ப் பரிமாறியதற்கு வாழ்த்துக்கள் அக்கா.
என்றும் அன்புடன்
யாழ் சத்யா.
யாழ் சத்யா.
*************************************************************************************************************
Ms. சுதா ரவி - Nov 30, 2018
காதல் கபே – ஹேமா ஜே
பாண்டிச்சேரி என்றாலே பிரெஞ்சு கலாச்சாரம் நம்மை கவர்ந்திழுக்கும். நகர அமைப்பிலிருந்து அங்குள்ள தேவாலயங்கள் மற்றும் குடியிருப்புகள் கூட அவர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும்.
ஒவ்வொரு கலாச்சாரமும் நமக்கு பல்வேறுவிதமான வாழ்வியலை எடுத்துக் கூறும். உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை அந்தந்த கலாச்சாரத்திற்கு ஏற்ப மாறுபடும். இங்கே கதையின் நாயக, நாயகி இருவருமே பிரெஞ்சு கலாச்சாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள்.
ஒவ்வொரு கலாச்சாரமும் நமக்கு பல்வேறுவிதமான வாழ்வியலை எடுத்துக் கூறும். உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை அந்தந்த கலாச்சாரத்திற்கு ஏற்ப மாறுபடும். இங்கே கதையின் நாயக, நாயகி இருவருமே பிரெஞ்சு கலாச்சாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள்.
பேக்கரி நடத்தும் ஜெனியால் நிறைய பிரெஞ்சு உணவு வகைகளைப் பற்றியும், சித்தார்த்தின் சீஸ் நிறுவனத்தின் மூலம் அது எப்படி எல்லாம் தயாராகிறது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. அதோடு பிரெஞ்சு இன மக்களின் பழக்க வழக்கங்கள் என அறிந்து கொள்ள நிறைய விஷயங்களை அள்ளித் தந்திருக்கிறார்.
ஜெனி துருதுரு நாயகி. பாண்டிச்சேரியில் பேக்கிரி வைத்து நடத்துபவள். தேவதை பெண்ணான அவளுக்கு கடவுள் சற்றே பெரிய வாயை கொடுத்து விட்டார். (இதை நான் சொல்லவில்லை. நாயகன் தான் இப்படி அடிக்கடி சொல்கிறார். நான் அதை வழிமொழிகிறேன்) தனது முக்கிய உறவுகளை பிரிந்து பேக்கரியை உயிர் மூச்சாக எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவளின் வாழ்க்கையில் நுழைக்கிறான் சித்தார்த்.
பாண்டிச்சேரியில் ‘மியம்’ என்கிற பெயரில் சீஸ் தயாரிக்கும் நிறுவனமொன்றை நடத்தி வருபவன். எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே அவனது மனம் கவர்கிறாள் ஜெனி.
அவளோ அவனது ஈர்ப்பை ஏற்காமல் மறுக்கிறாள். அதற்கான அவன் அரிய நேரும் போது முதலில் அதிர்ந்து, பின் தடுமாறி தனக்கான தேவை என்ன என்று உணர்ந்து அவளையும் உணர வைக்கிறான். மிக அழுத்தமான கரு. அதை யாரையும் கலங்க வைக்காமல் நல்ல உணர்வு பூர்வமான வசனங்களுடன் அழகாக கையாண்டிருக்கிறார்.
உதாரணத்திற்கு இந்த வசனம் என்னை ரொம்பவே கவர்ந்தது.
உதாரணத்திற்கு இந்த வசனம் என்னை ரொம்பவே கவர்ந்தது.
“நம்ம அம்மா அப்பா வாழ்க்கைல நாம கெஸ்ட். அடுத்த ஜெனரேஷன் கெஸ்ட்டா வந்து, வளர்ந்து படிச்சு முடிச்சு அவங்களோட வாழ்க்கையைத் தேடி ஓடுவாங்க..”
ஹேமா சொன்ன இந்த வரிகள் நிதர்சனம். தாம்பத்தியம் என்பது குழந்தையில் தான் முடிய வேண்டும் என்று எழுதப்படாத விதியாக்கி இருக்கிறது நம் சமூகம். குழந்தை இல்லாதவர்களை தனது நாக்கு எனும் ஆயுதத்தால் குத்தி காயப்படுத்தி அவர்களை வாழவே தகுதி இல்லாதவர்களாக்கி ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறது.
இக்கதையின் மூலம் சித்தார்த் போன்றவர்கள் அவ்விதியை உடைக்க வேண்டும் என்பதை அழகாக சொல்லி இருக்காங்க. இது காதல்! அவளின் குறையை குறையாக எண்ணாமல் அவளுள் இருந்த அழுத்தத்தைப் போக்கி தன்னவளாக ஆக்கிக் கொள்கிறான்.
மிக அருமையான கதை...நிறைய விஷயங்களை சொல்லி இருக்காங்க. ஜெனி, சித்தார்த் இடையே மலரும் அந்த காதல் அத்தனை அழகு..இருவரும் பேசிக் கொள்ளும் இடங்கள் மிகவும் ரசித்தேன்...மெல்லிய ஊடலுடன் கூடிய வசனங்கள்...மொத்தத்தில் அருமையான காதல் கதை....மிஸ் பண்ணாம படிங்க..
வாழ்த்துக்கள் ஹேமா!
*********************************************************************************************************************
Ms. Amirtha Seshadri - Nov 29, 2018
காதல் கஃபே பிடிச்சு இருக்கு. ஜெனி சான்ஸே இல்ல, பொண்ணு என்னமா கழுவி கழுவி ஊத்துது. அதை அசால்டா துடைச்சு போடும் சித்தார்த். 😍😍😍😘😘😘
படிச்சு முடிச்சாச்சு காதல் கஃபே . ஜெனி, சித்தார்த் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் அழகு, ஒரு கணமான தருணங்களை இலகுவாக படிக்க முடியும் என்று கதையை நகர்த்தி இருக்கிறீர்கள்.
“தாய்மைங்கிறது அழகு தான். அதுக்காக அது மட்டுமே வாழ்க்கை இல்லடா. நாம நமக்காக வாழறதும், அந்த வாழ்க்கைல எவ்வளவு நிம்மதியா நிறைவா இருக்கோம்ங்கிறதும் தான் எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியம்....”
எத்தனை பேர்களுக்கு இந்த வார்த்தைகள் நெஞ்சின் அடி ஆழம் தொட்டு இருக்கும் என தெரியவில்லை. ஆனால் நான் ரசித்தேன்.
சைக்கலாஜி என்ன சொல்லுது தெரியுமா, குழந்தைங்கிறது ஒரு வகையில நம்ம ஈகோவை நிரப்பி ‘என்கிட்டயும் விளையாட ஒரு பொருள் இருக்கு பாரு’ன்னு உலகத்துக்குப் பெருமையா சொல்ல ஒரு கருவி... இட்ஸ் எ பீல் ஆப் பொசஷன்..
இந்த வரிகளும் தான். அருமையான கதை படித்த திருப்தி. நன்றி.
**********************************************************************************************************************
Ms. வேதா கௌரி - Dec 9, 2018
காதல் கபே – ஹேமா ஜெய்
“துரத்தி சென்று காதலித்தால்
தூக்கி எறிந்து விடுகிறாய்
துரம் நின்று காதலித்தால்
பாராமல் ரசித்து பார்க்கிறாய்
காதலின் இலக்கணம்
கற்று தருவாயா “
என காதல் கவிதையோடு சுற்றும் சித்தார்த் ...அவனின் காதலியை கரம் பிடித்தானா?
“எங்கிருந்தோ வந்து
அன்பை தந்து
சின்ன சின்ன சண்டையிட்டு
அடிக்கடி சிறு கண்ணீரையும்
பரிசளிக்கும் உனக்கு
எதை தருவேன்
பரிசாக என்னையே தருவேனோ ..?
உனக்கான என் காதல்
ஒரு உமையின் கடிதம் “
ஏன் இவ்வளவு வேதனை ஜெனியின் வாழ்வில் ..இவளின் வேதனைகளை களைந்து சித்தார்த் சந்தோஷ வானில் சிறகடிக்க வைப்பானா ?இவர்களின் வாழ்வில் நடந்தது என்ன ? இவற்றின் விடை காண தோழி ஹேமா ஜெய்யின் “காதல் கபே “ என்னும் நாவலை ஆமேசான் கிண்டிலில் படியுங்கள் ...
அழகான பிரஞ்ச் பின்னணியில் ,பாண்டிச்சேரியின் அழகோடு அருமையான சுவையான நகைச்சுவையுடன் கூடிய கதையை கொடுத்து இருக்கிறார் தோழி ஹேமா ... வாழ்த்துக்கள் ஹேமா ..*************************************************************************************************************
“துரத்தி சென்று காதலித்தால்
தூக்கி எறிந்து விடுகிறாய்
துரம் நின்று காதலித்தால்
பாராமல் ரசித்து பார்க்கிறாய்
காதலின் இலக்கணம்
கற்று தருவாயா “
என காதல் கவிதையோடு சுற்றும் சித்தார்த் ...அவனின் காதலியை கரம் பிடித்தானா?
“எங்கிருந்தோ வந்து
அன்பை தந்து
சின்ன சின்ன சண்டையிட்டு
அடிக்கடி சிறு கண்ணீரையும்
பரிசளிக்கும் உனக்கு
எதை தருவேன்
பரிசாக என்னையே தருவேனோ ..?
உனக்கான என் காதல்
ஒரு உமையின் கடிதம் “
ஏன் இவ்வளவு வேதனை ஜெனியின் வாழ்வில் ..இவளின் வேதனைகளை களைந்து சித்தார்த் சந்தோஷ வானில் சிறகடிக்க வைப்பானா ?இவர்களின் வாழ்வில் நடந்தது என்ன ? இவற்றின் விடை காண தோழி ஹேமா ஜெய்யின் “காதல் கபே “ என்னும் நாவலை ஆமேசான் கிண்டிலில் படியுங்கள் ...
அழகான பிரஞ்ச் பின்னணியில் ,பாண்டிச்சேரியின் அழகோடு அருமையான சுவையான நகைச்சுவையுடன் கூடிய கதையை கொடுத்து இருக்கிறார் தோழி ஹேமா ... வாழ்த்துக்கள் ஹேமா ..*************************************************************************************************************
Ms. தீபி - Dec 1, 2018
மிகுந்த நன்றிகள் தீபி🙏🙏! Kripnythaa Deepi
காதல் கஃபே - தீபியின் பார்வையில்... (என் டைம்லைனில் வராத ரிவியூக்களை மட்டும் தனியாக பகிர்ந்து கொள்கிறேன் நட்புகளே!)
காதல் கஃபே - தீபியின் பார்வையில்... (என் டைம்லைனில் வராத ரிவியூக்களை மட்டும் தனியாக பகிர்ந்து கொள்கிறேன் நட்புகளே!)
கலாச்சாரங்கள் கண்டங்களில் வேறுபட்டாலும் காதலின் சுவடுகள் காலம் கடந்தாலும் வேறுபடாது என்பதை மிகவும் எளிய முறையில் அழகிய நடையில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளருக்கு பாராட்டுகள். சித்தார்த்தின் சித்தாந்தமும், ஜெனியின் ஜெகஜால வாயும் பாலாடைக்கட்டியை பனித்துளியாக உருக செய்திடும் மையல் மிகவும் அருமை.கௌரியும் ,சதாவும் பெற்றோரின் புரிந்துணர்வை பக்கம் பக்கமாக பேசாமல் மிகவும் அருமையாக உணர்த்தியுள்ளார்கள்.சீஸ் தயாரிப்பும், பிரெஞ்ச் உணவுகளும் பிரான்ஸ் சென்று வந்த உணர்வை அளித்தன என்றால் மிகையாகாது. அழுத்தமான விசயத்தை அழுத்தமாக்காமல் அழுகையில்லாமல் கூறிய அழகே "காதல் கஃபே"
*********************************************************************************************************
Ms. மதி நிலா அவர்களின் பார்வையில் - Feb 3, 2019
“நம்ம அம்மா அப்பா வாழ்க்கையில நாம கெஸ்ட்.. அடுத்த ஜெனரேஷன் கெஸ்டா வந்து, வளர்ந்து படிச்சு முடிச்சு அவங்களோட வாழ்க்கையை தேடி ஓடுவாங்க..”, சுதாமாவின் ரிவ்யூவில் இடம்பெற்றிருந்த வரிகள் என்னை நேராக கஃபேவிற்குள் இழுத்துச் சென்றது..!!
சித்துவின் சீஸின் மனமும் ஜெனியின் பேக்கரி மனமும் ஒரு பெர்பெக்ட் காம்போ..!!
எனக்கு உங்கள் கதையில் மிகவும் பாதித்த கதாப்பாத்திரம் என்றால் அது காத்ரின் (எ) கௌரிதான்..!! வேறு வேறு பிண்ணனிகள் கொண்ட இருவர் திருமணம் செய்துகொள்ளும்பொழுது ஒரு பெண் தன்னை எப்படியெல்லாம் தனது புகுந்த வீட்டினரை இம்ப்ரெஸ் செய்ய முயற்சி செய்கிறாள் என்பதை அழகாய் பிரதிபலிக்கும் கதாப்பாத்திரம்..!! உடை முதல் தனது இயல்புவரை எத்தனை எத்தனை மாற்றங்கள் அந்தப் பெண்ணிடம்..!!
தனது சுயம் துலைத்து மற்றவர்களை மகிழ்ச்சி படுத்தி அதில் மகிழ்ச்சி காண்பதென்பது ஒருவித மாயைதான் என்பதை அழகாய் உணர்த்தியிருக்கிறீர்கள்..!!
சித்தின் காதல்..!! ரொம்பவே எதார்த்தமானதாக இருந்தது.. உண்மையில் அது எதிர்பார்ப்பு எதுவும் இல்லாததாய்..!! ஜெனியை அப்படியே நேசிப்பது..!!
அதிலும் இவனது வரிகள், “குழந்தைங்கறது இட்ஸ் நாட் அ சொல்யூஷன் ஆர் அ ரெமடி.. பல பேருக்கு அமையும். சில பேருக்கு அமையாது.. வாய்ப்பு இல்லைன்னா அடுத்து என்னென்னு போகணுமே தவிர இது ஒரு குறையா நினச்சு அதுலயே தேங்கி நிக்கறது பத்தாம்பசலித்தனம்..”, வாவ் போட வைக்கிறது..!!
ஒரு திருமணம் என்றால் அது குழந்தையில் முடியவேண்டும் என்ற சமூகத்தின் பார்வையை உடைத்து புதிதாய் ஒரு வழியை வகுத்திருக்கிறது இந்த கஃபே..!!
இனிப்பும் கசப்பும் கலந்த காபியைப்போல் காதல் கஃபேவை வித்யாசமாக பரிமாறியதில் இன்னும் அதன் சுவை நீங்ககாத்தாய்..!!
வாழ்த்துக்கள் ஹேமா சிஸ்..!!
******************************************************************************************************************
Hi Hema
Read "Kadhal Cafe". excellent story!! forward thinking, rightly needed message in this era. You have taken practical approach to this sensitive issue. shows your maturity!superb narration and flow. Have read all your stories. You have established yourself as a competent author again through this story.
Expecting more from you.
Pri
Mar 17 2019
************************************************************************************************************************
Ms. Esther Joseph on Jan 24,2019
Hi sis. Kadhal cafeippo dhan padichen.. simply sooperb sis.. Enaku romba pudichadhu.. jeni cute..sidhu awesome.. and Great.. evelo love Jeni Mela.. sooperb sis
Pri
Mar 17 2019
************************************************************************************************************************
Ms. Esther Joseph on Jan 24,2019
Hi sis. Kadhal cafeippo dhan padichen.. simply sooperb sis.. Enaku romba pudichadhu.. jeni cute..sidhu awesome.. and Great.. evelo love Jeni Mela.. sooperb sis