எழுதும்போது நமக்கு தோன்றும் உணர்வுகளை வாசிக்கும்போது புரிந்து கொள்ள இயன்றால் தான் அந்த எழுத்து சரியாக போய் சேர்ந்ததாக கொள்ளலாம். உங்கள் மதிப்புரை மூலம் அந்த உணர்வுகள் இயல்பாக கடந்திருப்பது அறிந்து நிறைவாக உள்ளது.
நீங்கள் சொன்னது போல சாரு நம்மை ஒத்த இயல்பான பெண். கதையை வடிவமைத்து நிறைவு செய்தபின் என் மனதிற்கும் நெருங்கியவளாகிப் போனாள். வாசிப்பவர்கள் வாசித்து இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்துச் சொல்லும்போது எழுதும் ஒவ்வொருவருக்கும் வார்த்தையில் விவரிக்கமுடியாத நெகிழ்வும் பூரிப்பும் தோன்றும். அப்படிப்பட்ட அழகான தருணம் இது எனக்கு.
மகிழ்ச்சியும் நன்றியும் அலமு! உங்கள் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!🙏
----------------------
"ஆயிரம் ஜன்னல் மனசு" Alamu Palaniappan அவர்களின் பார்வையில் -
----------------------
"ஆயிரம் ஜன்னல் மனசு " ஹேமா
----------------------
"ஆயிரம் ஜன்னல் மனசு" Alamu Palaniappan அவர்களின் பார்வையில் -
----------------------
"ஆயிரம் ஜன்னல் மனசு " ஹேமா
சாரு , பிருத்வி . புத்தகத்தை வாசித்து முடித்த கணத்தில் இருந்து இருவருமே என் மனதில் வலம் வருகிறார்கள். முன்னுரையே வித்தியாசம் . புரியல என்ன சொல்ல வரீங்கனு . ஆனா வாசித்து முடித்தவுடன் வியக்க வைத்தது .
வரேன் கதைக்கு. சாரு நாம் தினம்தினம் பார்க்கும் ஒரு பெண். தாயில்லாமல் பெரியம்மாவின் வளர்ப்பில் வளர்ந்து அவர்கள் பாரத்து திருமணம் செய்த ப்ரித்வியுடன் இனிய கனவுகளோடு அமெரிக்காவைநோக்கி பயணப்படுகிறாள். அங்கு அவர்கள் வாழ்க்கையும் அவனின் கல்லூரித்தோழியின் தலையீட்டால் அவர்கள் வாழ்க்கை செல்லும் திசையுமே கதை. போதும் இதற்கு மேல் நான் சொல்வதைவிட நீங்கள் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். நான் சொன்னால் சுவாரசியம் போய்விடும்
வெளிநாட்டின் வாழ்க்கை முறையும் இங்கிருந்து செல்பவர்கள் எவ்வாறு தங்களை அதனுடன் பொருத்திக்கொள்கிறார்கள் என்று ஆரம்பிக்கும் சாருவின் வாழ்க்கையை இதை விட அழகா சொல்ல முடியுமா என்று தெரியவில்லை!புதுமணத்தம்பதிகளுக்கே உரித்தான ஊடல்களும் எதிர்பார்ப்புகளும் .....அழகு.
சாருவின் வார்த்தைகள் "கிள்ளிப்பார்ப்பேனாம் .... உங்க கைல .... என்னைக் கிள்ளினா உங்க மனசு தாங்காது பாருங்க..... ",அவளின் சந்தோஷ ஆர்பரிப்புக்கு "ஷ் ... பாருடா ..... அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்ததும் உனக்கு கூட ரெமாண்டிக்கா பேச வருது" ப்ரித்வியின் பதிலும் ... அட அடா ....
ஆண் பெண் நட்பு எவ்வளவு உயர்ந்ததா இருந்தாலும் அதற்கென்று எல்லைகளும் உண்டு.
உங்கள் வார்த்தைகளில் "நட்பு என்ற எல்லையில் நிற்காமல் , அதைத் தாண்டியும் செல்லாமல் , பாதியில் விடுபட்டு , வருடங்கள் கடந்து இப்போது மீண்டும் கண் முன்னால் ..... அதுவும் இப்படி அருகருகே வெகு நெருக்கமாய் வசித்தபடி , பழைய நட்பை ஆழமாய் புதுப்பித்துக் கொண்டு.... " என்ன ஒரு வரி இது.
ஒரு இக்கட்டான கட்டம் இது . கத்தி மேல் நடப்பது போன்ற நிலை ப்ரித்விக்கு . அதை எப்படி கடக்கப்போகிறான் ப்ரித்வி. இந்த இடத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்த கதை அதன் பிறகு வேகத்தை குறைக்கவே இல்லை.
பல தகவல்கள் பனிப்புயல் மற்றும் பனிக்காலம் குறித்து. கேள்விப்பட்டிருந்தாலும் வாசிக்கும் போது எங்களையும் தாக்கியது.
"பட்டம் பறக்கிற திசையெல்லாம் அதை பறக்க அனுமதிக்கக்கூடாது . அதோட கயிறு உன்கிட்ட தான் இருக்கு.... கவனமா இரு....தேவைப்பட்டா இழுத்துபிடி . அவ்ளோ தான என்னால் சொல்ல முடியும் ." மெர்ஸியின் அறிவுரை.
என் இயல்புக்கு மாறா " என்புருஷன் எனக்கு மட்டும் தான்னு உரிமை போராட்டம் பண்றதோ .... சே.... நினைக்கவே அருவருப்பா இருக்கு ... எந்த திசையில் பறக்கனும்கிறதை பட்டம் தான் தீர்மானிக்கணுமே தவிர அது என் கழுத்தில் கிடக்குற இந்தத் தாலிக்கயிறு இல்ல... " என்ற அவளின் தன்மானமும் நம்மைப் போன்ற ஒரு பெண் சாரு.
அவள், தனது ஒவ்வொரு சங்கடமான தருணத்திலும் தனக்குத்தானே பல நேர்மறை சிந்தனைகளோடு கடப்பதில் ஒவ்வொரு நடுத்தர வர்க்க பெண்ணையும் நம் கண் முன் கொண்டுவருகிறாள். எந்தச்சூழலிலும் எல்லாப் பெண்களுக்கும் தோன்றும் நியாயமான பயம் அவளது எதிர்காலம் குறித்து. அதுவும் திருமணமாகி ஒரு வருடத்திறகுள்ளேயே எனும் போது அவளது பரிதவிப்பு....
இந்தியத்திருமணங்கள் பற்றிய நண்பர்களின் கேள்விகளுக்கு
"எங்க அரேஞ்ஜ்ட் மேரேஜஸ் சக்சஸ் ஆகுறதுக்கு எல்லாத்தையும் விட முக்கியமான ஒண்ணு இருக்கு , அது என்ன தெரியுமா? " அது எங்க ஊர் பெண்களோட சகிப்புத்தன்மை .... " இரண்டு பேரும் அட்ஜஸ்ட்பண்ணி போகனும்னு சொன்னாலும் வெற்றி அடைஞ்ச திருமணங்களை எடுத்துப்பார்த்தா அதுல நிச்சயம் ஒரு பெண்ணோட காம்ப்ரமைஸ் இருக்கும்"
இது போல பல எதார்த்த வசனங்கள். இறுதியில் போலீசாரின் கேள்விகளுக்கு அவளின் பதில்களும் , ப்ரித்வியை நோக்கி பாயும் அவளது சாட்டையடி கேள்விகளும் தன் மேலேயே கழிவிரக்கம் கொண்டு மறுகிய சாருவா இவள் , இப்படி விஸ்வரூபம் எடுத்தது என்ற எண்ணம் நமக்கு வருகிறது .
இது தானே நாம் . குடும்பம் ஆகட்டும் வெளியிடங்கள் ஆகட்டும் எங்கு எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி விசுவரூபம் எடுப்பவர் தான் நாம் . ஆக நம்மைப்போன்ற ஒரு பெண் தான் சாரு.
சாரு என்றும் மனதை விட்டு நீங்க மாட்டாள் . ப்ரித்வி நல்ல கணவன் ஆனால் நட்புக்கென்று ஒரு இடம் உண்டு என்று வகைபடுத்த தெரியாமல் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான். தீக்க்ஷா போல் தான் இன்று பல பெண்கள். "வேலை வேலை என்ற ஒன்றைப்பிடித்துக்கொண்டு பல சந்தோஷங்களை இழந்து கொண்டு, தான் தன் சந்தோஷம் மட்டுமே முக்கியம் அடுத்தவர் ,அது தன் கணவன் மற்றும் மகனே ஆனாலும் சரி நண்பணின் மனைவியானாலும் சரி அதைப்பற்றி எனக்கு என்ன என்று வாழ்பவர்கள்..
"எத்தனை மகத்துவமான நட்பாக இருந்தாலும் சரி, ஆண் நட்போ , பெண் நட்போ அது குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடப்படும்போது தான் முழுமையாகப் பூரணத்துவம் அடைகிறது "உங்கள் எழுத்துகளான இதுதான் உண்மை. கதையின் highlight too.
வாழ்த்துகள் ஹேமா. இன்னும் இது போல பல கதைகளை எதிர்பார்க்கும் நான் .
புத்தகம் மட்டுமே இப்பொழுது . சில நாட்களில் will be available in kindle.
______________________
______________________
Ms. Nithya - Jun 12,2020
ஆயிரம் ஜன்னல்... Is super, akka. கலக்கறீங்க
You know, I've seen myself in chaaru many times. Leaving a high profile job, going to a small profile job with such high qualifications, even after then no realisation from husband side, I've also gone thro' alot. You have described her feelings so nicely. Since it's story, the hero changed so fast, right. In real life it's very rare.
A touche story.
A touche story.
4 comments:
வணக்கம் ஹேமா ஜி.. kindle இல் படிக்க ஆரம்பித்த புதிதில், எதேச்சையாக உங்கள் விழிகள் தீட்டும் வானவில்லை படித்தேன், தெளிந்த நீரோடை போன்ற கதையும் பாத்திரங்களை அப்படியே உள்வாங்க வைக்கும் உங்கள் எழுத்து நடையில் லயித்து விரும்பி படித்தேன்.. பிறகு உங்கள் அனைத்து கதைகளையும் தேடி படித்தேன்..
இப்பொழுது தான் ஆயிரம் ஜன்னல் மனசு படித்தேன்.. தோழி அலமு கூறியது போல எனக்கும் முன்னுரையில் எதை பத்தின கதை என்று யூகிக்க முடியல.. உள்ளே படித்தால் எவ்வளவு நுட்பமான விஷயத்தை எடுத்து இருக்கீங்கன்னு வியந்தேன்..
Most of the ladies வாழ்க்கையில் கல்யாணம் முடிந்து சில பல வருடங்கள் இது போன்ற சூழ்நிலையை நிச்சயம் கடந்து இருப்பார்கள்.. அதென்னவோ தோழிகளை பற்றி மனைவியிடம் கூறும் போது அவர்களின் தனி திறமை, speciality, blah, blah என்று தனக்கே ஏதோ பெருமை கிடைத்தது போல பீற்றும் கணவன்மார்கள், மனைவியின் அடிப்படை கல்வி என்ன, வேலை என்ன என்று கூட தோழிகளிடம் சாதாரணமாக கூட கூறுவது இல்லை.. என்றாவது நேரில் பேசும் போது 'அட அங்கயா படிச்சீங்க, என்னது campusலயா போனீங்க'என்று அதிர்ச்சி அடைவர்..
'நாங்களும் flash back ஓட்டினா நாடும் தாங்காது நீங்களும் தாங்க மாட்டிங்க'என்று நாம் தான் அந்த இடங்களை கடந்திருப்போம், பிரித்வி போல சிலரே புரிந்து கொண்டிருப்பார்கள்..
எவ்வளவு அழகாக present பண்ணிருக்கீங்க தெரியுமா.. சான்ஸே இல்ல.. வேலை, தன் சுயம் என்று சாரு மருகும் இடம் அநேகமாக எல்லாருக்கும் உண்டு..
முக்கியமான இடத்தில் cut பண்ணி நீங்கள் தொடரும் போட்டாலும், பிரித்வி மனநிலை அறியும் முன்பே சாரு வைத்த நம்பிக்கை அளவே நானும் உணர்ந்தேன்.. சாரு character ஐ அவ்வளவு உள்வாங்க வைத்தீர்கள்..
கதை மிகவும் கனமாக சென்று கொண்டிருந்த போது 'இந்த முசுடுக்கு பொண்டாட்டிய கரெக்ட் பண்ணவே தெரியாது, நான் வேற கற்பனை குதிரையை எங்கயோ விட்டுட்டேன்' இடத்தில் பக்கென்று சிரித்து விட்டேன், செம்ம ஜி..
பல மாதங்களுக்கு முன் படித்த பனி இரவும் தனி நிலவில் பார்த்த பனியை இன்னும் நான் மறக்கவில்லை.. இதில் இன்னும் அருமையாக இருந்தது கொஞ்சம் பட படப்புடன்..
சந்தர்ப்ப சூழ்நிலையால் bowl பண்ண வந்து வச்சிக்கோங்கடா வச்சிக்கோங்கடா என்று எதிரணிக்கு runகளை வாரி வழங்கி, பின்பு நின்று ஆடி targetஐ just like that assault பண்ணும் கை தேர்ந்த batsman போல இருந்தது சாருவின் செய்கை..
இயல்பான நுட்பமான கதை..நம்மில் ஒருத்தி போல சாரு.. புது லொகேஷன்.. அங்கு வாழ்க்கை முறை.. பனி பொலிவு.. கணவன் மனைவி understanding என்று எல்லாமே வேற லெவல் கலக்கீடீங்க..
மிக்க நன்றி அனு :) இயன்றால் இந்த முகநூல் இணைப்பைப் பாருங்க https://www.facebook.com/hema.jay.96/posts/954447388254019
I am not there in Facebook madam.. somehow I read it.. thanks a lot for your lovely compliments maam.. பொறுமையா படிச்சி sweet னு வேற சொல்லிடீங்க.. feeling like I am sitting on top of the world😊😊.. thank you..
Actually the pleasure is mine Anu :) :)
Post a Comment