"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, December 12, 2016

கனமாய் கரையும் கணங்கள்

எழுதும்போதே உணர்ந்தேன், இது சற்றே பெரிய சிறுகதை என்று. ஆனாலும் குறைக்க மனம் வரவில்லை. 'அப்படியே ஒரு ஹவுஸ் வைப்பின் வாழ்க்கை, நான் என்னை உணர்ந்தேன் இதில்' என்று கருத்துக்கள் வந்தபோது நீளம் பெரிய விசயமாக தோன்றவில்லை. நீங்களும் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

Sunday, December 4, 2016

வானப்ரஸ்தம்

லேடிஸ் விங்க்ஸ் தளத்தில் நடந்த 'தீபாவளி சிறுகதை போட்டி - 2016' -ல் முதல் பரிசு பெற்ற சிறுகதை இது. மதிப்புமிகு நடுவர் காஞ்சனா ஜெய திலகர் அவர்கள் கதைகளை வாசித்து தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார். நடுவர் அவர்களின் கடிதத்தையும் தள நிர்வாகியின் அனுமதியுடன் இங்கே இணைத்துள்ளேன். தேர்வுக் குழுவுக்கும் , போட்டிகள் நிகழ்த்திய  லேடிஸ்விங்க்ஸ் குழுமத்தினருக்கும், பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தும் சிறகுகள் பதிப்பகத்தினருக்கும், பின்னணியில் இதற்கென உழைத்த முகமறியா தோழிகள்  அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றிகள்!   

Saturday, November 12, 2016

நாசி சூழ் உலகு


கடைக்குள் நுழைந்த அறிவு மீண்டும் ஒருமுறை தன் சட்டையையும் பேண்ட்டையும் குனிந்து பார்த்துக் கொண்டான். இருப்பதிலேயே நல்ல உருப்படி, நேற்றிரவே மடித்து தலையணைக்கடியில் வைத்தெடுத்ததால் அந்த இளபச்சை சட்டையும் க்ரேநிற பேண்ட்டும் படிமானமாக தனக்கு பொருந்தியிருப்பதாகத்தான் தோன்றியது. முடியை கோதிக்கொண்டு எதிரிலிருந்த கண்ணாடியில் தன்னுருவத்தை மீண்டுமொருமுறை பார்த்தவன், திருப்தியுடன் கைமடிப்பை சரி செய்து கொண்டான்.

Tuesday, November 1, 2016

அப்பாவின் நிழல்

குளியலறையின் கதவை திறந்து நான் வெளியே வந்த நொடி, நானாவித நறுமணங்களும் என் நாசியை சூழ்ந்துக்கொண்டன. நெய்யில் முந்திரி திராட்சை வறுபடும் மணமும், முருங்கைக்காய் சாம்பாரின் வாசமும், ஏதோ ஒரு காய் எண்ணைய்சட்டியில் ரோஸ்டாகும் காந்தல்மணமும்....

மூக்கை இழுத்து அவற்றை அனுபவித்துக்கொண்டே மீனு எல்லாம் ரெடி ஆயிடுச்சா...? நேரம் ஆகிட்டே இருக்கு...பாரு” கேசத்திலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருக்க, தலையையும் முகத்தையும் துடைத்தபடி சமையலறை வாசலில் வந்து நின்று குரல் கொடுத்தேன்.

Wednesday, October 12, 2016

ஏணிப்படிகள்

பால்யம் என்பதே தீரா சுவை கொண்ட பருவம் அல்லவா!? வாயில் அடக்கிக் கொண்ட தின்பண்டம் மெல்ல மெல்ல கரைந்து ருசி கொடுப்பது போல, அந்த பிராயத்தின் நினைவுகளை அசை போடும்போதெல்லாம் நம் அகமும் முகமும் சொல்லாமலேயே மலர்ந்து போகும். 

பள்ளி கல்லூரி காலங்களில் நம் ஒவ்வொருவருக்கும் எத்தனை வித விதமான சந்தோசங்கள், இன்ப நினைவுகள், அனுபவங்கள், படிப்பினைகள்...? ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிச்சயம் வண்ணம் சேர்த்த பருவம் இந்த பருவம். படிப்பு ஒன்றே கடமையாய், பரீட்சைகளே சுமையாய் இருந்த காலம் அது. இப்போது தூசி போல தோன்றும் விஷயம் எல்லாம் அப்போது பெருமலையாக அச்சுறுத்தின. அன்று அல்பத்தனமாக செய்தது எல்லாம் இப்போது திரும்பிப் பார்க்கும்போது அழகியலாக காட்சியளிக்கிறது.  இது தான் வாழ்க்கையினுடைய நகைமுரணும் அல்லவா...!?

Monday, September 26, 2016

எது ஆண்மை ?


அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

நா. முத்துக்குமாரின் இவ்வைர வரிகளை உணர்ந்து, அனுபவித்து, நெக்குருகி, மனம் நிறைந்து போகாத மனிதர்கள் யாரும் இருக்கமுடியாது.

Thursday, September 15, 2016

பட்டாம்பூச்சி பற பற !

ஹாய் ஃப்ரண்ட்ஸ்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க.? நலம். நலமறிய ஆவல்.

ஒரு நல்ல செய்தி - என் இரண்டாவது நாவல் 'பட்டாம்பூச்சி பற பற !' பிரியா நிலையத்தினரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

Monday, September 12, 2016

அவள் - சிறுகதை


வணக்கம்,

எப்படி இருக்கீங்க? பெயர் தெரியாத மின்முகவரியிலிருந்து வந்திருக்கிற இந்த மடலை பார்த்து விழிக்கிறீங்களா? என் பேரு முக்கியம் இல்லீங்க. நான் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் கொஞ்சம் கேளுங்க,ப்ளீஸ்! 

இது எனக்கு ரொம்பவே நெருக்கமான ஒரு பொண்ணைப் பத்தின கதை தான்.

Monday, August 29, 2016

வாய்ப்பூட்டு

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - சமயங்களில் இந்த வார்த்தைகள் பிரபல கதையின் பெயரையோ, சினிமாவையோ மட்டும் நமக்கு நினைவூட்டுவதில்லை. சக மனிதர்களிடமிருந்து சொல்லாலோ, செயலாலோ நாம் அடி வாங்கிக் கொள்கிற தருணங்களில், விரக்தியோடோ வெறுப்போடோ இவ்வார்த்தைகளை மௌனமாக உச்சரிக்காதவர்கள் வெகு குறைவு.  

Wednesday, August 24, 2016

குட்டீஸ் சுட்டீஸ்

நான் ரெகுலரா குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை பார்ப்பதுண்டு. மனசு சந்தோசமா இருந்தாலும் சரி, சோர்வாக இருந்தாலும், இல்ல என்ன பண்றதுன்னு புரியாம முழிச்சிக்கிட்டு உட்காரும்போதும் சரி, அந்த மாதிரி நேரங்களில் பெரும்பாலும் என்னோட சாய்ஸ் இந்த நிகழ்ச்சியோட பழைய பதிவுகளை எடுத்துப் பார்ப்பது தான். என் பசங்களுக்கும் இந்த நிகழ்ச்சி பிடிக்கும் என்பதால் அவர்களும் முனகாமல் டிவியை கொஞ்ச நேரம் எனக்கு விட்டுத் தருவாங்க.

Monday, August 22, 2016

ஹலோ நண்பர்களே,

இந்த வலைப்பதிவு உங்களை இனிதே வரவேற்கிறது. தமிழில் நிறைய எழுத வேண்டும் என்ற ஆசையில் துவங்கப்பட்ட முயற்சி இது. நிறைய கதைகள் வாசிச்சு,  ஆன்லைனில் கிடைக்கும் புத்தகங்கள் படித்து, கண்ணுல படுற பொட்டலம் கட்டிக் கொடுக்குற பேப்பரைக்  கூட விடாம படிச்சு,  நாமும் எழுதலாமே, எழுதித்தான் பார்க்கலாமே என்ற விபரீத ஆசையில் நானும் கதைகள் எழுத ஆரம்பிச்சிருக்கேன்.