"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, August 22, 2016

ஹலோ நண்பர்களே,

இந்த வலைப்பதிவு உங்களை இனிதே வரவேற்கிறது. தமிழில் நிறைய எழுத வேண்டும் என்ற ஆசையில் துவங்கப்பட்ட முயற்சி இது. நிறைய கதைகள் வாசிச்சு,  ஆன்லைனில் கிடைக்கும் புத்தகங்கள் படித்து, கண்ணுல படுற பொட்டலம் கட்டிக் கொடுக்குற பேப்பரைக்  கூட விடாம படிச்சு,  நாமும் எழுதலாமே, எழுதித்தான் பார்க்கலாமே என்ற விபரீத ஆசையில் நானும் கதைகள் எழுத ஆரம்பிச்சிருக்கேன்.

இதுவரை ‘நான் நீ நாம் வாழவே’ மற்றும் ‘பட்டாம்பூச்சி பற பற’ என்ற இரு நாவல்களை எழுதி இருக்கேன். இதுல முதல் நாவல் ‘நான் நீ நாம் வாழவே’ ஜூன்-2016-ல் பிரியா நிலையத்தினரால் புத்தகமாக வெளியிடப்பட்டு, அச்சமயம் நிகழ்ந்த சென்னை புத்தகக்கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்ப ‘பனி இரவும் தனி நிலவும்’ என்ற கதையை எழுதிட்டு இருக்கேன்.  

என் எழுத்துக்கு/கதைகளுக்கு  வருகிற விமர்சனங்களையும் பின்னூட்டங்களையும் சேகரிச்சு வச்சுக்கணும்ங்கிற ஆசையில் இந்த ப்ளாக்-கை துவங்கியிருக்கேன். அப்பப்ப நடக்கும் விஷயங்களை,  மனதை பாதிக்கும் செய்திகளை, நான் எழுதுகிற சிறுகதைகளை இங்க பதிவிடணும்னு ஒரு எண்ணம்.

பார்க்கலாம், எப்படி போகுதுன்னு..!? 

4 comments:

vathaniprabhu said...

Hai hema ....
congrats and all the best...

HemaJay said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, மது !

Kamatchi Selvarajan said...

Hi mam..

Unga first two stories oda link iruntha kudunga... பனி இரவும் தனி நிலவும் story romba nalla iruku.. but heroin oda parents problem konjam romba episodes varamari iruku.. But still I love the way of yourwritting.. all the very best for you !!

HemaJay said...

:)