Ms. Azhagi Nov 19 2023
அன்பான அதிதிக்கு...
Hema Jay
நீண்ட நாட்களாக உங்கள் கதையைப் படிக்க வேண்டும் என்கின்ற ஆசை இப்போதுதான் நிறைவேறியது மேம். உங்கள் எழுத்தை விமர்சனம் செய்யும் அளவிற்கு எனக்கு அறிவும், அனுபவமும் கிடையாது. அப்போ எதுக்கு இந்த விமர்சனம்னு கேட்கிறீங்களா? ஒரு நல்ல படைப்பைப் படித்துவிட்டு மௌனமாகக் கடந்து செல்ல முடியவில்லை.
ஆதி, அதிதி... இரு துருவங்கள். அந்த இரு துருவங்களையும் எத்தனை அழகாக ஒன்றுசேர்த்து வைத்திருக்கிறீர்கள்!
அழகாகக் கால் நீட்டி, கையைத் தலையணையாக்கி, டைப் பண்ண வேண்டுமே என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் உங்கள் எழுத்தைப் படிப்பது அத்தனை சுகமாக இருந்தது.
அதிதி போல நான்கு பேர் ஒவ்வொரு ஊரிலும் இருந்தால் நாடே திருந்திவிடும் என்று தோன்றுகிறது.
இயந்திரத்தனமான ஆதி இறுதியில் இப்படி இளகிப்போனானே என்றிருந்தது. அருமை. கடைசி அத்தியாயங்கள் மிகவும் இனிமை. ஆதிக்கும் ரொமான்ஸ் வருகிறதே!
மிக்க மகிழ்ச்சி.
ஒரு நல்ல படைப்பைக் கொடுத்த உங்களுக்கு நன்றி.
அன்புடன் அழகி.⚘
All reactions:
9Amirtha, Chitrasaraswathi and 7 others
Ms. Divya Sivakumar Nov 19 2023
அன்பான ஹேமாவுக்கு,,,
வேற என்ன சொல்ல,எதை சொன்னாலும் அது ஈடாகாது...
ஒவ்வொரு கதைலயும் ஒவ்வொரு விதமான ஜோனரை தொட்டு,என் பார்வை வட்டத்தை விரிவடைய வைக்கரீங்க..
Thanks for that...
Ms. Selvarani Nov 1 2023
அன்பான அதிதிக்கு.
மனதை கொள்ளையடிக்கும் எழுத்து
.
மெல்லிய நுண்ணுணர்வுகளை நம்முள் கடத்தும் கதை.அதிதி அழகான தேவதை.ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் ஒரு பிரேக் எடுத்தால் தான் வாழ்வின் அழகியல் புரியும்.அம்மா தானே அப்பா தானே.எங்கே போய் விடப் போகிறார்கள்?அவர்களுக்கு வேறு வேலை இல்லை.எப்போ பார்,சாப்பிட்டியா தூங்கினியான்னு!
ஆதியின் பரபரப்பான வாழ்வில் ஒரு திருப்பம்.அம்மாவின் மொட்டையில் எனக்கும் கண் கலங்கிவிட்டதே! பக்கத்தில் இருக்கும் வைரங்கள்
நம் கண்களுக்கு தெரிவதில்லை.அப்படி வைரத்தை கண்டு பிடிக்கிறான் ஆதி.
ஒரு தற்கொலையை கடக்க உதவும் தேவதைகள் நம்மை சுற்றி இருக்கிறார்கள்.அவர்களைக் கொண்டாடுவோம்.
All reactions:
6Selvarani, Suresh and 4 others
Ms. Kokila Balraj Nov 1 2023
அன்பான அதிதிக்கு
Hema Jay
ஆதன் இன்றைய IT இளைஞன்
உறவுகள், உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன்
அதிதி மனிதர்களை அவர்களின் உணர்வுகளை மதிப்பவள், அதற்கேற்ற பணி
இருவரின் பெற்றோர்கள், அவர்களின் பின்னணியும், பிணைப்பும்...
எதிர்மறையான எண்ணங்கள் கொண்டவர்கள் இணைவதை அழகாக எடுத்து சென்ற விதம் அருமை
ஆதனின் மாற்றம் இயல்பாக இருந்தது சிறப்பு
ஆதன் ரொம்ப ரசிக்க வச்சா ன்
Data Science material ah போய் love letter எழுத சொன்னா...
Enjoyed a lot
Ms. Bhuvana Suresh Nov 23 2023
அன்பான அதிதி. உங்க எழுத்தில் நான் படிக்கும் முதல் கதை. கதை முழுக்க அப்படி ஒரு பாசிட்டிவ் வைப். கூடவேயிருக்கரவங்கள நாம எப்பவுமே கண்டுக்க மாட்டோம். அதுவும் அம்மான்னா கேக்கவே வேணாம். நம்ம அம்மாதான! அவங்களோட கடமை நம்மள பார்த்துக்கறதுன்னு ஒரு மைண்ட் செட் . அப்படி ஒரு உறவு இல்லாதப்பதான் நமக்கு அவங்க அருமை தெரியும்.. இது எல்லா உறவுக்கு மே பொருந்தும். அதிதி பேசுற விஷயங்கள் எல்லாமுமே நூற்றுக்கு நூறு சரி. அதிதி உண்மையில் தேவதையே. தான் சந்திக்கும் எல்லா மனிதர்களிடமும் அன்பபையும் ஆதரவையும் கொடுப்பது போல் படித்த என் மனதிலும் பாசிட்டிவ் வைப். வாழ்த்துக்கள் சகி. தாங்கள் யூ அமிர்தா அக்கா. உங்க போஸ்ட் பார்த்த தான் படிக்க ஆரம்பிச்சேன். ஒரு நல்ல கதையை சொன்னதுக்கு.
Ms. Anandha Jothi Nov 19 2023
படைப்பு : அன்பான அதிதிக்கு
எழுத்தாளர் : ஹேமா ஜெய் (KKP - 39)
வெளியீடு : கனா காணும் பேனாக்கள் 2023
வைகை தளம்
அத்தியாய அளவு : 27
கதைக்கானலிங்: https://vaigaitamilnovels.com/.../kkp39-%E0%AE%85%E0.../...
ஆதன் & அதிதி :
வெற்றி என்பதை குறிக்கோளாக கொண்டு மேலும், உயர்ந்த நிலையை அடைய எண்ணும் நாயகன், அதில் தான் செய்த தவறுகள், அடுத்தவர் மனநிலை, பெற்றோரின் தன் மீதான பாசம், தோழியின் அன்பான பேச்சுக்கள் எதையும் செவி சாய்க்காமல் உயர்ந்த பதவியை மட்டுமே அடைய வேண்டும் என்பதிலே தீவிரமாக கவனத்தைப் பதித்து, தன்னுடைய ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டுகிறான். அப்படிப்பட்டவன் சற்றும் எதிர்பாராத விதமாக வாழ்க்கையில் சந்தித்த மிகப் பெரும் தோல்வியால் அடைகின்ற மாற்றம், அதற்குப் பிறகான அவனது வாழ்வியல் மாறுபாடுகள், மனநிலைகளை பற்றி ரொம்ப ரொம்ப அட்டகாசமாக சொல்லியிருக்காங்க.
அலுவலகத்தில் பணிபுரியும் பலரை வேலை நீக்கம் செய்யும் போது அவனது பேச்சும், பெற்றோரிடம் நடந்து கொண்ட முறையிலும் அவனது சுயநலம் அப்பட்டமாக தெரிகிறது. யார் எப்படி போனால் எனக்கு என்ன? என்பது போல், (ஆனால் நான்... அவன் உயர் பதவிக்கு வந்த பிறகு இப்படிப்பட்ட மேலாளர்களை ஏதாவது செய்யக் கூடும்.. அல்லது, வேலை இழந்து அவதியுறும் மக்களுக்கு ஏதேனும் உதவி, மறுபடியும் பணியில் அமர்த்தி வைக்க கூடுமோ இல்லை, அவனுக்கும் இதே கதிதானோ என்று நினைத்தேன்.)
அதிதி :
எழிமையும், அடக்கமும், சமூக அக்கறையும் கூடிய அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளும் பெண். தகப்பனாரிடம் காட்டிய பாசமும், நண்பனின் பெற்றோரிடம் காட்டிய அக்கறையும், நண்பனை அப்படி ஒரு நிலையில் காண முடியாமல் வெம்பி, கொதித்து, சத்தமிடுவதிலும்
பிரமாதமாக செயல்படுகிறார்.
அவனை மட்டுமல்ல இன்னும் பலரையும் கவுன்சிலிங் மூலம் மனதில் உள்ள இறுக்கத்தை கழைய செய்து, அவர்களை மறுபடியும் புத்துயிர் பெற உதவி செய்த இடங்கள் வெகுசிறப்பு.
அவளது தாய் மீதான பாசமும், அவரது இறப்பும், அதை நினைத்து அவள் ஏங்கும் இடமும், கோப்பட்டு கத்தும் இடமும் அவளது ஏக்கத்தை அப்பட்டமாக உரைத்தது.
அர்ச்சனா & சிவம் அருமையான பெற்றோர். மகன் மீதான பாசத்தில் அவனுக்கு பிடித்த உணவுகளை செய்து வைப்பதும், அவனது வரவை எதிர்பார்த்து காத்திருப்பதும், மகனுக்கு நேர்த்திக் கடனாக முடியை காணிக்கை செலுத்துவதும் என மனதைக் கவர்ந்த பாத்திரங்கள்.
கணேஷன் மகளுக்காகவே வாழும் ஒரு உன்னத மனிதன். மகளுக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டாரின் பேச்சைக் கேட்டு கலங்கிய இடம், நிஜமான சம்பவத்தை கண் முன் கொண்டு வந்தது.
தொடர்கதை வாசிக்க ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது. டெரராக வந்து பிறர் மனதை புரிந்து கொள்ளாமல் மிடுக்காக இருக்கின்ற நாயகன், எப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னையும், தன்னைச் சுற்றிலும் உள்ளவர்களை உணர்கிறான். 'வெற்றியை மட்டுமே எதிர்நோக்கி செல்ல கற்றுக் கொடுக்கும் பெற்றோர், அவர்களிடம் தோல்வியை தாங்கும் மனப்பக்குவத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்' என்பதை புரியும் விதமாக தெளிவாக கூறியிருக்கும் எழுத்தாளருக்கு என்னுடைய பாராட்டுகள்.
kkp39-அன்பான அதிதிக்கு ( மருத்துவம்)
Ms. Chitra saraswathi Nov 19 2023
வைகை தளத்தின் போட்டிக் கதை நட்சத்திர எழுத்தாளர்களின் கதை ஹேமா ஜெய் யின் அன்பான அதிதிக்கு எனது பார்வையில். அதிதி உளவியலில் சிறந்து மனநலம் காக்கும் பணியில் இருப்பவள். அம்மாவை இழந்து ஆசிரியரான அப்பாவுடன் ஒரே மகளாக இருப்பவள். பக்கத்து வீட்டில் அவள் அப்பாவுடன் பணியில் இருக்கும் சிவம் அவர் மனைவி அர்ச்சனா அவர்களின் ஒரே மகன் ஆதன் மென்பொருள் துறையில் உயரிய பணியில் இருப்பவன். ஆதன் படித்த பள்ளியில் இருந்து எதிலும் முதலிடம்
பெற்று பணியிலும் சிறிய வயதில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறான். ஆதன் எதிலும் பணத்தையும் பதவியையும் கொண்டு வாழ்க்கையின் வெற்றியை தீர்மானிக்கும் மனநிலையில் இருப்பவன். இவன் மூலம் தோல்வியை சந்திக்கவும் அதை எதிர்கொள்ளவும் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை சொல்வது தற்கால இளைய சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. தனக்காகவே வாழும் அப்பாவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று உள்ளூர் மருத்துவமனையில் பணியில் இருப்பவள். வாழ்க்கையை எதிர்கொள்ளத் தேவையான மனதைரியம் இருக்க வேண்டும் என்று நினைப்பவள். பணத்தைவிட அன்பும் அரவணைப்பும் வாழ்க்கைக்கு தேவையானவை என்று நினைக்கும் அதிதியின் ரசிகர்களாக நம்மை மாற்றுகிறாள். ஆதன் செய்த பணிகள் மற்றும் அவன் சந்திக்கும் நிகழ்வு தற்போதைய சூழலில் பலரும் சந்தித்து மீண்டவர்கள் பலர். திலீப் போன்றவர்கள் குறைவான சதவீதமே உள்ளனர். இரு துருவங்களாக இருக்கும் இருவரை இணைப்பது கார்ப்பரேட் என்ற பெருநிறுவனத்தின் கொள்கைதான். அழகான உளவியல் ரீதியான கதையை இயல்பாக தந்திருக்கும் ஹேமாவிற்கு வாழ்த்துகள். இவரின் எழுத்தில் நான் படிக்கும் மூன்றாவது கதை இது.
Ms. Amirtha Seshadri Nov 17 2023
Just one word review for அன்பான அதிதி
தேவி- அதிதி கான்வோல வருவது சில தருணங்கள் பேச்சுக்கானவை இல்லை என்பது போல சில கதைகள் விமர்சனங்களை கடந்த ஒரு நிலை.
SS எடுக்கனும்ன பக்கத்துக்கு ஒன்னு எடுக்கனும். அதான் விட்டுட்டேன்.
புக் போடும்போது எனக்கு ஒரு free copy தரணும். இப்பவே சொல்லிட்டேன்..
All reactions:
19You, Chitrasaraswathi, Divya Sivakumar and 16 others
Ms.ApsareezBeena Loganathan Nov 21 2023
KKP39 : அன்பான அதிதிக்கு (மருத்துவம்)
ஆசிரியர்: ஹேமா ஜெய்
மனிதர்களின் மனங்களை புரிந்து கொண்டு
மனம்
நோகாமல் வாழும் மங்கை அதிதி
கணேசனின் செல்ல மகள்...
மற்றவரை பற்றி கவலை கொள்ளாமல்
வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு
தனக்கென ஒரு கோட்பாடு கொண்டு
தன் சுகமே என வாழும் ஆதன்....
சிவம் அர்ச்சனாவின் செல்ல மகன்.....
ஆதன் முதன்மையானவன் எதிலும் முதன்மையானவனாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் ஆதனின் முதல் காதல் தோல்வியில்
இருக்க.....
அதித்தியின் திருமணம் தள்ளிக்கொண்டே செல்ல அன்னையின் பின்புலமே எனத் தெரிந்து
கலங்கி நிற்கும் அன்பு மகள்....
கணேசன் சிவம் இருவரும் பக்கத்து பக்கத்து வீடு பாலிய நண்பர்கள் என இரு குடும்பமும்
இருவர் குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து
புரிந்து நட்புடன் வாழும் குடும்பங்கள்....
ஆதனும் அதித்தியும் அவ்வாறே நட்புடன் இருக்க ....
அன்னையை காரணம் காட்டி அதிதியின் திருமணம் நிற்க
அன்னை பற்றிய காரணம் என்ன
ஆதனின் காதல் தோல்வி அடுத்து என்ன என
அனைத்தையும்
தெரிந்து கொள்ள
படிக்கவும்
அன்பான அதிதிக்கு.....
ஒரு கடிதம் எழுதினேன்
அதில் என்னை அனுப்பினேன்.....
காதலி என்னை காதலி....
அழகான கவிதையோ அற்புதமான வர்ணனைகளோ ஆர்ப்பாட்டமான வார்த்தைகளோ இல்லாத ஆழ் மனதில் நானாய் தோன்றும் அப்பட்டமான உண்மையே அழகு....
உன்னை நேசி.....அதுவே
உன்னதமான அன்பு....
எதிர்மறை எண்ணங்களை எதிர்த்துப் போராடும் மனங்களின் நேர்மறையான கருத்துக்களை கொண்டு நிதர்சனத்தை உணர்த்தும் நம்பிக்கையான வார்த்தைகளாய் அதிதி....
அருமையோ அருமை...
நன்றிகளும்
All reactions:
11ஆனந்த, Suresh and 9 others
Ms. Shanthi Nov 17 2023
மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை எண்ணங்களை போக்கி ஒரு தெளிவை கொடுக்கும் அருமையான கதை.
. ஒரு மனநல ஆலோசகரா இவளோட பொறுமையும், அறிவுரைகளும் தன்னிடம் வருபவர்களை கையாலும் விதமும் ரொம்ப ரொம்ப அருமை.
தேவி பிரவீன் இவங்களோட மாற்றம் ரொம்ப அருமையா இருந்தது
மேகலா மேல நிஜமா கோபம் தான் வந்துச்சு அடுத்தவங்க பேசறதை கேட்டுகிட்டு பெத்த மகளையும் உயிரான கணவனையும் விட்டுட்டு போனது சுத்தமா பிடிக்கல. அதுவும் ஏதாவது ஒரு கோவத்துல அவசரத்தில் எடுத்துட்டு இருந்தாலும் தெரிஞ்சிருக்காது நல்லா பிளான் பண்ணி குழந்தைக்கு சாப்பாடு எல்லாம் எடுத்து பக்கத்து வீட்டுல கொடுத்து கதவை உடைக்காத மாதிரி முட்டுக்கொடுத்து எவ்வளவோ யோசிச்ச அவங்க அடுத்தவங்களை நாம நினைக்கணும் அவங்க என்ன பேசினா என்ன நம்ம குழந்தையும் கணவனையும் நம்ம குடும்பத்தையும் பார்க்காலம்னு நினைத்திருந்தால் அப்படி ஒரு தப்பான முடிவு எடுத்து இருக்க மாட்டாங்க
வாழ்க்கையில் வெற்றி மட்டுமே எதிர்பார்க்காமல் சின்ன Using தோல்விகளையும் கடந்து வர நம் குழந்தைகளை மனதை பக்குவப்படுத்த வேண்டும். எல்லாருமே முதல் மதிப்பெண் எடுக்கணும் டாக்டர் இன்ஜினியர் தான் ஆகணும்னு நினைச்சா அப்போ அடுத்து அடுத்து இருக்கிற நர்ஸ்,கம்பவுண்டர், வார்ட் பாய், இப்படிப்பட்ட வேலைகள் எல்லாம் யார் பாக்குறது அடுத்தவங்க அழகா இருக்காங்க நல்லா படிக்கிறாங்க சம்பாதிக்கிறாங்கன்னு அடுத்தவங்களையும் நினைக்காம நமக்கு என்ன வரும் நமக்குள்ள இருக்கும் தனித்திறமை என்னென்ன கண்டுபிடித்து நம் மனதில் என்ன படி வாழ்ந்தாலே தாழ்வு மனப்பான்மை என்றால் என்ன நமக்குள்ள வராது
நல்ல சமூக சிந்தனையுடைய ரொம்ப ரொம்ப அருமையான கதை.
வாழ்த்துக்கள்
Ms. Mithra Bharani Oct 29 2023
அன்பான அதிதிக்கு
ஒரு வெறுமையான ஞாயிற்றுக் கிழமையை அழகாக மாற்றிவிட்டது. அதைவிட முக்கியமாக ஆதனைப் போலவே இயந்திர வாழ்க்கையில் சுழன்று கொண்டிருந்தவளுக்குத் தேவையான இளைப்பாறலை கொடுத்திருக்கிறது.
அடுத்த அத்தியாயங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் சிஸ்
Hema JayAll reactions:
8You, Narmadha, Jaanu and 5 others
Ms. Thoorika Saravanan Dec 3 2023
அன்பான அதிதிக்கு!
ஆசிரியர் Hema Jay
ஆதன், அதிதி
அருகருகே இருக்கும் வீட்டில் வளரும் நண்பர்கள். எதிலும் முதல் என்று ஓட்ட போட்டியை போல் வாழ்க்கை போட்டியிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் ஆதன். மனத்தின் நிறைவே முக்கியம். முதலாக வருவதோ பணம் சம்பாதிப்பதோ பெரிதல்ல என்று நினைக்கும் அதிதி.
நல்ல நண்பர்களாக இருந்தாலும் மண வாழ்க்கையில் தனித்தனி பாதையில் செல்லும் இருவரின் பாதைகளும் எப்போது இணைகிறது?
படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment