Ms. Mano Ramesh Mar 17 2024
புத்தகம்: அத்தியாயம் இரண்டு
எழுத்தாளர் : ஹேமா ஜெய்
பதிப்பகம் : கிண்டில்
பக்கங்கள்: 128
வகை: நாவல்
பின் முப்பதுகளில் இருக்கும் நாயகி பையனை ஞாயிறு காலைல ஒரு கிளாஸ்ல இருந்து கூட்டிட்டு வரதுல ஆரம்பிக்குது கதை, அதுக்கு அடுத்து கொஞ்ச நேரம் அவளோட அன்றைய நாள் பத்தின பக்கங்கள், இதுல முழுக்க அவ சமையல் பசங்களுக்கு சாப்பாடு பண்றது, பசங்க கேட்டது ஹஸ்பண்ட்க்கு புடிக்காதுன்னு ஹஸ்பண்ட்க்குன்னு தனியா சமைச்சு, அப்பறம் அவன் ஃபோன் பண்ணி நான் வெளிய சாப்பிடு வரேன்னு சொன்னதை கேட்டு அதுக்கு சண்டை போட்டு இப்படி தான் போகுது.
The great Indian Kitchen ல அவங்க வீட்ல சமையல் நடக்கறதே திரும்ப திரும்ப காட்டுறீங்களே அது போர் அடிச்சிடும்ன்னு தோணலையான்னு அந்த டைரக்டர்ட கேட்டப்போ பாக்கறதுக்கே போர் அடிக்குதே அவங்களுக்கு அதை மட்டுமே செய்ய எப்படி இருக்கும்ன்னு காட்டதான் அவளோ நேரம் சமையல் பத்தி கட்டினேன்னு சொல்லுவாரு, அது நியாபகம் வந்துச்சு இந்த பகுதிகளை படிக்கும் போது.
நிலா, மனோ இவங்க ரெண்டு பேர்ல ஆரம்பிச்சு நிலாவ சுத்தி இருக்க பல பெண்களை அவங்க வாழ்க்கையை நமக்கு அறிமுகப்படுத்தி, கூடவே 40க்கு அருகில் இருக்கும் பெண்களில் மோனோபாஸ் பத்தி பேசி, வைஷ்ணவி மாதிரி வாழ்க்கை ல இருக்கவங்களுக்கு உண்மையில் இது தான் Happy ending ன்னு காமிச்சது. Solo trip எல்லாம் போய்ட்டு வந்தாலும், என் கிட்சென் எப்படி ஆகிப்போச்சுனு, கிட்சென்ன உங்களுக்கு மட்டுமேவான இடமா பாக்கதீங்கன்னு முடிச்சு நிலாவோட ரெண்டாவது அத்தியாத்தை ஆரம்பிச்சு கதை முடியறது ரொம்ப அழகா இருந்தது.
ஹேமா க்கு பெண்களுக்கான நெறய விசயங்களை அழகா தெளிவா சுவாரசியமா சொல்ல வருது. எனக்கு புடிச்ச அந்த வகையில் அவங்களோட பலகதைகளில் இதுவும் ஒண்ணு.
Ms. Saraswathi Shanmugam Feb 18 2024
அத்தியாயம் இரண்டு
சில இடங்களில் என்னையே பார்ப்பது போல் இருந்தது. வெகு எதார்த்தமான , இயல்பான கதை ஓட்டம் .
வேலைக்கு போகும் பெண்கள் மனதளவிலான சோர்வை போக்கி கொள்வதற்கு , தன்னையே சுய அலசல் செய்துக் கொள்ள வேண்டியதை புரிய வைத்தது. வெண்ணிலா , மனோவின் மனமாறுதல்கள் அழகான மாற்றம் அருமை.
பலரின் வாழ்வின் இரண்டாம் அத்தியாத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் பாராட்டுக்கள்
Ms. Selvarani Feb 18 2024
அத்தியாயம் இரண்டு.
மனித மனங்களின் விசித்திரம் பற்றி அலசி ஆராய்ந்து இருக்காங்க.நாற்பதுகளில் இருக்கும் தம்பதியினர் அவசியம் படிக்க வேண்டிய கதை.இந்த வயதில் ஒரு தொய்வு ஏற்படுவது இயற்கை.பிள்ளைகள் படிப்பு, உடல் உபாதைகளின் ஆரம்பம், ஆபீஸ் நெருக்கடி என பல விஷயங்கள் நெருக்கும்.கணவன் மனைவி உடலளவிலும் மனதளவிலும் தள்ளிப் போதல்.
நிலா மனோ தம்பதியினர் இந்த நெருக்கடியில் சிக்கி மீள்கிறார்கள்.நிலாவின் சுயபரிசோதனை அனைத்துப் பெண்களும் செய்து கொள்ள வேண்டும்.பத்மாவுக்கு இருக்கும் தெளிவும் ஸ்வேதாவின் எண்ணங்களும் நிலாவை யோசிக்க வைக்கிறது.எல்லாவற்றிலும் பெஸ்ட்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மனோவும் சோஷியல் மீடியாவில் வாள் சுழற்றுவதை விட குடும்பத்தில் நேரம் செலவிடுவதன் முக்கியத்தை உணர்கிறான்.
நல்ல ஒரு மனோதத்துவ நிபுணரை சந்தித்த உணர்வு.
Ms. Geetha Feb 28 2024
Read துளிர்த்தெழும் தளிர்கள் அண்ட் அத்தியாயம் இரண்டு...
ரொம்ப ரொம்ப யதார்த்தமான நிதர்சனமான உண்மையான இப்போதய பெண்களுக்கு தேவையான கதைகரு கொண்ட கதைகள்...
இது எல்லார்க்கும் வராது.... வாழ்த்துக்கள் ஹேமா....
இங்கெல்லாம் நிறைய நந்தினி , நிலா இருக்காங்க.... நாம நினச்சாத்தான் மாற்றத்தை கொண்டு வர முடியும்.... Rendume naan rombaaaaaa Radichu padichen. Romba pidichu irundhuthu
Ms. Gowri Muthukrishnan Feb 26 2024
கண்ணாடி கோணங்கள் - ஹேமா ஜெய்
கதையின் தலைப்பு கதைக்கு மிக பொருத்தமானது உள்ளது.
இலையுதிர்காலம்
நிழல் தேடும் மான்கள்
முதல் துளி
இதுவரை வாசிக்காத வித்தியாசமான நான்கு கதைகளும் கருத்துகளும் கொண்ட சிறுகதைத் தொகுப்பு.
என்னை மிக பாதித்த எழுத்துகள் அக்கா இவை. கண்ணாடி கோணங்கள், முதல் துளி இரு கதையும் வாசித்த பின் வாய் மூடி அழுது இருக்கேன்.
அழுத்தமான விஷயத்தை எழுதி இருக்கீங்க.. இலையுதிர் காலம் எல்லாம் யாருக்கும் நடக்க கூடாதா விஷயம்.
முதல் துளி பாட்டி போல தான் எங்க அப்பாவும்.. ஒரு பருக்கை சாதம் சிந்தினாலும் திட்டுவார்.
இந்த வருடத்தில் நான் கதறி அழுத முதல் வாசிப்பு உங்களுடையது தான். யாரும் சொல்லாத கதைகளை நீங்க சொல்றது தான் உங்க ஸ்பெஷல். அதுவும் யாரும் பார்க்காத ஒரு கோணத்தில் காட்சிகளை கொடுக்கிறது இன்னும் அருமையான ஒன்று..
என்னிக்கும் இந்த சிறுகதைகள் என்னை விட்டும் என் நினைவை விட்டும் நீங்காது. மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா
Ms, Vidya Venkatesh Feb 26 2024
1. எல்லா வயதினரும் படிக்க உகந்த கதைகள்.
2. வசீகரிக்கும் எழுத்துநடை.
3.நம்மில் ஓடும் சிந்தனைகளுக்குப் பதில் சொல்லும்விதமான கதையோட்டம்.
இது!இது! இது! தான் உங்கள் தனித்துவம் தோழி. உங்கள் கதைகளைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும் உணர்வு!
Ms. Amirtha Seshadri Dec 29 2023
துளிர்த்தெழும் தளிர்கள்
அன்பெனும் சிறையில்
நினைக்காதீர்கள்.....
சிறை உடைத்து
விடுபட நினைத்துவிட்டால்
விடுதலை ஒன்றே குறியாகும்.....
வெடித்து விடுபட துணிகையில்
சிறகுகள் கிழியலாம்.....
கூண்டும் சிதறிப் போகலாம்.....
இதயங்கள் இறந்து போகலாம்.....
இமயம் ஒன்று
நெஞ்சில் பாரமாய் இறங்கலாம்.
(இணையத்தில் சுட்டது).
நாயா இருந்தா என்ன மனுசனா இருந்தா என்ன எல்லோருக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கு
சில இடங்களில் sweet kaaram coffee சாயல்.
மொலடி பாட்டு கேட்பது போல் ஒர் கதை..
No comments:
Post a Comment