ஹாய்,
உங்கள் பெரும் அன்பையும் வரவேற்பையும் பெற்ற 'அன்பான அதிதிக்கு' இப்போது கிண்டிலில். நண்பர்கள் வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி !
‘அன்பான அதிதிக்கு’ வாயிலாக நீங்கள் சந்திக்க இருக்கும் ஆதனும் அதிதியும் எதிரெதிர் துருவங்களில் நின்றிருப்பவர்கள். ஆதன் இன்றைய போட்டி யுகத்தின் பிரதிபலிப்பு எனில் அதிதி அன்பின் சங்கமம்.
சிலநேரம் வேகத்தடைகள் தான் வாழ்வின் பொருளை உணர்த்துகின்றன, அல்லவா!? வெற்றி மனிதனுக்கு அங்கீகாரம் தந்து அவனுடைய செயல் வல்லமை குறித்து அவனுக்கே நம்பிக்கை அளிக்கிறது என்றால் சரிவு அவனுடைய கால்கள் தரையில் தான் ஊன்றியுள்ளனவா என்று பரிசோதிக்கின்றன.
---
அன்புடன்,
ஹேமா ஜெய்
No comments:
Post a Comment