"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Thursday, June 10, 2021

நினைவெல்லாம் செண்பகப்பூ - விமர்சனங்கள்(1)

நினைவெல்லாம் செண்பகப்பூ நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏!

------------------------------------------------------------------------
Ms. Alamu Palaniappan - June 4 2021

நினைவெல்லாம் செண்பகப்பூ.....

அப்படியே மெதுவா,  கொஞ்சம் கொஞ்சமா என்னுள் இறங்கியது, பூவின் நறுமணம். 

பயங்கர கோவம் உங்க மேல் . இரண்டு காரணங்களுக்காக.....சொல்றேன் இருங்க......

எப்பவும் போல் எல்லா கதாபாத்திரமும் நம் வீட்டிலோ அக்கம் பக்கத்திலோ இருப்பவர்கள். 

எந்தப்பரபரப்பும் இல்லாமல் தொடங்கும் முதல் அத்தியாயம். அதிலேயே நமக்கு கிடைக்கும் சில குறிப்புகள் , கதாபாத்திரங்களின் இருப்பிடம்,  அவளது தற்போதைய நிலை குறித்த யூகங்களை நம்முள் ஏற்படுத்துகிறது. இது அப்படியே மெதுவா  நகர்ந்து பல கேள்விகளை நமக்குள் எழுப்பி அப்படியே மெதுவாக ஒவ்வொன்றுக்கும் பதிலாக விரியும் கதையின் போக்கில் . இது தான் ஹேமாவின் way of writing என்பது தான் என் சமீப கால கண்டுபிடிப்பு. 

இந்த ஓட்டத்தில் நாம் பலவற்றைத் தெரிந்துகொள்ளலாம். அந்த ஊர் பற்றிய சில குறிப்புகள், நாயகனோ, நாயகியோ உத்தியோகத்தில் இருப்பவர்கள் என்றால் அவர்களது அலுவலகப்பணி தொடர்பான சில தகவல்கள், புதிதாக நாங்க தெரிந்துகொள்ளும்,  சின்னச்சின்ன ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் இவையெல்லாம். 

கதைக்குள் வருவோம். மனிதர்கள் பலவிதம். வெளிப்பார்வைக்கு அவர்களது சில ஆழ்மனம் சார்ந்தவை மற்றும் உடல் நலம் குறித்த பல குறைகள் தெரிவதில்லை. அடுத்தவரை பாதிக்காத வரை எதுவுமே தவறில்லை. ஆனால் அதனால் தன்னைச்சார்நாதவர்களுக்கு பாதகம் என்ற போதும் 'நான் இப்படித்தான் " என்றிருந்தால் என்ன ஆகும்? இதுவே கதை.

"இப்படி எல்லாம் நடக்குமா "? என்று எனக்குத்தோன்றவேயில்லை . ஏனென்றால் இதே காரணத்தால் என் உறவில் ஒரு பெண்ணின் கேஸ் நீதிமன்றத்தில் Covid காரணமாக தடுமாறுகிறது. 

படித்த உங்கள் கதாநாயகி மேல் எனக்கு   பயங்கர கோபம்...( No.1) இப்படி ஒரு பெண் இறங்கிப்போகுமா? என்று. ஒரு வேளை அந்தப்ணெ்ணின் தகப்பன் என்று ஒருவர் இருந்திருந்தால் நிலைமை மாறியிருக்குமோ ? என்று யோசித்தேன் . 

நாயகன் நாயகிக்கான சிறு வயது நிகழ்வுகளை காட்டியிருந்த விதம் அவர்களது பிணைப்பைச்  அழகாகச் சொன்னது .  " இவன் தானா  இவன் தானா நாயகன் " என்று எண்ணத்தோடே வாசிக்க வைத்ததோடு இல்லாமல் அப்படியே மனதில் நிற்கிறான் ரிஷி. அருள் ஜோடியும் அழகு. அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் என்றும் நிற்பார்கள்.

" இன்னும் கொஞ்சம் இருந்தால் தான் என்ன ? " என்ற எண்ணத்தைத் தோற்றுவித்த முடிவு . இது தான் இரண்டாவது கோபம்.
-------------------------------

Ms. Vedha Vishal -  June 5 2021

நினைவெல்லாம் செண்பகப்பூ Hema Jay NISHI 👌👌 இதமாக பரவும் செண்பக பூவின் வாசனை மனமெங்கும். நிவேதா பாவம்தான் என்றாலும், பிரவீண் உணர்ச்சிவசப்பட்டு, மகளைக் கடந்தபோது, நிவியின் எதிர்காலம் புரிந்துவிட, பிரவீணை நினைத்து மனம் கனத்தது. அவனது உணர்வுகள் ... பரிதாபம். நேயா 💞 ⚘⚘⚘
----------------------------------

Ms. Sarala - June 6 2021

Hi Hema
Kathai padichi mudichitten.
Sema suspense maintain panneenga 🙌🏽
Nivi yai naanume Rishi kekkara maathiri than keppen... loosu maathiri 5 years yen wait / waste panna nu? Athula Neya Baby vera. 
Sema knot. 

Aanalum Yaar kindal pannara or hurt pannara nu kooda kandupidikka theriyalai Nivikku aanal intha loosu Praveen maaruvan nu mattum think pannara.
 Aanalum Rishi... Nishiyai kandupidikka ivvalo varushama.... waste Da nee 🤣😂 eppadiyo kadasiyilayaachum Author un moolaiyai use panna vachangale 😂

--------------------------------------

Ms. Nivetha Manoharan - May 31, 2021

Hiii hema Nenaivelam senbagapoo epdio miss panten iniku than padichen I already gave review in kindle Wow how beautifully written ♥️ I like ur choice of words! Romba nalla irundhadhu I loved rishi character’s portrayal Keep writing. Much love 💕
----------------------------------

Ms. Sudha Thirumalai - June 3 2021

நினைவெல்லாம் செண்பகப்பூ படிக்க ஆரம்பிச்சேன்... 

ஒவ்வொரு எபிலயும் நச்சுன்னு ஒரு பஞ்ச் 😂😂😂😂
சிரிச்சு முடியல ... அம்மா ஆட அப்பா பாட 🤦🤦

 வழக்கமான உங்க ஸ்டைல்ல இருந்து கொஞ்சம் டீவியேட் ஆகி இருக்கோ...
I used to read your novels in a single shot... But இதை ரொம்ப நிதானமா ரசிச்சு படிச்சேன்.. வழக்கம் போல சூப்பர் ஹேமா😍😍😍 
😍😍 Thank you for giving good novels 😍😍

---------------------------------------------


No comments: