'தூரங்கள் நகர்கின்றன' - நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏!
Ms. Gowri muthukrishnan - June 4, 2023
தூரங்கள் நகர்கின்றன - ஹேமா ஜெய்
வெற்றிவேல் - லாவண்யா இருவரின் திருமண அறிமுகப்படலம் தொடங்கி திருமணம் வரையான நிகழ்வுகள் தான் கதை.
132 பக்கம் உள்ள ஃபீல் குட் ஸ்டோரி.. ரொம்ப ரொம்ப இயல்பான சிந்தனையும் எழுத்து நடையும்.. குறுநாவலா அழகா வடிவம் கொடுத்து இருக்கீங்க ஹேமா சிஸ்டர்.
அன்பு என்ற ஒன்று மட்டும் ஒருவர் மேல் தோன்றிவிட்டால் போதும், எதுவுமே குறையாகத் தெரியாது என்பது உண்மை தான் போலும். எல்லாமே நாம் பார்க்கும் பார்வைகள் தானே!
மனிதர்கள் ஒவ்வொரு சந்திப்பிலும் ஒவ்வொரு கோணத்தைக் காட்டுகிறார்கள். நமக்கு அது பிடித்த பக்கமாக இருந்தால் நெருங்கி செல்வதும், பிடிக்காததாக இருந்தால் விலகி நிற்பதுமாக ஒவ்வொரு உறவிலும் நட்பிலும் இந்தத் தூரங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன.
வாழ்க்கை யாருக்கும் தானே எண்ணையிட்ட சக்கரமாக மாறி சுழல்வதில்லை. புரிதல் என்கிற மசியிட்டு அன்பு என்கிற ஆதி அச்சாணியில் பொருத்தும் போது மட்டுமே அது சுலபமாகச் சுற்றுகிறது.
இருவரின் இடையில் உண்டான அந்த நேசம் இயல்பாக இருந்தது.. ரசிச்சு ரசிச்சு படிச்சேன்.. அதும் கதை இறுதியில் வெற்றி லேட் பண்ணிட்டேன் இல்ல? ஷேவ் செய்து இருக்கலாம் இல்லனு எல்லாம் கேட்க அதுக்கு லயா சொன்ன பதிலும், லாங் ட்ரைவ் போவோம்னு வெற்றி சொல்றதும் புரிதலும் காதலும் தானே?
Such a beautiful and feel good story அன்பும் வாழ்த்துகளும் ஹேமா ஜெய் சிஸ்டர்
Ms. Rajeswari Vijayakumar - Apr 9 2021
ரொம்ப அருமையா இருக்கு கதை.. நல்ல theme இது.. இன்று என்ன பிரச்சனை face பண்ணுகிறோமோ அதை கையில் எடுத்து அழகா handle பண்ணி இருக்கீங்க.. வாழ்த்துக்கள் ma
-----------------------
Ms. Usha Suresh - Apr 3 2021
Read and enjoyed the story
Liked it.
------------------------------
Ms. Alamu palaniappan - Apr 25 2021
அருமையான மிக மிக யதார்த்தமான அழகான ......கதை.... எனக்கு அந்த கடைசி அத்தியாயம் ரெம்ப பிடித்தது ஹேமா..
---------------------------
Ms. Akhilandabharathi - May 4 2021
நல்ல கதை! வாழ்த்துக்கள்
--------------------------------------
Ms. Rajeswari Jothikumar - Apr 26 2021
சின்ன story னாலும் மன நிறைவான கதை, அதிகாலையில் படித்தது இன்றைய நாள் மகிழ்ச்சியாக தொடங்கி வைத்து விட்டது.
ரொம்ப நல்ல mood ல எழுதியிருக்க .
எழுத்துக்களை கோர்த்த விதம் அவ்வளவு அழகு hema. I'm very happy.
ஆக கதையை இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் கொடுத்திருக்கலாம் என்று மனசு சொல்லுது.
Ms. Mini - May 7 2021
as usual another awesome story. My kindle unlimited was over! Once I know this one is available in Kinde, bought the memebership only for your story. But after read the story, I had a calm feeling and happy moment. worth of buying the membership. Pora pokkila niraya nalla visayangal thotu poguthu unga kathai. athu than ennaku unga kitta romba romba pidicha visayam. Manitha neyam ,nesam than ellamae. iyalaba irukira hero and understanding heroine what a lovely pair.
----------------------------
Ms. Vedha Vishal - May 5 2021
மேல் மத்திய தர , படித்த பெண்ணின் நியாயமான ஆசை, சேவையையே லட்சியமாககொண்ட மருத்துவன்.
முதிர்ச்சி என நினைத்து விலகி நிற்பவர்களை இணைத்து வைக்கிறது ஒடிஷாவின் இயற்கை சீற்றங்கள். இயல்பான மனநிலை மாற்றங்கள், வெது வெதுப்பாக சீராக விழும் ஷவர் போன்ற நடை. மிக ரசித்தேன். வெற்றிதான் மனதைக் கவருகிறான்.
வாழ்த்துக்கள்
ஹேமா⚘---------------------------------
வாவ் ஃபீல்...கதை முழுக்கவே இனிமையான உணர்வு.
லயா வெற்றிவேல் இருவரின் சந்திப்பு முதல் புரிந்துணர்வு வரை அத்தனை தித்திப்பு
ஒரிசாவையும் கதையோடு கதையாக மிக மிக இரசிக்க முடிந்தது.
மிக அருமை.
-----------------------
Ms. Selvarani - Oct 13 2021
ஹேமா ஜெய்யின் தூரங்கள் நகர்கின்றன.
இந்த பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்களின் பணியையும் அவர்களின் கஷ்டங்களையும் நாம் அறிவோம்.இந்தக்கதையில் நாம் ஒரு மருத்துவனான வெற்றியின் மூலம் மருத்துவர்களின் பணிச்சுமை,வாடகை வீட்டில் இருப்பவர்களின் கஷ்டம்,நோயில் சிக்கி இறந்தவர்கள் இப்படி நிறைய தெரிந்து கொள்கிறோம்.
நாயகி லயா.இரு வீட்டிலும் திருமணம் பேசியிருக்க முதல் சந்திப்பில் இருவருக்கும் ஈர்ப்பு இல்லை.வேண்டாம் என இருவரும் முடிவெடுத்திருக்க,தற்செயலான டிரெக்கிங்கில் சந்திக்க நேரிடுகிறது.அங்கு ஏற்படும் சிறு விபத்து,வெற்றியின் காடு பற்றிய அக்கறை,மருத்துவத்தின் அருமை என லயா புரிந்து கொள்ள,அடுத்தடுத்த சந்திப்புகளில் லயாவின் குணம் அவளின் அன்பு என அவனும் ஈர்க்கப்பட இருவரும் சேர்கிறார்கள்.
மனிதர்களின் கோணங்களும்பிடித்த பக்கங்களாக இருந்தால் நெருங்குவதும்,பிடிக்காவிட்டால் விலகுவதுமாய் ஒவ்வொரு நட்பிலும் இந்த தூரங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன.
அழகான வரிகள்.
-------------------------
Amazon reviews:
-----------------------
Goodreads :
Rocking🤩
As usual Hema mam gave interesting family and love subject. Also described about current covid situations, Doctor's service during this period. KEEP UP YOUR GOOD WORK👍 (less)
As usual Hema mam gave interesting family and love subject. Also described about current covid situations, Doctor's service during this period. KEEP UP YOUR GOOD WORK👍 (less)
No comments:
Post a Comment