அனைவருக்கும் வணக்கம்!
'நினைவெல்லாம் செண்பகப்பூ’ - புதிய நாவல் இப்போது கிண்டிலில். அதிகம் பேசா பொருளைப் பேசவிருக்கும் கதை கரு இது. வாசித்து உங்களது மேலான விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
நன்றிகளுடன்!
ஹேமா ஜெய்
https://www.amazon.in/dp/B095NBLSKV
எதற்காக இந்த அலைகள் அலுக்காமல் வந்து வந்து கரை தொட்டு, சத்தியத்திற்குக் கட்டுப்பட்டாற்போல ஓர் எல்லைக்குட்பட்டு தணிந்து தாய்மடி திரும்பிக் கொண்டிருக்கின்றன!? காலாகாலத்துக்கும், இந்தப் பிரபஞ்சம் தோன்றிய கணத்தில் இருந்து...!?
முதல்முறை சுமியுடன் இங்கு வந்தபோது இப்படித்தான் கேட்டாள். “மனுசங்க மாதிரியே இதுவும் என்ன தேடுறோம்னே தெரியாம எதையோ தேடிட்டே இருக்கோ, சித்தி...? ஆத்திரமும் அவசரமுமா ஒன்னும் புரிபடாம....”
சுமி சிரித்தாள்.
“அப்படி எடுத்துக்கக் கூடாது பாப்பா... தேவையோ, தேடுதலோ, இல்ல வெறும் விளையாட்டோ, எல்லாத்துக்கும் இயக்கம்னு ஒன்னு இருக்கணும் இல்ல… இயங்காம ஒரே இடத்துல நின்னு தங்குற தண்ணி வெறும் சகதியா, வீச்சமடிக்கிற குட்டையா தான் மாறிப் போகும்...”
அன்று சுமி சித்தி எதேச்சையாகப் பேசியது ஏதோ இந்தத் தருணத்திற்காகவே சொன்னது போலிருந்தது அவளுக்கு.
ஆம், உண்மை தான்!
மனிதனோ, மிருகமோ, உயிரும் உணர்வும் இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் எந்த இருப்போ - எல்லாமும் நடந்து கொண்டு, நகர்ந்து கொண்டு, இயங்கிக் கொண்டு, இருந்து கொண்டு இருக்கும்வரை மட்டும் தானே உயிரோடு.... உயிர்ப்போடு... உணர்வோடிருக்க முடியும்.
‘எஸ்.... எது எப்படின்னாலும் நகரணும்.... நகர்ந்துட்டே இருக்கணும்... அப்படியே தேங்கி நின்னுட கூடாது....‘
No comments:
Post a Comment