இங்கே அரசியல் என்பது பெருத்த லாபம் கொழிக்கும் வியாபாரமாக மாறிப் போய் எத்தனையோ காலம் ஆகி விட்டது. தலைமைக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்து சீட் வாங்கி, பல லட்சங்களை தொகுதியில் வாரி இறைத்து ஜெயித்து வந்தவர்கள் எல்லாம் தம் முதலை காப்பாற்றிக் கொள்ள மெனக்கெடத் தான் செய்வார்கள். இருக்கிற ஐந்து ஆண்டுகளில் முடிந்த வரை தொற்றிக் கொண்டு எவ்வளவு தேத்த முடியுமோ அவ்வளவு தேத்தத் தான் முயற்சிப்பார்கள். அது காலில் விழுந்தோ, முதுகு வளைந்தோ, இன்னுமின்னும் காசு வாங்கிக் கொண்டோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
போன ஐந்து ஆண்டுகள் படாதபாடுபட்டாலும் கூட அதே கும்பலில் இருந்து பெரும்பான்மையான உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தது யாருடைய தவறு? சென்ற தேர்தலில் பேலட்டை அமுக்கும் முன் பணத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்ட ஒவ்வொரு வாக்காள பெருந்தகையும் கண்ணாடியில் தன் முகத்தை தானே உற்றுப் பார்த்துக் கொள்ள வேண்டிய தருணமிது.
மனசாட்சி, தர்மம், நியாயம் என்பதெல்லாம் முதலில் நம்மிலிருந்து தொடங்க வேண்டும். சரீர சுத்தி என்பது முதலில் நம் கண்களில் உள்ள அழுக்கை எடுப்பதில் இருந்து துவங்கட்டும்.
No comments:
Post a Comment