நண்பர்களுக்கு, வணக்கம்!
மகளிர் சிறப்பிதழான இந்த மாத தென்றல் இதழில் என்னுடைய சிறுகதை ஒன்று வெளியாகி உள்ளது.
'அரசியல் பழகு' - அலுவலகங்களில், நட்பு வட்டங்களில், முகநூலில், வாட்ஸ்அப் குழுக்களில் என இந்த உலகில் அரசியல் இல்லாத இடமே இல்லை. காற்று இல்லாத இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது அரசியலே. ஏன் வெளியே தேட வேண்டும்? நம் குடும்ப உறவுகளில் இல்லாத அரசியலா? நிறைய நேரம் அதன் நுட்பங்களை புரிந்து கொள்ளவே நேரம் எடுக்கும். புரியும்போதோ இது தெரியாமல் இத்தனை நாள் இருந்திருக்கிறாமே என்று மலைப்பாக இருக்கும்.
சிலவற்றை நேருக்கு நேராக நிறுத்தி முகத்திற்கு எதிரே பளிச்சென்று கேட்டு விடுவதும், சிலவற்றை கண்டும் காணாமல் செல்வதும், சிலவற்றை விலக்குவதும், சிலவற்றில் இருந்து விலகுவதுமாக நம்மைச் சுற்றி நிகழும் நுண்ணரசியலைப் புரிந்து கொள்வது இன்றைய நாளில் இன்றியமையாதது. 'அரசியல் பழகு'வதும் ஒரு சர்வைவல் ஸ்கில் தான். அடிபட அடிபட மட்டுமே புரிகிற நுண்ணுணர்வு! இந்தக் கதைக்கான கதை என் மனதில் அத்தனை உள்ளது அவற்றை இன்னொரு நாள் பகிர்ந்து கொள்கிறேன்.
வாய்ப்பு உள்ள நண்பர்கள் சிறுகதையை வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். என்றுமான உங்கள் ஆதரவிற்கு என் அன்பான நன்றிகள்!!
No comments:
Post a Comment