"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, June 22, 2020

இரு திரைப்படங்கள்

இரண்டு வாரங்களாக கொஞ்சம் கொஞ்சமாக பார்த்து முடித்த திரைப்படங்கள் - Miracle in cell no.7 மற்றும் First they killed my father. முன்னது மென் கவிதையெனில் பின்னது நம் உணர்வுகளை உலுக்கிப் போடுகிறது. 

குட்டிப் பெண் ஓவாவும் மனநிலை பிறந்த அவள் papa வுமாக நம் தெய்வத் திருமகள் சாயலில் ஆரம்பித்தாலும் Miracle in cell no.7 (இது தென் கொரிய திரைப்படம்) வேறு எங்கோ நம்மை அழைத்துச் சென்று பிரமிப்பில் ஆழ்த்துவதாய். 

செய்யாத தவறுக்கு சிறைபட்டுள்ள தன் 'papa' வை காப்பாற்ற முயலும் அந்தக் குட்டிப்பெண் நம் மனதை கொள்ளை கொள்கிறாள். சிறையில் இருக்கும் கொடுங் குற்றவாளிகள் ஒவாவிடம் தங்களுக்கு ஏன் உடம்பு சரியில்லாமல் இங்கு அடைந்து கிடக்கிறோம் என்று சொல்கிற இடங்கள் எல்லாம் அத்தனை அழகாக.



இரண்டாவது khmer மொழியில் உள்ள கம்போடிய திரைப்படம். 1975-ல் நிகழ்ந்த உள்நாட்டு கெமர் புரட்சியில் இருக்கும் வீடு வாசல்களை லட்சக்கணக்கானோர் இழந்து வீதிகளுக்கு வந்த கதை. திடீரென வெடிக்கும் புரட்சியில் Loung எனும் ஐந்து வயது சிறுமியின் வசதியான குடும்பம் முடிந்தவற்றை எடுத்துக்கொண்டு வீடு வாசலை விட்டு கிளம்புகிறது. வழியில் அவர்கள் உடமைகள் ஒவ்வொன்றாக கைவிட்டுப் போக, கிராமத்திலும் இருக்க முடியாமல் நாடோடிகளாக நடந்து கொண்டே இருக்கிறார்கள். 



எல்லோரும் ஒன்று, no rich no poor என்ற சிந்தாந்தத்தில் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு உண்ணவும் உணவின்றி கடுமையான அழுத்தத்தில் தள்ளப்படுகிறார்கள். வியட்நாமிய படைகளைத் தாக்க குழந்தைகள் கையில் ஆயுதங்களைத் தந்து தீவிரவாதியாக்கி... தன் சொந்த வாழ்க்கை அனுபவத்தை Loung Ung என்ற கம்போடிய பெண் எழுத்தாளர் புத்தகமாக எழுதியுள்ளதே திரைப்படமாக. பிரபல ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜோலி தான் இயக்குனர் என்பது கடைசி ஸ்லைடுகளில் தான் தெரிந்தது. மிக அற்புதமாக இயக்கி உள்ளார்.

இரண்டுமே மனிதம் பற்றி ஆழமாக பேசுகிற அர்த்தமுள்ள படங்கள். வாய்ப்புள்ளவர்கள் தவறவிடாதீர்கள். நெட்பிளிக்ஸ்-ல் உள்ளது.


-- April12, 2020 முகநூல் பதிவின் மீள் 

No comments: