"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Sunday, June 11, 2017

விழிகள் தீட்டும் வானவில் – நிறைவு

விழிகள் தீட்டும் வானவில்’-ன் நிறைவு அத்தியாயம் பதிவு செய்தாகி விட்டது. இந்த கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதரவும் ஊக்கமும் கொடுத்த அனைத்து தோழமைகளுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள் பல!

கதையை பற்றிய முழுமையான பார்வை எனினும் சரி, ஓரிரு ஊக்கவார்த்தைகள் எனினும் சரி, நீங்கள் பகிர்ந்து கொண்ட ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். சோர்வு தாக்காமல் தொடர்ந்து எழுதிட உங்கள் வார்த்தைகள் பெரும் தூண்டுகோலாக அமைந்தன.


கதை மனிதர்களை பற்றிய விதவிதமான பார்வைகளை (perceptions), எண்ணங்களை அறிந்து கொள்வது ஒரு நல்ல அனுபவம். சில நல்ல நட்புகள் தங்கள் வாழ்க்கையில், தாங்கள் பார்த்ததில் இவ்விதம் நிகழ்ந்தது பற்றி நம்பிக்கையுடன் என்னிடம் பகிர்ந்து கொண்டமைக்கு என் ஆழ்ந்த அன்பும் நன்றிகளும்!

எழுதுவதை விடவும் இந்த உரையாடல்கள் மூலம் பலவித கோணங்களை அறிந்து கொள்வதும், மனிதர்கள் சூழ்நிலைகளை படிப்பதுமே ஆகப் பெரிய கொள்முதல். நட்பின் மேலான அபிமானம் கூடுவதும் இவ்விதம் தான். அந்த விதத்தில் இந்த முயற்சி நிறைவாக அமைந்ததில் திருப்தியாக உணர்கிறேன்.

சில தோழிகள் சொல்லியது போல எனக்கும் ஆகாஷ் மற்றும் நேத்ராவை பிரிவது கஷ்டமாத்தான் இருக்கு. எழுத்து வடிவம் பெற்றது தான் இப்போதே தவிர கிட்டத்தட்ட ஒரு வருடமாக மனதுக்குள்ளேயே உழன்றவர்கள். 
நேத்ரா போல இன்றைய நாளில் ஒரு பெண் இருப்பாளா என்றால் நிச்சயம் இருக்கிறாள். இயற்கை யாரையும் வஞ்சிப்பதில்லை. ஒரு சிரமம் எனில் நூறு மடங்கு சந்தோசமும் கூடவே வரும், ஆகாஷிற்கு கிடைத்த நேத்ராவைப் போல ! (மை டியர் சிஸ்டர்(ஸ்),  இந்த வரியை படித்ததும் நீங்க பெருசா புன்னகைப்பீங்கன்னு எனக்கு தெரியும்  :) :) :) )

இடையில் சில எதிர்பார்த்த மற்றும் எதிர்பார்த்திராத வேலை நெருக்கடிகள் கூடி விட, கதையை பாதியில் விட்டு செல்ல மனமில்லை. இந்த வாரத்துக்குள் முடித்தாக வேண்டும் என்ற என் அவசரத்தை எழுத்தில் காட்டாமல் இருக்க முடிந்தளவு பிரயத்தனம் உள்ளது. எனினும் எங்காவது லாஜிக் தவறுகளோ, நிரப்பப்படாத இடைவெளிகளோ, extra luggage போல எதுவும் துருத்தி இருந்தாலோ சொல்லத் தயங்காதீர்.

மற்றபடி, கதை பற்றிய முழுமையான விமர்சனங்கள், என் எழுத்து பற்றிய குறைகள், தடங்கல்கள், தடுமாற்றங்களை சுட்டும் விரிவான பார்வைகள் வரவேற்கப்படுகின்றன. தனியாக தெரிவிக்க விரும்புபவர்களுக்கான என் மின்னஞ்சல் முகவரி - hemajaywrites@gmail.com

இந்த நாவல் மட்டுமின்றி பழைய வேலைகளுக்குமான முழுமையான விமர்சனங்களை தொகுத்து ப்ளாகில் சேகரிக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஒரு எண்ணம், யாருக்காக இல்லை எனினும் எனக்கே எனக்காக! : ) கூடிய சீக்கிரம் செய்ய வேண்டும்.

கடைசியாக...... இந்த கதையின் பெரும்பகுதி இரவு பத்து மணிக்கு மேல் உட்கார்ந்து நள்ளிரவுகளில் எழுதியவை. இதற்காக வாங்கிக் கட்டிய திட்டுகள் கொஞ்ச நஞ்சமில்லை. வீட்டில் பயமுறுத்திய மாதிரியே வந்து சேர்ந்த உடல் உபாதைகளுக்கும் பஞ்சமில்லை. என் தொல்லைகளை எல்லாம் சகித்துக் கொள்ளும் என் குடும்பத்தினருக்கு ---------------

வேறு வழியே இல்லை. You have to live with it   :) :) :)  

கதையின் பதிவுகள் ஜூன் 18 வரை இணைப்பில் இருக்கும். வாசிக்க விரும்புவர்கள் வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இப்போது ‘டாட்டா’, ‘பை பை’ எல்லாம் சொல்லி ‘VTV’ –ல் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். மீண்டும் இன்னொரு அழகான சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம்.

நன்றி உங்கள் அனைவருக்கும்!

அன்புடன்,

ஹேமா



6 comments:

malaram said...

ஹேமா சூபெராக முடித்துவிட்டீர்கள். ஆகாஷ் நேத்ரா charecter மனதிலயே நிற்கிறது.

sindu said...

Super finish

aakash- Nethra voda payanithathu romba arumai ya irunthathu :)

Umamanoj said...

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே..
சங்கு சுட்டாலும் வெண்மை தரும். ..ஆகாஷ். ..
நிலையில் கீழிறங்கினாலும் தன்னிலை பிறழாமல் இருப்பது மிக அருமையான பாத்திரம். .நல்ல வடிவமைப்பு. ..

நேத்ரா காதல் ஜெயிப்பது மிகமிக அருமை. .
பேச்சும் சூப்பர். .கவிதையோ சூப்பரோ சூப்பர். ..

ஆகாஷ் காதலை வெளிப்படுத்திய விதம் நெகிழ்வு..

முடிவு வரை வேகமாக விருப்பமாக நல்ல குடும்ப நாவலை
கொடுத்தமைக்கு நன்றி ஹேமா. .

ashwini said...

hi Hema

just now i came to know about your blog and i start to read the story can you

kindly extend the date of the story thank you

ashwini said...

hi Hema

just now i finished all the updates at a glance very nice and practical story at first aakash was very hard and shrewd but the reason behind is very tragedy he satisfied his dream and began to work at the same time his angry on his parents his mother was very innocent she doesnt know to save they doesnt realise about that hats off to aakash even though he doesnt get any help from ravi he stood still and boldly he choose media on the other side what a sweet character nethra is really aakash family is very lucky to have a daughter in law like her from the childhood she deeply fixed aakash love in her heart she win on her love and convinced her parents she boldly asking aakash and she rectify his mistake how nice i enjoyed the story totally a different jorner from pani iravum thani nilavum in between the story harsha came is he pattampoochi para para hero thank you so much for the excellent story when will be your next story eagerly waiting for the next story

HemaJay said...

Thank you Malaram, Sindu, Uma Manoj and Ashwini! Happy to have your feedback and comments on the story!