அனைவருக்கும் வணக்கம்,
“பூக்கள் விற்பனைக்கல்ல” நாவல் புத்தகமாக வெளி வந்துள்ளது. இவ்வினிய தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி நட்புகளே! கடவுளுக்கு முதற்கண் நன்றி! எம்ப்ரியாலாஜி துறை எந்தளவு மனித குலத்திற்கு வரப்பிரசாதமாக உள்ளதோ, அதற்குச் சரியாக வியாபார நோக்கும், சிலரின் குற்றங்குறைகளும் இருக்கவே செய்வதால் - இத்துறையில் நிகழும் அர்ப்பணிப்பு, அத்துமீறல்களை முழுநீள நாவலாக எழுத முடிந்தால் நன்றாக இருக்குமே என்கிற கனவு நனவாக இயன்றது நிச்சயம் இறைவனின் அருளே!