"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Saturday, June 2, 2018

விழிகள் தீட்டும் வானவில் - விமர்சனங்கள்

'விழிகள் தீட்டும் வானவில்' நாவலுக்கு கிடைத்த விமர்சனங்களின் சிறு தொகுப்பு :


Ms. Rosei Kajan - Mar 6 2020

கதைபோலில்லாது எதார்த்தமான கதாபாத்திரங்களோடு நகர்கின்றது கதை.
தொடக்கமே நட்பும் கிண்டல் கேலியுமாக ஆரம்பித்து, வில்லன் போன்றதொரு பிரேமையில் அறிமுகமாகிறான் நாயகன். வில்லன் என்று சொல்வதை விடவும் அவன் தாய் சகோதரி பாவனையில் குடும்பத்துக்குக் கஷ்டம் கொடுப்பவன் போன்றதொரு எண்ணம் என்னுள் வந்ததைத் தடுக்க முடியவில்லை. அதுபார்த்தால், தேவையற்ற கற்பனைகளற்ற எதார்த்தங்களுக்காக தன் மேலான ஆசைகளைத் துறந்துவிட்டு வாழ்க்கை காட்டும் சவால்களை வெல்ல உச்சபட்சமாக முயலும் ஒருவனாக இருக்கிறான், அவன். அதிலேயும் எல்லோருமே சறுக்கிவிடும் காதலில் அவன் காட்டும் உறுதியும் நிதானமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வருவது வரட்டும், முதல் நமக்குத் பிடித்ததைச் செய்வோம் என்றில்லாது மனதை தன் சொல்படி நடத்துபவனாக கடைசிவரை அவன் வருகிறான் .
அவனுக்கு எந்தவிதத்திலும் குறைவின்றியது நாயகியின் செய்கை. அவள், தன்னையும் விட்டுக்கொடுக்கவில்லை; தன் குடும்பத்தையும் விட்டுக்கொடுக்கவில்லை; அதேநேரம் தன் மனதில் துளிர்த்த நேசத்தையும் விட்டுக்கொடுக்கவில்லை.
ஆரம்பம் தொடக்கம் சௌமி, வருண், நரேன் என்று காட்டப்படும் நட்பாகட்டும் பெரியவர்கள் சிறியவர்களில் காட்டும் புரிந்துணர்வாகட்டும் கதைக்கு மேலும் அழகூட்டி நிக்கின்றது.
வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளையும் ஆராய முயன்று வெற்றி கொள்ளும் முடிவுகளையும் சொல்லிப் போகின்ற அதேவேளை, போகின்ற போக்கில் பொழுது போக்கிற்கான வாசிப்பு என்றதைத் தாண்டி சுவாரசியமான வகையில் பல வாழ்க்கைப்பாடங்களைத் தொட்டுச் செல்கின்றது விழிகள் தீட்டும் வானவில்!
------------------------

Mr. Gowdhaman - Apr 12 2021

Hlo sister. First of all I need to applaud you . Really such a beautiful story sister. Good narration. And I joyfully read . 

Thank you so much for your book hema . 

------------------------------


Sharmila Bharathi Natarajan - Feb 20, 2020

One of my top favorites! There are ample stories, movies that talk about feminism, women’s struggles. But very few speak about a man’s struggle. If we talk about equality, then we need to be fair! Akash’s pain, struggle and sacrifice were deeply analyzed and presented.It’s so hard to go through pain, struggle yet stay afloat and strong! Good one, Hema!

Srimathi Gopalan – May 30, 2017
வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று கேள்விப்பட்டு இருப்போம் , இந்தக் கதையும் அப்படி ஒரு குடும்பம் எப்படி வாழ்ந்தது , எப்படி நொடித்தது , பாதிக்கப்படும் அடுத்த தலைமுறை , வாழ்ந்த குடும்பம் நொடிக்கும் பொழுது சமூகத்தின் பார்வைகள் என்று எங்கும் மிகைப்படுத்தாமல் மிக அழகாக கொண்டு சென்றுள்ளார் கதாசிரியர்.
சுகந்தி .. விஸ்வம் தம்பதி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் ஆகாஷ் , சௌமியா. சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் , வசதியாகவும் இருக்கும் குடும்பம் ஆகாஷ் .. கதாநாயகன் . பெரிய மருத்துவன் ஆகவேண்டும் என்பதே இவனின் கனவு லட்சியம் எல்லாம் . இவனின் ஆதர்ச கதாநாயகன் இவனின் தந்தை.
சௌம்யா..சுட்டிப்பெண். சுகந்தி ...இவருக்கு பிள்ளைகள் , கணவன் மட்டுமே உலகம்.நேத்ரா...கதாநாயகி , சௌம்யாவின் தோழி . முக்கியமான கதாபாத்திரமும் கூட . அங்கங்கே கதையில் கலகலப்பு வருகிறது என்றால் இவளால் தான் , என்றாலும் பொறுப்பான பாசமான பெண் .
இன்னும் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் முக்கியமானவர்களை மட்டும் குறிப்பிட்டு உள்ளேன் .
விஸ்வம்...அடிப்படையில் நல்ல மனிதர் , குடும்பத்தின் மேல் மிகவும் பாசம் கொண்டவர் . மிகவும் கலகலப்பான மனிதர் .
பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பார்கள் பெரியவர்கள் . நண்பன் என்று எண்ணி இவர் செய்யும் உதவி , நான் செய்த உதவிக்கு நண்பனின் அன்பின் வெளிப்பாடு என்று யோசிக்காமல் அலட்சியமாக அவனின் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுவதால் அந்தக் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிடுகிறது .
அந்த அத்தியாயங்களை , அந்த சமயத்தில் சுற்றமும் , சூழமும் எப்படி நடந்து கொள்ளும் என்பதை அந்தக் குடும்பம் அனுபவிக்கும் வலிகளை ...கொஞ்சமும் மிகைப்படுத்தாமல் அவ்வளவு அழகாக எழுதி இருக்கிறார் ஆசிரியர்.
லஞ்சம் என்பது கேட்டு பெற்றால் தானா என்ன , எந்த ரூபத்தில் என்ன நினைத்து வாங்கினாலும் அது லஞ்சம் தான் . இதில் வலியவன் பிழைத்து எளியவன் எப்படியெல்லாம் துன்பப்படுவான் என்பதை லஞ்சம் வாங்கும் யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை . குடும்பத்திற்காக செய்பவர்கள் அந்த குடும்வதாலேயே ஒதுக்கப்படும்பொழுது , அந்த வலிகளும் வேதனைகளும் அதிகம்.
இந்த சூழ்நிலை வளர்ந்த பிள்ளையான ஆகாஷின் மனதில் என்ன மாதிரியான மாற்றத்தைக் கொண்டு வருகிறது ,
இதுவரை அவனால் கதாநாயகனாக பார்க்கப் பட்ட அவனின் தத்தை , அவனின் பார்வையில் எப்படி கூனிக் குறுகி போகிறார் , அவன் தன்னுடைய லட்சியத்தை அடைந்தானா , அந்தக் குடும்பம் அனைத்து கஷ்டங்களில் இருந்தும் மீண்டு வந்ததா.......
இதையெல்லாம் தெரிந்து கொள்ள அவசியம் கதையை படியுங்கள் , கதை முடியும் தருவாயில் உள்ளது .
இந்தக் கதையைப் பற்றி நிறைய எழுத வேண்டும் என்று எண்ணினாலும் , நேரமின்மை .... நாளை ஊருக்கு கிளம்புகிறேன் , செல்லும் இடத்தில் எழுத நேரம் கிடைக்குமோ இல்லையோ , அதனால் தான் ஒரு குட்டி விமர்சனம். (கஷ்டப்பட்டு மொபைல் கீ போர்டில் எழுதியதால் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் )
கதையின் திரி.... hemajays.blogspot.com
ஹேமா இது போல் நிறைய கதை எழுதி புகழ்பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஹேமா ஜெய்யின் விழிகள் தீட்டும் வானவில் - யாழ் சத்யாவின் பார்வையில்  - Jun 19, 2017
ஆகாஷ் - நேத்ரா
இவர்கள் தான் கதையின் நாயக நாயகியர். இவர்களைச் சுற்றி செல்லும் கதை. அயல் வீடுகளில் வசிக்கும் இவர்கள் குடும்பமாகவே நட்பாகி விட்டாலும் பரம்பரை பணக்காரரான நேத்ராவின் தந்தை ரவி கொஞ்சம் ஒதுங்கியே இருக்கிறார். அதற்கு எதிர்மாறாக வீட்டுப் பெண்கள் நெருக்கமாக ஒரே வயதுடைய நேத்ராவும் ஆகாஷின் தங்கை சம்ஸ் எனப்படும் சௌமியாவும் உயிர்த்தோழி ஆகி விடுகின்றனர்.
பரம்பரை பணக்காரரான நேத்ரா குடும்பத்தினதும் வாழ்ந்து கெட்ட ஆகாஷ் குடும்பத்தினதும் தராதரம் காதலைப் பிரிக்கும் சுவராக நிற்க நேத்ராவின் காதலோ ஒரு தலைக் காதலாக அவளைத் தவிக்க விடுகிறது.
மருத்துவரான அவளும் கன்ரீன் வைத்து நடாத்தும் அவனும் எப்படி இணைந்தார்கள்? ஆகாஷின் குடும்பம் தரம் தாழ்ந்ததின் காரணம் தான் என்ன? என்பதை பிரதான கேள்வியாக வைத்து கதை நகர்கிறது.
குடும்பத்தில் நேர்ந்த அவமானம் ஆகாஷை அடக்கி அவன் சுயத் தன்மையை ஒடுக்க, அவன் காதலை யாசித்து அதேநேரம் தன் சுயகௌரவத்தையும் இழக்காமல் தன் காதலுக்காக நேத்ரா போராடுவது அருமை.
மனதிற்குள் விருப்பம் இருந்தாலும் குடும்பத்தில் நடந்து முடிந்த வேண்டாத காரணங்களால் அவளுக்கு ஒரு செல்வந்த வாழ்க்கையைக் கொடுக்க முடியாது என்று எண்ணி சூடுபட்ட பூனையாய் ஆகாஷ் ஒதுங்குவதும் அவனது இடத்தில் இருந்து பார்க்கும் போது சரியாகத்தான் தோன்றுகிறது.
ஒருவர் விட்ட பிழையிலிருந்து அடுத்தவர் பாடம் படித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கிணங்க தந்தை விஸ்வம் விட்ட பிழையிலிருந்து வாழ்க்கையைப் படித்து ஆகாஷ் தொழிலைக் கவனித்து கொள்வது சிறப்பு. திறமை உள்ளவன் எப்படியும் முன்னேறுவான் என்பதற்கு அவன் சிறந்த உதாரணம்.
ஆகாஷின் தந்தை கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தார். கதையின் ஆரம்பத்தில் ஆகாஷ் நடவடிக்கைகளை பார்த்து தந்தையை இழந்தவன் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் செய்த தப்பின் விளைவால் பெற்ற மகனையோ, தன் குடும்பத்தினரையோ ஏறெடுத்துப் பார்க்கும் துணிவின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதை பார்க்கும் போது காலம் கடந்த ஞானோதயத்தால் ஆகும் பலன் ஏதுமில்லை என்று புரிந்தது.
ஒரு குடும்பத்தில் கணவன் செலவாளியாக இருந்தால் மனைவி கட்டும்செட்டுமாக இழுத்துப் பிடிக்க வேண்டும். கணவன் உழைத்து வருகிறான் என்றால் ஓரளவுக்கேனும் அவன் தொழில் தொடர்பான விடயங்களை அறிந்து வைத்து அவன் பணத்தை எப்படி சம்பாதிக்கிறான், எப்படி செலவளிக்கிறான் என்ற அடிப்படை விடயங்களையேனும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். நல்ல மனைவி என்பவள் வெறும் அன்பொழுக பேசினால் மட்டும் போதாது குடும்பத்தைக் கட்டிக்காக்கும் பெரும் பொறுப்பு அவளுக்கிருக்கு. அதை செவ்வனே நிறைவேற்றத் தவறினால் என்ன நடக்கும் என்பதற்கு ஆகாஷின் அம்மா சுகந்தி நல்ல உதாரணம்.
பரம்பரை பணக்காரராக இருந்தாலும் அளந்து செலவழிக்கும் நேத்ரா குடும்பம். ஆற்றிலே போட்டாலும் அளந்து போடுஎன்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.
நேத்ரா, சௌமியா நட்பாகட்டும் ஆகாஷ், வருண் நட்பாகட்டும் மனதுக்கு இதமாய். இரு வீடுகளிலும் வேலை புரியும் வேலைக்காரர்களோ நாங்களும் மனிதர்கள் தான் எங்களாலும் அன்பு பாசம் வைக்க முடியும் என்று மனசை நெகிழ வைக்கிறார்கள். வேலைக்காரர்களோடு நாம் பழகும் விதமும் அவர்கள் எங்களோடு பழகும் விதத்தை தீர்மானிக்கிறது என்பதற்கு நேத்ரா செல்வியோடு உரிமையோடு பேசுவதும் சுகந்தி மீனாட்சியோடு நடாந்து கொள்வதும் சிறந்த எடுத்துக்காட்டு.
பணமல்ல குணம் தான் முக்கியம் என்பது தன் வீட்டில் வேலை செய்தவரின் மகனுக்கே தங்கள் பெண்ணைக் கல்யாணம் பண்ணி கொடுப்பதில் அழகாக விளக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் கல்யாணம் பேசி முடித்தாலும் தங்கையின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆகாஷ் அவள் முடிவைக் கேட்பது அழகு.
எடுத்த எடுப்பிலேயே கதையின் பாத்திரங்கள் அனைத்தையும் அறிமுகப்படுத்த முயலாது கதை நகர்கையிலேயே ஒவ்வொன்றாக வந்து இணைந்து கொள்வது அருமை.
நான் படிக்கும் உங்களின் முதல் கதை ஹேமாக்கா. எனக்கு உள்பெட்டியில் எல்லாம் ரெகமண்ட் செய்தார்கள் படிக்க சொல்லி. எனது சகோதரியும் ஓயாமல் கூறுவார் உங்களின் பட்டாம் பூச்சி பற பற எல்லாம் அவ்வளவு அருமையான கதை என்று.
அதனால் ரொம்ப எதிர்பார்ப்போடு தான் கதை படிக்க ஆரம்பித்தேன் அப்படி என்ன புதிதாக இவர் எழுதிவிட்டார் என்று எண்ணிக் கொண்டே. அதிக எதிர்பார்ப்பு பெரும்பாலும் ஏமாற்றத்தை விளைவிப்பது வழக்கம். ஆனால் படிக்கத் தொடங்கியதும் அப்படியே கதையோடு ஒன்றி விட்டேன்.
மண்டை காய வைக்கும் சஸ்பென்ஸ் இல்லை, த்ரில் இல்லை, வழக்கம் போல ஒரு காதல், குடும்பத்திலே ஏற்படும் பிரச்சினை காரணமாக சிடுசிடு முகமூடி போட்டுக் கொள்ளும் கதாநாயகன், அவனைச் சுற்றி சுற்றி வரும் நாயகி, நட்புகள் என்று பழைய பல்லவி தான். ஆனால் நீங்கள் போட்டிருக்கும் புதுமெட்டு புதிய பாடலாகவே கண் முன்னே கொணர்ந்துள்ளது.
உங்களின் கைகள் செய்த மாயம் என்னவோ அனைத்துமே புதிதாய் மிகப் புதிதாய், யதார்த்தம் மட்டுமே தோன்ற எந்தப் பரபரப்புமின்றி, தெளிவான நடையோடு, நாகரீகமான குடும்ப உறவுகளின் உணர்வுகளை மிகத் தரமாக சொல்லும் வர்ணஜாலங்களோடு ஒரு அழகான வானவில்லைப் படைத்து விட்டது.
உங்கள் மீதிக் கதைகளையும் படிக்க வெகு ஆர்வமாக இருக்கிறேன். மேலும் பல சிறந்த கதைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹேமாக்கா.
Geetha baskaran
Madam,
veelikal theetum vaanavil is fantastic novel.
nethra character was fabulous!

i  happened   to read    nenannamvallave . i   am   thrilled    in   your   way  of  narration   fantastic job

excellent depiction    of characters    like  sriram   harini    keep  on  writing    for  me

Alamu Planiappan – Mar 5 2018
ஹேமா, 
நலம். அனைவரும் நலமா. "விழிகள் தீட்டும் வானவில்" புத்தகம் வாங்கியதும் வாசிக்க இயலவில்லை.தாேழியிடம் இருந்து வாங்கியதும் மீண்டும் வாசித்தேன் . என்ன தான் ஆன்லையினில் வாசித்தாலும் புத்தகம் வாசிக்கும் பாேது ஏற்படும் மனநிறைவு தனி தான். "எனக்கே எனக்கு" என்பதைப்பாேல் அந்த புத்தகம் என் கையில் படும் பாடு ; என் அன்பு மகளையும் அவரையும் கேட்டால் இருவரும் தனிக்கதை எழுதுவார்கள். சில சமயம் கிட்சன் ஷெல்பில், அங்கிங்கெனாதபடி பல இடங்களில் வைத்துவட்டு "ஹேமா புக் இங்கதான இருந்துச்சு" குட்டி பார்த்தியா , என்னங்க ப்ளீஸ் பாருங்களேன் என்று கடைசியில் என் அலுவலக பையில் பஸ் பயணத்தின் பாேது படிப்பதற்காக காத்திருக்கும். அதனால் புத்தகமே என் விருப்பம்.
ஆகாஷ் நேத்ரா -   கதையில்  வரும் கதாபாத்திரங்கள் இரண்டு வகையை சேர்ந்தவர்களாக  இருப்பர் ,  நாம் அன்றாடம் சந்திக்கும் நபர்களாகவாே அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நாம் எண்ணுபவர்களாவாே இருப்பர் . இந்தக்கதையின் அனைத்து கதாபாத்திரமும் முதல் வகையை சேர்ந்தவர்களாக  இருப்பதால் கதையாேடு மிகவும் ஒன்றிப்பாேனாேன் என்பது உண்மை. 
ஆகாஷ் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமான குணம் காெண்டது , நேத்ரா மிக மிக அபூர்வமான குணாதிசயம் காெண்ட கதாபாத்திரம்  இன்றைய காலகட்டத்தில் ,  ராெம்பத்தான்     செய்கிறான் (my daughter often uses this  about her class mates ) பாேகிறான்   என்று விட்டுவிடாமல் அவனின் இயல்பிலேயே அவனை தன் வழிக்கு காெண்டு வருவது மிக அழகு. அது எவ்வளவு கடினம் என்பது அந்தச் சூழலில் இருப்பவர்களுக்கு தெரியும். 
அடுத்து என்னைக் கவர்ந்தது நேத்ராவின் தந்தை ஒற்றைக் குழந்தை  அதுவும் ஓரே பெண் குழந்தையை காெண்ட தந்தையின் பரிதவிப்பு மிக அழகாக சித்தரித்துள்ளீர்கள் என் தந்தை தான் என் நினைவில்  தாேன்றினார். பின்னர் மகளின் சந்தாேஷமான வாழ்வை கண்டு பெருமிதம் காெண்டு ஆகாஷின்குணத்தால் ஈர்க்கப்பட்டு   ஆகாஷை கவனித்துக்காெள்வது எல்லாத்தந்தைகளிடத்திலும் காணப்படும் இயல்பு. 
உங்கள் அனைத்து படைப்புகளும் இயல்பு மாறாமல் இருந்தது. அதுவே உங்கள் பலம். கதை தானே என்று எந்த இடத்திலும் ஒரு சிறு அளவில் கூட நீங்கள் எந்த மேஜிக்கையும் நிகழ்த்தவில்லை ஹேமா. வாழ்த்துகள் ஹேமா. 

அலமு. 
Rubiya – Apr 5 2018

Hello mam....,,விழிகள் தீட்டும் வானவில் கதையை Amazon kindle  வாங்கி வாசித்தேன்.. கதை அப்படின்னு சொல்ல முடியாது சில பேரோட வாழ்கைல இந்த மாதிரி நடந்துருக்கும். நம்ம பார்வையாளர்கள் தான். அனுபவித்த வலிகள் நிறைய.... வாசிக்கும் போது புரியுது......ஆகாஷ்.  ......நேத்ரா....ஒவ்வொரு கதாபத்திரமும் மனசுல பதிஞ்சுறாங்க.....ஆகாஷ் நேத்ரா கிட்ட சொல்லுற நீ இல்லன்னா நான் ஒண்ணுமே இல்லடி....அது வழக்கமாக நான் என் கணவரிடம்  சொல்லும் வாக்கியம்......ரொம்ப அருமை.... நீங்க நிறைய எழுதுங்க. நான் வெளிநாட்டுல இருக்கது நால  புத்தகம் வாங்க முடியல..Amazon kindle போட்டது ரொம்ப வசதியாக இருக்கு......  உங்களோட அடுத்த கதைய வாசிக்க ஆவலுடன் இருக்கும் வாசகி....ரூபியா

 Anonymous said...
Super hema...
Harini's character portrays the present generation of newly married women and new mothers.
After marriage and between one year of life, there is absolute happiness and understanding of partners. But after child birth, things change.
When we are not ready to accept our mistakes, it takes the next level to be more obstinate on it and tend to disregard of all advices. It was the same situation with harini also...some immature and possessiveness and not thinking futuritiscally...this is the stage where all women has to face and balance both their personal life and career. But for reality, only few pass out successfully and many do not.Out of experience only we all learn lesson.
Good that harini realizes herself finally. Once again a very realistic novel...
June 20, 2017 at 1:12 AM
 naga ganesan said...
Arumaiyana niraivana kathai.kavithai nalla irunthathu.ammuvin kavithai ha...ha...ha....aakash solvathu pola nethra illai endral avan ennavagi irupano endru engalaiyum enna vaithu vittal nethra.iruvarum made for each other.antha palaiya veetai vendum endru aakash solvathu yethartham....kathai muluvathum thuli kuda yethartham meeramal iyalpaka irunthathu.very nice Hema.adutha kathaiyai aavaludan ethirparkiren.
June 11, 2017 at 9:35 PM
Blogger suryamuki said...
Superb ending hema...akash kavithai super..nethra kavithai ada ada...ha ha...excellent story...will miss akash and nethra...come back soon with another rocking story pa..All the best:)
June 11, 2017 at 10:45 PM
Blogger Srimathi Gopalan said...
ஹாய் ஹேமா அருமையான கதை...நிறைவான முடிவு....ஆகாஷ்...நேத்ரா கதாபாத்திரம் .....மறக்க முடியாத ஒன்றாக....கற்பனையே என்றாலும் நேத்ரா ....இப்படி ஒரு பெண் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும் என்று ஏங்க வைத்தாள் என்பது தான் உண்மை....நன்றி பதிவுகளுக்கு...வாழ்த்துக்கள் இது போல் நிறைய கதைகள் எழுதுவதற்கு...
ஹாய் ஹேமா எப்பொழுதும் போல் அழகான பதிவு....பகலும் இரவும் போல் தான் வாழ்க்கையும் , எதுவுமே நிரந்தரம் இல்லை , பெரியவா சொல்லுவா ...புகழும் , அந்தஸ்தும் வரும்பொழுது ....மரணம் நம்மை நோக்கி வந்தால் எப்படி பயப்படுவோமோ ....அப்படி பயப்படவேண்டுமாம்....அப்பொழுது தான் இவைகளுக்கு நம் மனம் அடிமைப்படாமல் திடமாக இருக்குமாம்...எந்த சமயத்திலும் நிதானம் தவறாமல் , எதையுமே பொறுமையாக யோசித்து செய்தால் , எந்த சூழ்நிலையையும் சமாளித்து விடலாம் ....ஆகாஷுக்கு நேத்ரா போல் அருமையான மனைவி அமைந்துவிட்டால் , இப்படி ஒரு பெண் மனைவியாக கிடைத்தால் வீட்டில் சந்தோஷத்துக்கு என்ன குறை வரப் போகிறது....எதார்த்தமான சூழ்நிலை... அழகான வார்த்தைப் பிரயோகங்கள்....என்று அருமையாக கதையின் முடிவுப் பகுதிக்கு வந்துடீங்க....நிறைய நல்ல கதைகளைப் படைத்து மேன் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹேமா.
June 11, 2017 at 11:13 PM

Blogger Aruna Sarvanan said...
Very super and interesting story and romba niraivana kathai
June 12, 2017 at 12:17 AM

Blogger Cynthia Devi said...
Superb story Hema ....
June 12, 2017 at 12:44 AM

Blogger Cynthia Devi said...
மேலிருந்து கீழாக ஒருவர் நிலை இறங்கும் போது ஆகாஷ் நிலை தான்.... வெகு அழகாக அருமையாக அவன் பாத்திரத்தை செதுக்கி இருக்கீங்க... 👌👏 நேத்ரா தேவதை... பிடிவாதமாக ஆகாஷ் மனம் மாற்றி அவனை குடும்ப உறவுக்குள் சுமுகமாக செல்ல வைத்த செல்லம் 😘 அவளின் குறும்பு பொறுப்பு,அடம் அனைத்தும் அழகு 😍 ரொம்ப நிறைவாக இருக்கிறது.... ஒரு இடத்தில் கண்கள் கலங்கி விட்டேன்.. சௌமி திருமணம் அதற்கு ஆகாஷ் செய்வது அண்ணா இல்லை என்று ஏக்கம் எழுந்தது மிக பிடித்தது💓
June 12, 2017 at 1:23 AM
Blogger Sudha said...
ஹேமா என்ன சொல்ல அவ்வளவு அழகான நிறைவான முடிவை கொடுத்திருக்கீங்க...என்னால ஒவ்வொரு எபிக்கும் கமென்ட் போட முடியாமல் போய் விட்டது...ஆகாஷ் நினைப்பது போன்று நேத்ராவை தவிர அவனை, அவனது வலியை, வேதனையை உணர்வுகளை சரியாய் புரிந்து கொள்ள அவளால் மட்டுமே முடியும்....உங்கள் கவிதை அருமை ஹேமா ஆனா அதை பீட் பண்ணிடுச்சு நேத்ராவின் கவிதை..ஹாஹா செம போங்க நாங்களுமே பயந்துட்டோம் நல்லவேளை ஆகாஷ் தடுக்கலேன்னா இன்னும் என்னவெல்லாம் வந்திருக்குமோ....வாழ்த்துக்கள் ஹேமா...
June 12, 2017 at 7:42 AM
Blogger Jansi M said...
சமீபத்தில் நான் வாசித்ததில் மனதை கவர்ந்த கதை இது.

ஆகாஷிம் நேத்ராவும் உள்ளத்தை கொள்ளைக் கொண்டனர்.

கவிதை நல்லாயிருக்கு

நேத்ரா சொன்னதுதான் இன்னும் பிரமாதம். :D

I'll miss these characters very much
June 12, 2017 at 12:13 PM
Blogger arunavijayan said...
அருமையான கதை,நிறைவான முடிவு. கதையை தொய்வில்லாமல் ரொம்ப அழகா சொல்லியிருந்தீர்கள். Simply superb, characterisation of each and everyone very nice.Akash a real picture of a person who has faced such a unexpected turn in life.
Nethra really an angel who had turned things right for Akash. As always made us to live with the characters, hats off. Eagerly waiting for your next story. All the best sis.
June 13, 2017 at 2:47 AM
Blogger hadija banu said...
Hi Hema,
Azhagana yedharthamana kadhai....unga azhagana yezhuth moolam gopurathil irundhu kuppai maetuku irangiya kudumbathin yedhartha nizhaiyai , avargalin unarvugalai, poratangalai kanmunnae kaatchiyaga viruchiteenga.. Aakash and nethra vin kaadhal azhagana kavidhai....kalyanathuku pinnadiyana avargal vaazhkaiyin chinna sandai ungal yedhartha yezhuthai yeduthu kaathugiradhu.....Sowmi and nethra vin natpu kaalam kadantha azhagana natpu....all in all a super entertainer.....thanks for giving an entertaining story.....
June 15, 2017 at 1:04 AM
Blogger Ramya Govindaraj said...
Very nice story hema. Arambathula irunthu mudivi varai viruvirupu.Akash sema hero avanoda ambition sithayum bothu avanoda feelings ellam sema express pannirkeengha antha antha charactersum kannumunady vazharanghapa ungha ovovoru storyum ethartham nice hema
yours .
ramya
June 19, 2017 at 4:15 AM
Blogger sujii said...
Hi Hema, Thanks for yet another lovely story.Read all updates.Super.Nethra is lively Sivakasi pattasu.Simple story neatly portraits with lovely characters.TMT muruku kambiyave suthala vittuta nethra.Nethra and sow natapagtum,akash and varum natpagatum ellame correcta alavil supera koduthu iruntheengha.Panam iruthathan madhipu even relatives mathiyil kuda athuthan nidharsanaman unmaiyum kuda.If you don't have money nammaku kidaikura treatment verai ithai ennoda lifela naria kadanthu vanthruken.Ungha heros ellame konjam illai nallave kanji kuduthu viraipa irupangha :).Ellam counter dialogue i thoroughly enjoyed.All tyhe best for your new story.Way to go.Thanks for sharing
June 19, 2017 at 3:14 PM
Blogger sujii said...
Innum onnu solla maranthu poiten.akash sister wedding munnadi avan thangachita pesura idam athuku nethra pandra lollu :) hahaha romba rasichu padichen hema.Neengha counter dislogue queen athan ungha story vara counter supera varuthu."Ammu anni agiral" hahahaha i loved it.Nethra pathira padaipu super,Vizhayatu ponnai,thevaiyana idathil romba porupana ponnai,counter kudukum thilagamaiyai ,appo appo akash mattum stubbornai ,approm padithi edukum akash wifeyai you have nailed her character
 Sharmila Natarajan said...
Nice episode, Hema! Special thanks to you for not finishing the story immediately after wedding. The past-wedding episodes narrates and gives a feel of real life! I didn't expect Akash to be sweet to her after wedding. Well, he is nice but reasonable too! His loss and insults will not subside until the results of his hardwork are reaped beneficially and respectfully. It's a deep scar in his memory. 

Glad to see them buy new house and all. You know what? I am expecting more from such sidumoonji heroes!!!! :-) I don't know what that "more" is, but it feels so nice to let them be what they are naturally. Let Akash stay a bit "sidumoonji" only. Our Nethra will compensate and make his life colorful. In the world with emerging feminists, this is one of the few novels that focussed on the pain and rough path of a man. Akash's emotions are painfully captured and he was pushed to state where he was not even able to realize his 'love' towards Nethra - one of the beautiful feelings and emotions of an adulthood!! That explains his pain and how responsible he is as an individual!! Wish this generation kids are in sync with the world and have an empathy to societial issues! Nice story pa!

Padikka romba ithama irundhadhu...

I would like to read your other three novels as well. I live in the US, so cannot buy hard copy. I would appreciate if you could give full link to your published words in a safe way so the copies don't don't get misused.

Thanks, Hema.
 malaram said...
ஹேமா சூபெராக முடித்துவிட்டீர்கள். ஆகாஷ் நேத்ரா charecter மனதிலயே நிற்கிறது.
June 12, 2017 at 4:34 AM
Anonymous sindu said...
Super finish

aakash- Nethra voda payanithathu romba arumai ya irunthathu :)
June 13, 2017 at 2:13 AM
Anonymous Umamanoj said...
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே..
சங்கு சுட்டாலும் வெண்மை தரும். ..ஆகாஷ். ..
 
நிலையில் கீழிறங்கினாலும் தன்னிலை பிறழாமல் இருப்பது மிக அருமையான பாத்திரம். .நல்ல வடிவமைப்பு. ..

நேத்ரா காதல் ஜெயிப்பது மிகமிக அருமை. .
பேச்சும் சூப்பர். .கவிதையோ சூப்பரோ சூப்பர். ..

ஆகாஷ் காதலை வெளிப்படுத்திய விதம் நெகிழ்வு..

முடிவு வரை வேகமாக விருப்பமாக நல்ல குடும்ப நாவலை
கொடுத்தமைக்கு நன்றி ஹேமா. .
June 17, 2017 at 6:18 PM
 ashwini said...
hi Hema

just now i finished all the updates at a glance very nice and practical story at first aakash was very hard and shrewd but the reason behind is very tragedy he satisfied his dream and began to work at the same time his angry on his parents his mother was very innocent she doesnt know to save they doesnt realise about that hats off to aakash even though he doesnt get any help from ravi he stood still and boldly he choose media on the other side what a sweet character nethra is really aakash family is very lucky to have a daughter in law like her from the childhood she deeply fixed aakash love in her heart she win on her love and convinced her parents she boldly asking aakash and she rectify his mistake how nice i enjoyed the story totally a different jorner from pani iravum thani nilavum in between the story harsha came is he pattampoochi para para hero thank you so much for the excellent story when will be your next story eagerly waiting for the next story
June 19, 2017 at 1:21 AM

Kindle reviews 

M.Praveen
5.0 out of 5 stars Fantastic.
Reviewed in India on March 2, 2020
Verified Purchase
rated it it was amazing
Fantastic.

Love, comedy, emotions and feelings.such a wonderful story.awesome.lovable friends sow and ammu.akash chance a illa a wonderful Hero, ammu semma ya.😍😍😍
Feb 23, 2020rated it it was amazing
Beautiful story ....
Jun 12, 2020rated it it was amazing
Very nice novel...

Enjoyed reading your novel ma...

Akash avanoda life la dream carrier ah vittadhula irundhu kadinama irundhadhuku , nethra oda love avana romba romba happy ah vechruku ....

Akash-Nethra - Lovely couple
Mar 06, 2020rated it really liked it

கதைபோலில்லாது எதார்த்தமான கதாபாத்திரங்களோடு நகர்கின்றது கதை.

தொடக்கமே நட்பும் கிண்டல் கேலியுமாக ஆரம்பித்து, வில்லன் போன்றதொரு பிரேமையில் அறிமுகமாகிறான் நாயகன். வில்லன் என்று சொல்வதை விடவும் அவன் தாய் சகோதரி பாவனையில் குடும்பத்துக்குக் கஷ்டம் கொடுப்பவன் போன்றதொரு எண்ணம் என்னுள் வந்ததைத் தடுக்க முடியவில்லை. அதுபார்த்தால், தேவையற்ற கற்பனைகளற்ற எதார்த்தங்களுக்காக தன் மேலான ஆசைகளைத் துறந்துவிட்டு வாழ்க்கை காட்டும் சவால்களை வெல்ல உச்சபட்சமாக முயலும் ஒருவனாக இருக்கிறான், அவன். அதிலேயும் எல்லோருமே சறுக்க
 ...more
Dec 29, 2018rated it it was amazing
Wonderful

Lovely. Akash Pata kastam tears vara vachutha teenage la avan studies so sad but nethra moolam alagana life. Ammu what a character so sweet

----------------------------
Ms. Roobiya - Apr 23 2018
Hello mam....,,விழிகள் தீட்டும் வானவில் கதையை Amazon kindle  வாங்கி வாசித்தேன்.. கதை அப்படின்னு சொல்ல முடியாது சில பேரோட வாழ்கைல இந்த மாதிரி நடந்துருக்கும். நம்ம பார்வையாளர்கள் தான். அனுபவித்த வலிகள் நிறைய.... வாசிக்கும் போது புரியுது......ஆகாஷ்.  ......நேத்ரா....ஒவ்வொரு கதாபத்திரமும் மனசுல பதிஞ்சுறாங்க.....ஆகாஷ் நேத்ரா கிட்ட சொல்லுற நீ இல்லன்னா நான் ஒண்ணுமே இல்லடி....அது வழக்கமாக நான் என் கணவரிடம்  சொல்லும் வாக்கியம்......ரொம்ப அருமை.... நீங்க நிறைய எழுதுங்க. நான் வெளிநாட்டுல இருக்கது நால  புத்தகம் வாங்க முடியல..Amazon kindle போட்டது ரொம்ப வசதியாக இருக்கு......  உங்களோட அடுத்த கதைய வாசிக்க ஆவலுடன் இருக்கும் வாசகி....ரூபியா

Mr. Gowtham 11 April 20201
Hlo sister. First of all I need to applaud you . Really such a beautiful story sister. Good narration. And I joyfully read . 

Thank you so much for your book hema . 








No comments: