"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, November 21, 2022

'மிளிர்' நாவல் இப்போது கிண்டிலில்

டியர் மக்களே,

'மிளிர்' நாவல் இப்போது கிண்டிலில். கடந்த ஜூன் 2022-ல் புத்தகமாக வெளிவந்தது இப்போது கிண்டில் பதிப்பாக உங்கள் முன்பு. Do read, review and share a word if you like this story.



மனம் விரும்பினால் நம்மால் எந்தத் திசையிலும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்க முடியும். எனினும் எடுத்து வைக்கும் முதல் அடி தான் அதைத் தீர்மானிக்கும். எத்தனை பிரயத்தனம் இருந்தாலும் கால் விரல்களைக் கூட அசைக்க விடாமல் நம்மை கட்டி இழுக்கும் சூட்சம கயிறுகள் இங்கு நிறைய நிறைய. அதிலும் முதல் தலைமுறையாக முன்னேறுபவர்களின் பாதை நிச்சயம் பூ பாதையாக இருப்பதில்லை. பொருளாதாரப் பின்புலம் இருந்தாலும் நிறையச் சமூக விழுமியங்களை உடைத்துக் கொண்டு தான் அவர்கள் தம் பயணத்தைத் தொடங்க வேண்டியுள்ளது. அப்படியொரு பயணத்தை மேற்கொள்ளும் நாயகி தன் கனவுகளைத் தொடர முடிந்ததா, இல்லை நம் சமூகக் கட்டுகள் அவளை மீண்டும் ஒரு வட்டத்துக்குள்ளேயே சிறை செய்ததா என்ற கேள்விகளுடன் இக்கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் “Be the better version of myself” என்பதாகத் தங்களைத் தாங்களே மேம்படுத்தி மெருகேற்றிக் கொள்ளும் நகர்வு தான் “மிளிர்”.

No comments: