"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Friday, December 2, 2022

A quick share

Hi, just thought of sharing this observation, probably for a long time - கதைகளில் ஆணின் போதாமைகளை, தவறுகளைச் சுட்டிக்காட்டினால் நன்று. புரட்சி. பாராட்டு. சரியா சொன்னீங்க. இப்படித் தான் நிறைய பேர் இருக்காங்க. அதுவே பெண் என்றால் ம்ஹும்… நோ. அது எப்படி ஒரு பெண்ணைச் சொல்லலாம்? Regressive.

ஆண் எனில் subjective ஆக உள்ள கதாபாத்திரங்கள், பெண் என்றால் மட்டும் generalize ஆக்கி பெண்ணினத்துக்கே விடுத்த சவால் போல பார்ப்பது ஏன் ???? 

சொல்லும் context-ஐ விடுத்து அதைத் திரிப்பதும், ஓரிரு வார்த்தைகளை மட்டும் பிடித்து வேறு அர்த்தங்கள் கற்பிப்பதும் கூட நிகழ்கிறது. அது அவரவர் interpretation என்று கடந்து சென்றாலும் சிலவற்றை இங்கே சொல்ல வேண்டியுள்ளது. ஆண் பெண் பேதம் பார்த்து மனித குணங்களை அளவிடுவதும், ஏற்றுவதும் தாழ்த்துவதும் என்னைப் பொறுத்தவரை ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. பெண்களுக்கான ரிசர்வேஷன், பணியிட சவுகரியம், பாதுகாப்பு, கரிசனம், ஒரே அளவிலான சம்பளம்/உயர்வுகள், குடும்பத்தில் a fair equal treatment & respect இவை மிக அவசியம். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. மற்றபடி பொறுப்புகளிலும் உணர்வளவிலும் பெண் என்பதற்காக சலுகைகள் எதிர்பார்ப்பது சரியான பார்வையா?

சுதந்திரம் வேறு, I’m entitled, எப்படி வேண்டுமானாலும் நடப்பேன் என்பது வேறு. பொறுப்பாக இரு, சுறுசுறுப்பாக இரு, சுயநலமாக இருக்காதே, உன் வேலையை நீயே செய், ஒரு கமிட்மெண்டுக்குள் வந்துவிட்டால் அதற்கு மரியாதை செய், பிறர் உணர்வுகளை மதித்து நட, நம்பகத் தன்மையோடு இரு என்று மகன் மகள் இருவரிடமும் தான் சொல்ல வேண்டும். உணர்வுத் தளத்தில் எல்லோருமே ஒன்று தானே. இதை மறுப்பவர்கள் மறுத்துக் கொள்ளட்டும். 

ஆனால்… அப்படியான pseudo கருத்துள்ளவர்கள் அதை என் எழுத்தில் எதிர்பார்க்க வேண்டாம். முன்னோக்கிய சிந்தனைகளுக்கும் முரட்டுத்தனத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. 🙂

No comments: