"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Saturday, December 3, 2022

சகி - விமர்சனங்கள் (1)

சகி நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து கருத்துக்களைப் பகிரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏! 

Sep 5 2022 - Ms. Alamu Palaniappan

Hema Jay's "சகி"

முகவுரை கொஞ்சம் யோசிக்க வைத்ததோடு ஆர்வத்தையும் தூண்டியது. வாசிக்க ஆரம்பித்த நொடியிலிருந்து ஆரம்பமாயிற்று அழகான , எந்த இடத்திலும் முகம் கோணச் செய்யாத பயணம் கதை முழுவதும்.
இன்றையச் சூழலில் மிக மிகத் தேவையான ஒரு மாற்றம். சாத்தியமா? என்ற கேள்வி தோன்றவே தேவையில்லாத ஒன்று. " ஆனால் அது எவ்வாறு சாத்தியமாகக்கூடும் என்பதையும் , எங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டால் சாத்தியமாகும் என்பதையும் இதை விட அழகாகக் காட்ட இயலாது என்றே தோன்றுகிறது.
" விசாலமான பார்வை " ? இதற்கான பதிலே "சகி".
Yes, it is a delicate plot .... but u made it a great hit.

Congratulations and Best Wishes Hema.

Sep 5 2022 - Ms. Chitra Ganesan

என்ன சொல்லன்னு தெரியல.ஆனா மனசுக்கு ரொம்ப நிறைவா,திருப்தியா பீல் ஆகுது.சகி அருமையான உணர்வு.👏

வாழ்த்துகள் Hema Jay 😍😍💐

Sep 5 2022- ApsareezBeena Loganathan

சகி......

சரியான நேரத்தில்
சரியாக சிந்திக்கும் இடத்தில்
சரியான சிந்தனையில்
சற்றும் எதிர்பாராத
சமநிலையில் சொல்லியிருப்பது
சாட்டை அடியான வார்த்தைகள்
சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்
சகி....வாழ்த்துக்கள்💐💐💐
சபாஷ் 👏👏👏👏👏👏

Sep 5 2022 - Ms. Rajam

arumai arumai.

சகி என்ற அழைப்ப்பு
பாரதி, ராம்க்கு அழகா பொருந்தது.
பாரதியின் உணர்வுகளை இவ்வளவு
அழகா, அழுத்தமா சொன்னது செம்ம
No words to express my பீலிங்ஸ்.
பான்டஸ்டிக்

Sep 5, 2022 - Ms. Divya Sivakumar

Hema Jay இன் #சகி

எப்போவுமே இவங்க கதைகளை படிக்கும் போது நம்மோட பார்வை வட்டங்கள் விசாலமாக மாறும்....
சும்மா மேம்போக்காக எதயுமே கிலிஷேவா எழுதாம நம்ம சுத்தி அக்கம் பக்கம் இருக்க விஷயங்களை தான் இவங்க சொல்லிருப்பாங்க...அதே போலானொரு கண்ணோட்டத்தை தான் இந்த கதையும் தந்திருக்கு...
இப்போ அடிக்கடி பாக்கற கேள்விப்படற விஷயங்கள் தான் இவை...அதை பத்தி வீட்ல இருக்க முந்தைய தலைமுறையினர் விமர்சிக்கும் போது அவங்க வாழ்க்கைய விமர்சிக்க இவங்களுக்கு என்ன உரிமை இருக்குன்னு தோணும்...ஆனா அவங்க அந்த முடிவை எடுக்கமுன்ன எவ்ளோ மனரீதியாக உறவுரீதியா சிக்கல்களை சந்திக்கிறாங்க அப்படின்னு சொல்லிருக்காங்க...
மிக மிக தேவையான காலமாற்றம் இன்றைய சூழலில்... முகம்கோனா இயல்பான எழுத்து நடை...

ரொம்ப விசாலமான பார்வை...வாழ்த்துகள் Hema Jay

Sep 7, 2022 - Sathyabhama Venkanna 

Very good story mam

Sep 8 2022 Ms. Parvathi Thiagarajan

சகி கதை நன்றாக இருந்தது ஹேமா.பாரதியின் கேரக்டர் நீங்கள் வடிவமைத்த விதம் மிக அழகு.ஐம்பதிலும் ஆசை வரும் ஆனால் பெருமளவில் பெண்கள் விரும்புவது ஒரு கம்பானியன்சிப் நல்ல புரிதல் உள்ள ஒரு தோழமை மட்டுமே.அந்த வகையில் உங்கள் பாரதி என்றென்றும் நினைவில் நிற்பாள்.One more feather in ur cap.congrats

Sep 8, 2022 Ms. Amirtha Seshadri

சகி- delicate plot. சகி என்ற வார்த்தையின் அர்த்தம் பூரணமாக உணரபட்டது. இப்ப டைவர்ஸ் சாதாரண நிகழ்வு, உன் குழந்தை என்னுடையதும் என ஆணும் ஏற்கும் காலமும் வந்துவிட்டது. அதே போல் இதுவும் நடைமுறையில் வரும் . மாற்றங்களை இப்பொழுது அங்கங்கே நடந்து வருகிறது.

டெலிடேக் கதை எவ்வித முகசுருக்கங்களும் இல்லாம கொண்டு வந்த விதம் அருமை. பாரதி தன் அக்காவிடம் கடைசியாக பேசுவது சாவதானாலும் நானே.... வரிகள் 🙌🙌🙌🙌 Hema Jay


Sep - 9 2022 - Ms. Subbulakshmi Rajan

Hello Ms. Hema Jay, I read your novel Sahi recently. Wonderful message and an awesome writing style. I deep dived in to the novel and felt Bharathi’s loneliness, disappointments and finally a huge relief. I lived the life of Bharathi for couple of hours.Tears rolled down my eyes when I read the last few pages. I wish you all the best for your future projects. Thank you so much for such a wonderful novel.


Much love ,
Subbulakshmi Rajan


No comments: