"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Friday, April 19, 2024

அன்பான அதிதிக்கு | Anbana Adhithikku - Kindle Publication

ஹாய்,

உங்கள் பெரும் அன்பையும் வரவேற்பையும் பெற்ற 'அன்பான அதிதிக்கு' இப்போது கிண்டிலில். நண்பர்கள் வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி !


நாவலின் முன்னுரையில் இருந்து -
‘அன்பான அதிதிக்கு’ வாயிலாக நீங்கள் சந்திக்க இருக்கும் ஆதனும் அதிதியும் எதிரெதிர் துருவங்களில் நின்றிருப்பவர்கள். ஆதன் இன்றைய போட்டி யுகத்தின் பிரதிபலிப்பு எனில் அதிதி அன்பின் சங்கமம்.
சிலநேரம் வேகத்தடைகள் தான் வாழ்வின் பொருளை உணர்த்துகின்றன, அல்லவா!? வெற்றி மனிதனுக்கு அங்கீகாரம் தந்து அவனுடைய செயல் வல்லமை குறித்து அவனுக்கே நம்பிக்கை அளிக்கிறது என்றால் சரிவு அவனுடைய கால்கள் தரையில் தான் ஊன்றியுள்ளனவா என்று பரிசோதிக்கின்றன.
---
அன்புடன்,
ஹேமா ஜெய்
No photo description available.

All reaction

Wednesday, April 17, 2024

கணங்கள் - சிறுகதை

ஹாய், வாசகசாலை இலக்கிய இதழில் என்னுடைய சிறுகதை ஒன்று வெளிவந்துள்ளது.

கணங்கள்.


வாய்ப்புள்ள நண்பர்கள் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். மகிழ்வேன். வாசகசாலைக்கு நன்றி!


Saturday, March 2, 2024

டெக்சாஸ் தமிழ்ச் சங்கம், பாரதி கலை மன்றம் நடத்திய கலந்துரையாடல்

டெக்சாஸ் தமிழ்ச் சங்கம், பாரதி கலை மன்றம் நடத்திய கலந்துரையாடல் ஒன்றில் சென்ற வாரம் பங்கேற்றது இனிமையான அனுபவமாக இருந்தது. வெவ்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகள் பங்கேற்ற நிகழ்வில் நானும் கலந்து கொண்டது பலரையும் அறிந்து கொள்ளும் நல்வாய்ப்பாக. நேர்த்தியான ஒருங்கிணைவு கொண்ட நிகழ்வு இது. அமைப்பினருக்கு நன்றி!

 
இலக்கியக் காதல், நவீனக் காதல், வருங்காலக் காதல் என்ற தலைப்பில் நடந்த இணைய வழி உரையாடல் கீழ்கண்ட இணைப்பில்.

(Timestamps : my Intro at 3:41; participation @ 18:29 & 41:10)
 
 

Monday, February 26, 2024

‘சிற்றெறும்புகளின் காலம்’ சிறுகதை தொகுப்பு

ஸ்ருதி டிவியின் Best sellers of 2024 book fair வீடியோவில் -ல் சிற்றெறும்புகளின் காலம் நூலையும் குறிப்பிட்டுள்ளார் பதிப்பாளர்.  மகிழ்வான தருணம். நினைவுகளுக்காக இங்கு பதிந்து வைக்கிறேன். :) 

 https://www.youtube.com/watch?v=4bDQ_oCmTGs&t=2185s

Tuesday, January 9, 2024

Friday, January 5, 2024

‘பூவிதழ் தூரிகை’ - முழு ஆடியோ நாவல்

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

‘பூவிதழ் தூரிகை’ நாவலை இப்போது முழு ஆடியோ நாவலாகக் 

கேட்டு மகிழலாம். உங்கள் மனம் கவர்ந்த யாழினி மற்றும் அர்ஜுன். 

என்னுடைய நாவல்கள் சிறுகதைகளை ஆடியோ வடிவில் கேட்க, 

"Hema Jay Audio Novels" சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். 

 

Thanks everyone for the love and support!

https://www.youtube.com/watch?v=VgpQj4k-OBI

 

Channel link - https://www.youtube.com/@hemajaynovels

 

அன்புடன்,

ஹேமா ஜெய்