"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Sunday, January 22, 2017

ஜல்லிக்கட்டு

கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு மட்டும் அல்ல, தமிழ் உள்ளங்கள் எங்கெல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ அங்கெல்லாம் தீப்பற்றிக் கொண்டதைப் போல மக்கள் எழுச்சி. சிறு தீப்பொறியாக தோன்றிய நெருப்பு பெரும் உத்வேகமாக மாறி நம் எல்லோர் மனதிலும் தூங்கிக் கொண்டிருந்த தமிழர் எனும் உணர்வை, அடங்கி கிடந்த அடிமை எண்ணங்களை, தூங்கி வழியும் மந்தத்தனத்தை களைந்து வெள்ளமாக பீறிட்டு வெளியே வந்ததை யாராலும் மறுக்க முடியாது. உண்மையில் சொல்கிறேன். இந்த போராட்டக் களம் மக்கள் களமாக மாறி மெரினா தளும்பி நிறைந்ததை டிவியில் பார்க்கையில் உடலெல்லாம் சிலிர்த்து நின்றது. உணர்ச்சி வேகத்தில் கண்கள் கலங்கிப் போயின. அதையெல்லாம் மீறி போராட்டக் களத்தில் நாமும் சென்று நிற்க முடியவில்லையே என்ற சூழ்நிலை காரணமாக உள்ளூர உறுத்தலும் கூட. நல்ல வேளை! வெள்ளியன்று இங்கு நிகழ்ந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றப்பிறகு தான் அந்த குற்றவுணர்வு நீங்கியது. நிற்க! இது சொந்த பெருமை பேசும் பதிவல்ல.

Monday, January 2, 2017

பனி இரவும் தனி நிலவும்

அன்பு தோழமைகளுக்கு,

இந்த புதிய ஆண்டில் இனிய செய்தியாக என் மூன்றாவது நாவல் “பனி இரவும் தனி நிலவும்” புத்தகமாக மலர்ந்துள்ளது. நாவலை வெளியிட்ட பிரியா நிலையத்தினருக்கு நன்றிகள் பல! இந்த முயற்சியில் என்னுடன் துணை வந்த தோழிகள், சகோதரிகள், கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நட்புகள் என் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! Special Thanks to Manjula Senthil KumarLady's Wings Group and LW Friends!