என் முதல் மூன்று
கதைகளுக்கும் வந்த விமர்சனங்களை ஒரே இடத்தில் தொகுக்க வேண்டும் என்ற நீண்ட நாள்
ஆசை இப்போது தான் சாத்தியமாகி உள்ளது. என் விருப்பத்தின் முதல் நோக்கம் கருத்துப்
பகிர்வுகளை ஒரே தொகுப்பில், என்
தனிப்பட்ட வலைபதிவில் சேமிப்பது. இரண்டாவது உள்நோக்கம் எனக்கே எனக்காக; பின்னாட்களில் திரும்பிப் பார்க்கும்போது கிடைக்கும் சந்தோசத்திற்காக -
எழுத்துக்கு கிடைத்த விமர்சனங்களை எங்கும் தவற விட்டுவிடக்கூடாது என்ற ஆவல்
மட்டுமே 😊
லேடிஸ் விங்க்ஸ் தளத்தில் எழுதிய 'நீ நான் நாம் வாழவே' கதையின் அனைத்து விமர்சனங்களும் கீழ்க்கண்ட இணைப்பில் உள்ளன. (இதுவுமே எனக்கே எனக்காகத் தான்.. லிங்க்கை தேடி கண்டுபிடிக்க அடுத்த முறை நேரம் செலவழிக்க வேணாம், பாருங்க ☺ )
https://www.ladyswings.in/community/threads/3375/page-56
கதை நிறைவு பெற்றதும் வந்த முழுமையான விமர்சனங்களை மட்டுமே இங்கே தொகுத்துள்ளேன். இரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் நிறைய பதிவுகளை தேடி எடுக்க முடியவில்லை. வருத்தம் தான் எனினும் இப்போதாவது அமைந்ததே என்ற சிறு திருப்தி!
Review by Ms. Hameeda on Dec 26,2015
நீ நான் நாம் வாழவே....
கதையின்
தலைப்பே ஆயரம் கதைகள் பேசுகின்றது. Marriage is an
institution. நமது கலாசாரத்தில்
திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம் மட்டுமல்ல....இரு குடும்பங்களின் இணைவு...
அப்படியான நிகழ்வுக்கு...தங்கள் வாழ்வின் அடுத்த படிக்கு, தங்களை உயர்த்திக் கொள்ளும் பக்குவம் அந்தத் திருமண ஜோடிக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் வெற்றிகரமான அடுத்த நகர்வை சுவைக்க இயலும்.
பெண்ணுக்கு மணவாழ்க்கை என்பது நாற்றைப் பிடுங்கி எடுத்து வேறொரு இடத்தில் நடுவது போலத் தான். அப்படி பிடுங்கி எடுக்கும் போது அந்த வேரோடு சேர்ந்து வேரடி மண்ணும் சிறிது ஒட்டிக் கொண்டு இருப்பது இயல்பு. பெண்ணின் இயல்பும் அப்படியே!
தன்னுடைய ஊர், தன்னுடைய பெற்றோர் தன்னுடைய சொந்தங்கள்...கடந்து வந்த வாழ்க்கை முறை அனைத்தும் வேரடி மண்ணைப் போல அவள் மீது படிந்திருக்க அந்த மண்ணின் குணங்கள் அவளின் செயல்களை, இயல்பை வடிவமைப்பதும் இயல்பே.
அப்படியான இயல்புடன் கூடிய நாயகி ஹரிணி.
பெற்றோர், உடன் பிறந்தோர் சொந்த பந்தங்கள் அனைவருடனும் இயல்பான பிணைப்புடன் பாசத்துடன் விளங்கும் நாயகன் ஸ்ரீராம்.
பெண் பார்த்த நாள் முதலாய் இருவரிடையேயும் ஏற்படும் ஈர்ப்பும் காதலும் திருமண நிகழ்வுக்குள் அழகாக உருவம் பெறுவதை வாசகர்களால் உணர முடியும்.
தன்னுடைய தந்தையின் பெற்றோர் தன்னுடைய தாயை போன தலைமுறை மருமகளாக நடத்திய விதத்தை கண்டே வளர்ந்த ஹரிணி....அந்த பாசமான குடும்பத்தில் ஒட்ட முடியாமல் திண்டாடிப் போகிறாள். மனைவி, தன்னுடைய சொந்தங்களுடன் இயல்பான நெருக்கத்துடன் பழக வில்லை என்பது ஸ்ரீராமுக்குப் புரிந்தாலும் அவளின் இயல்புக்கு விட்டுக் கொடுகிறான். அவளுக்கு சிறிது அவகாசம் தேவை என்பதையும் புரிந்து கொள்கிறான்.
ஹரிணி ஒட்டாமல் இருந்தாலும், வெட்டிக் கொண்டும் போக வில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். சமகால இளம் பெண்களின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பு என்று ஹரிணியை சொல்லலாம். கணவனிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டு வேலை வாங்குவதும், பெற்றோரின் சிரமங்களை புரிந்து கொள்ளாமல் அவர்களை மேலும் சிரமப் படுத்துவதும் மிக அழகான கையாளல்.
குழந்தை பிறந்த நிலையில் மனைவியின் உறவினரான பழனி மாமாவின் தலையீட்டில் துவங்குகிறது தம்பதிகளுக்கு இடையேயான விரிசல். லேசாகத் தோன்றும் விரிசல் அத்தைப் பாட்டி குழந்தைக்கு தண்ணீர் ஊற்றும் சம்பவத்தில் வலுப் பெற்று ஹரிணியின் நாத்தனாரான அனு, ஆர்வக் கோளாறில் செய்த செய்கையால் மொத்தமாக விரிந்து போகிறது.
அந்த சம்பவம் பெரும்பாலும் எல்லா இளம் தாய்மாரும் கடந்து வந்த சம்பவாமாகிப் போனது தான் இக்கதையின் வெற்றிக்கு காரணகர்த்தா. அந்த இடத்தில் இளம் தாயான ஹரிணியையும் குறை சொல்ல முடியவில்லை. அவள் யோசிக்காமல் விட்ட வார்த்தையையும் தவறாகக் கொள்ள முடியவில்லை. ஆனால் மாமியாரான வாணி அவளை பேசும் பேச்சும் தொடர்ந்த ஸ்ரீராமின் பேச்சும் கொஞ்சம் அதிகப்படி தான்.
தான் விட்ட வார்த்தைக்காக மன்னிப்பு கேட்கும் ஹரிணி, மாமியார் கேட்ட மன்னிப்பையும் தாண்டி அவர் உதிர்த்த வார்த்தைகளை மனதில் ஏற்றிக் கொள்வதிலும் குறை கூற வழியில்லை. ஸ்ரீயும் மன்னிப்பு வேண்டுகிறான் தான். ஆனால் ஆத்திரத்தில் அவன் பேசிய பேச்சுக்கள் அவளின் மனதில் அறைந்து விட...பிரிவு என்னும் பெரிய முடிவை எடுக்கிறாள் அந்த இளம் தாய்.
(இந்த இடத்தில் அவள் எடுத்த அந்த முடிவுக்கு பல காரணங்கள் சொல்லப் பட்டாலும்....
யார் எதை சொன்னாலும் குப்பையாக ஒதுக்கித் தள்ளும் இயல்பு கொண்ட பெண்மனம் கணவனின் ஒற்றை வார்த்தையில் துவண்டு விடும் இயல்புடையது. மீண்டும் இது போன்ற ஒரு சந்தர்பத்தை கையாளும் தெம்பு இல்லாமல் அதை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டே அவள் இப்படி ஒரு முடிவை எடுத்ததாகவே எனக்குத் தோன்றியது.)
பெற்றோர் அவளின் அந்த முடிவுக்கு ஒப்புக்கொள்ளாத நிலையில்.... தனியே குழந்தையை வைத்துக் கொண்டு அலுவலகம் சென்று வரும் நிலைக்கு தள்ளப் படுகிறாள்.
கணவனின் அருமையை, பெரியோரின் அனுசரணையை...அந்தத் தனிமை அவளுக்கு எவ்வாறு உணர்த்துகிறது??
மனைவியை, குழந்தையைப் பிரிந்த அந்த அன்பான இளம் கணவன் இந்தப் பிரச்னையை எவ்வாறு கையாள்கிறான்??
பிரிந்த தம்பதிகள் எவ்வாறு இணைந்தனர்?? என்பதை வாசித்து அறிந்து கொள்ளுங்கள் தோழிகளே......
ஹரிணியின் அந்த பெரிய முடிவு இந்தப் பிரச்சனைக்கு அதிகப்படி தான் என்றாலும் ஒரே ஒரு விஷயத்தை இவ்விடத்தில் சுட்டிக் காட்ட விழைகிறேன். காலம் காலமாய் மருமகள்கள் கணவன் குடும்பத்தால் நடத்தப் பட்ட விதம் மட்டுமே இன்றைய so called nuclear families அமைவதற்கு முக்கியமான காரணமாக விளங்குகிறது. என்ன தான் பெண்கள் படித்து வேலைக்குப் போய் சுய சார்புடைவர்களாக இருந்தாலும் இன்றைய கால கட்டத்திலும் கணவன் மற்றும் அவனைச் சேர்ந்தவர்களால் அலட்சியமாக நடத்தப் படும் போக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த அலட்சியம்....எதனால்??
உனக்கு திருமண வாழ்கையை காப்பாற்றிக் கொள்ளும் எண்ணமிருந்தால் இதை நீ தாங்கித் தான் ஆக வேண்டும் என்ற ஆணின் அவனைச் சேர்ந்தோரின் மனப்போக்கில் சிறிதளவும் நியாயம் இல்லை. அதே போல...இது போன்ற சிறு சிறு பிரச்சனைகளுக்கு பிரிவு மட்டுமே தான் வழி என்பதும் இல்லை. திருமண வாழ்வில் விட்டுக் கொடுத்தல் என்பது இன்றியமையாதது. ஆனால் விட்டுக் கொடுத்தல் மட்டுமே வாழ்க்கையாகிப் போனால் அது வாழ்க்கையாக இருக்குமா என்பதையும் யோசிக்க வேண்டி இருக்கறது.
ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தால் வரமாக இருக்கவேண்டிய வாழ்க்கையே சாபமாக மாறிப் போகும் அபாயமும் உண்டு.
இந்தக் கதை பொறுத்த வரை ஸ்ரீராம் மற்றும் அவனின் குடும்பத்தார் புரிதல் மிக்கவர்களாக இருப்பது கதைக்கு வலுசேர்த்து ஹரிணி எடுத்த முடிவு தெளிவில்லாதது என்ற எண்ணத்தை தோற்றுவித்தாலும்....
சற்றும் புரிதல் இல்லாத கணவன் மற்றும் அவனைச் சேர்ந்த உறவினர்களின் சொல்லம்புகளை தாங்கிக் கொண்டு பல்லைக் கடித்தபடி...just for the sake of saving the marriage…வாழ்க்கை நடத்தும் பெண்களின் நிலையையும் இங்கே எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது.
இப்படியான பல்வேறு சிந்தனைகளைத் தூண்டிய கதைக்கருவை முதல் கதையிலேயே தேர்ந்தெடுத்து அதை தேர்ந்த எழுத்தாளர் போல திறமையாக கையாண்ட ஹேமாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Way to go Hema. All the best….

Review by Ms. Meghna Suresh @Meenu on Dec 26,2015
நாவலின் தலைப்பு : நீ, நான், நான் வாழவே...
நாயகன் : ஸ்ரீராம்
நாயகி : ஹரிணி
கதைக்களம் : பெருகி வரும் விவாகரத்து பற்றிய விழிப்புணர்வை கொடுக்கும் அழகிய நாவல்.
கதை சுருக்கம் : ஹரிணியும், ஸ்ரீராமும் பெற்றோர்கள் பார்த்து வாழ்வில் இணையும் ஆதர்சன தம்பதிகள்.
ஒருவரை ஒருவர் புரிந்து அவர்கள் இல்லறம் மலர, அதன் சான்றாய் அவர்கள் வாழ்வில் மழலை பூ பூக்கிறது.
அதன் பிறகே அவர்கள் வாழ்வில் பிரச்சனை தொடங்குகிறது.
சரியான பிரயோகிக்க படாத வார்த்தைகளும் பேசி தீர்க்கபடாத மன குமுறல்களும் வெடித்து வெளி வருகையில் அது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பதை அழகாய் உணர்த்தி உள்ளார்.
அதோடு இன்றைய கார்பரேட் சூழலில் ஆண் பெண் இருவரும் வேலை பார்த்து அவர் அவர் சொந்த காலில் நிற்க நேர் கையில்,
நான் ஏன் அடங்கி போகணும் என பெண்ணும், கொஞ்சமாவது மதிக்கிறாளா எல்லாம் சம்பாதிக்கிற திமிர் என்று ஆணும் கர்வம் கொள்ள பிரிவினைக்கான விதை அங்கேயே விதைக்கப்படுகிறது.
அதோடு குழைந்தை வளர்ப்பு வந்து சேர்கையில் இதை செய்ய கூடாது, இதை செய்யலாம் என பழமையும், புதுமையும் முட்டி மோதிக்கொள்ள, அங்கே அது ஒரு விதமான பிரச்சனைகளை தோற்றுவிக்கிறது.
இப்படி தோன்றும் அனைத்து பிரச்சனைகளையும் கொஞ்சமே கொஞ்சம் சகிப்பு தன்மையும், சக சொந்தங்கள் மேல் எதிர் பார்ப்பில்லா அன்பும், ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்தலும் இருந்தால் தாமே சரி ஆகிப் போகும் என்பதை,
ஏதோ பக்கத்து வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை நம் வீட்டு ஜன்னல் வழியே அமர்ந்து பார்ப்பதை போல இயல்பான கதைக்களம் அமைத்து நமக்கு அற்புத விருந்து படைத்துள்ளார்.
ஆசிரியர் விளக்கிய விசயங்களில் குழைந்தை வளர்ப்பில் பெண்கள் ஆன நாம் எதிர் கொள்ளும் சாரிசரி பிரச்சனைகளை மிக அழகாக விளக்கி உள்ளார்.
அதில் எனக்கு மிகவும் பிடித்தது ஹரிணி மாமியார் வீட்டுக்கு செல்லும் போது அசௌகர்யமாக உணர்வது. அங்கே இருக்கும் பெரியவர்கள் சிலர் குழைந்தைக்கு கொதிக்க கொதிக்க வெந்நீர் ஊற்றி குளிக்க வைத்து விட்டு உறைப்பான் மருந்தும் கொடுக்க முயல, ஹரிணி வெடுக் என்று பேசி குழந்தையை பறித்து செல்வது.
அப்புறம் காய்ச்சல் கண்ட குழந்தையை சுவட்டர் போட்டு மூடி வைத்து அதனால் மேலும் காய்ச்சல் ஏறி குழந்தைக்கு வலிப்பு வந்துவிட, ஒரு தாயாய் பதறி துடித்து மருத்துவமனைக்கு ஓடுவது.
என்ன தான் கணவன் மனைவி பிணக்கு என்றாலும் மனைவி உடல் நல கோளாறில் மயங்கி விழ, ஸ்ரீராம் கணவனாய் துடித்து கொண்டு செயல் படுவது, இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
ஒட்டு மொத்தமாய் சொல்வதென்றால், வழக்கமான மசாலா படங்களுக்கு இடையில் கவனம் ஈர்க்கும் அழகிய இயல்பான குறும்படம் போல, சில பல செய்திகளை தாங்கிய வண்ணம் உலா வருகிறது நீ, நான் நாம் வாழவே.
ஆசிரியர் எழுத்து உலகில் இன்னும் பல இயல்பான நாவல்களை உலவ விட அன்பான வாழ்த்துக்கள்.
உங்கள் அன்பு மீனு.
Review by Ms. Sudha Ravi on Dec 27,2015
நீ
நான் நாம் வாழவே......!!! ( ஹேமா ஜெய் )
திருமணம் என்ற உறவில் இரு மனங்கள் மட்டும் அல்ல இரு குடும்பத்தினரும் இணைய வேண்டும். கணவன் மனைவிக்குள் மட்டும் புரிதல் இருந்தால் பத்தாது சுற்றி இருக்கும் உறவுகளும் அவ்வாறு அமைந்து விட்டால் அந்த வாழ்க்கையே வரம். நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து தெளிவான நடையில் தன் முதல் கதையிலேயே முத்திரை பதித்து இருக்கிறார் ஹேமா........
ஹரிணி அம்மா அப்பாவுக்கு செல்ல பெண். இன்றைய இளைய தலைமுறை பெண்களின் வாரிசு. ஸ்ரீராம் பாசமான குடும்பத்தில் வளர்ந்தவன். ஹரிணியை பெண் பார்க்க ஆரம்பிப்பதில் இருந்து திருமணம் வரை ஒவ்வொன்றையும் மிக அழகா சொல்லி இருகிறார்.
திருமணம் முடிந்து அவர்களுக்குள் வரும் புரிதலையும் ஹரிணி சமையலே தெரியாமல் கணவனிடம் செல்லம் கொஞ்சியே வேலை வாங்கி கொள்வதும் , இருவரும் ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுப்பதும் என்று அழகான ஆரம்பமாக செல்கிறது...இப்படியே சென்று விட்டால் அது வாழ்க்கை அல்லவே....
என்ன தான் கணவனுடன் ஒன்றி வாழ்ந்தாலும் அவன் குடும்பத்தினரிடம் பழக தயக்கம் காட்டுகிறாள். அதை புரிந்து கொண்டு ஸ்ரீராம் விட்டுக் கொடுப்பதும் அழகு. தங்களுக்கென்று புதிய உறவொன்று வந்து சந்தோஷமாக நாட்கள் சென்று கொண்டு இருக்கும் போது பழனி மாமாவினால் பிரச்சனை எழத் தொடங்குகிறது.
குழந்தை பிறந்து சிறு சிறு பிரச்சனைகளுடன் சென்று கொண்டிருந்தாலும் ஓரளவு சுமுகமாகவே போய் கொண்டிருக்கிறது. அந்த நிலையில் ஸ்ரீராமின் வீட்டிற்கு செல்ல மனதை தேத்திக் கொண்டு செல்கிறாள். அங்கு குழந்தையை கண்டு எல்லோரும் மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஆளாளுக்கு தங்களுக்கு தெரிந்தவற்றை எல்லாம் குழந்தையிடம் கையாளுகிறார்கள். அதை பார்த்தே பதட்டம் அடைந்து முதன் முதலாக நாத்தனாரிடம் வார்த்தையை விடுகிறாள்.
அடுத்த நாள் குழந்தைக்கு ஸ்ரீராமின் அக்கா பாலூட்ட குழந்தை வேகம் வேகமாக இழுத்து புரைக்கேறி மூச்சுத் திணறி தவிக்க அதை பார்த்து பதட்டத்தில் நாத்தனாரை திட்டி விடுகிறாள் ஹரிணி. அதனால் அங்கே பெரிய பிரச்சனை எழுந்து ஸ்ரீராமும் அவன் அன்னையும் அவளை திட்டி விடுகிறாள்.
இந்த காரணத்தை மனதில் வைத்து ஹரிணி அவனை பிரியும் முடிவெடுத்து விடுகிறாள்...அதன் பின்னே நிகழும் நிகழ்வுகள் அவரவர் பேசிய வார்த்தைகளும் அதன் வீரியமும் தவறை எவ்வாறு உணர்ந்தார்கள்......இருவரும் எங்கனம் ஒன்று சேர்ந்தார்கள் என்பதை மிக மிக அழகாக சொல்லி இருக்கிறார்கள்.............
குடும்ப உறவுகளுக்கும் ஏற்படும் சிக்கல்களை மிக அழகாக ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நிலையில் இருந்தும் யோசித்து எழுதி இருக்கிறார். யதார்த்தமான , இயல்பான நடையில் அருமையான கதையை கொடுத்தற்கு வாழ்த்துக்கள் ஹேமா..........தொடர்ந்து உங்களிடம் இருந்து நிறைய படைப்புகளை எதிர்பார்க்கிறோம்....

Review by Srilakshmi sisters on Dec 26, 2015
ஹாய் ஹேமா,
அருமையான கதை. முதல் கதையே அழகாக, அருமையாக எழுதியிருக்கிறீர்கள்..
புதுசாக கல்யணம் ஆகி புகுந்த வீட்டிற்கு போகும் பெண்கள் முதலில் கொஞ்சம் அனுசரித்து, விட்டுக் கொடுத்து போனால், எந்தவித பிரச்சனையும் இருக்காது.. புது உறவுகளில் நிறை, குறைகள் இருக்கத்தான் செய்யும்.. எந்த மாமியாரும் கெட்டவர்கள் இல்லை.. எல்லாமே ஈகோ ப்ரச்சனைதான்.. முதலில் ஹரிணி எப்படியிருந்தாலும், கடைசியில் அனைவரையும் புரிந்து கொண்டு போய், தன் வாழ்க்கையையும் மீட்டுக் கொண்டாள்.. நல்ல முடிவு..
மென்மேலும் உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும்.. அடுத்த கதையுடன் சீக்கிரம் வாங்க.

Review by Ms. Srimathi Gopalan on Dec 24,2015
ஹாய் ஹேமா அருமையான கதையை
நிறைவாய் முடித்து விட்டீர்கள் .............வாழ்த்துக்கள் .................ஒரு
குடும்பம் என்றால் நாலும் தான் இருக்கும் .................ஒரு குடும்பத்தின்
மகிழ்ச்சியும் கௌரவமும் பெண்ணின் கையில் தான் அடங்கி இருக்கிறது என்பதை நீங்கள்
சொல்லிய விதமும் ...............சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் பிரச்சனையாக்கி
................படித்து சம்பாதித்தால் மட்டும் போதும் தனியாக வாழ என்று
நினைப்பவர்களுக்கு அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும்
..................மனிதன் உறவுகளை சார்ந்து தான் இருக்கிறான் ..............உறவும்
சமூகமும் எந்த அளவுக்கு நம் இந்திய பாரம்பர்யத்தில் இன்றியமையாதது என்றும்
.....................ஒவ்வொரு இடத்திலும் அனைவரின் செயலுக்கும் ஒரு நியாத்தையும்
................வாழ்கை என்பது நாணலைப் போல் வளைந்து குடுத்து வாழ்வது என்பதை
.............ஸ்ரீராம் -ஹரிணி மூலம் ரொம்ப அழகாக சொல்லிடீங்க
.................நீங்கள் இந்தக் கதையை எழுதிய விதத்தில் நீண்ட நாட்கள் இருவரும்
நினைவில் இருப்பார்கள் ................நன்றி தங்களின் அருமையான கதைக்கு
...............மேன் மேலும் இது போன்ற கதைகளைப் படைக்க வாழ்த்துகள் .
Review
by Ms. Anu Ashok on Apr 1 2016
உங்கள்
முதல் கதையை படித்து விட்டேன்... எதார்த்தத்தை சொல்லும் எளிமையான கதை... அதை
ஆர்ப்பாட்டமில்லாத எழுத்தில் திறமையாக நகர்த்தி சென்று வெற்றி பெற்றதற்கு முதலில்
என் வாழ்த்துக்கள்...
இன்றைய தலைமுறையை சேர்ந்த தம்பதிகளுக்கிடையே வரும் சிறுசிறு பூசல் கூட இறுதியாக மணமுறிவு என்ற அபாய கட்டத்திற்கு சென்று நிற்பதை தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறீர்கள். ஹரிணியை போன்று உணர்ச்சி வசத்தால் முடிவெடுத்துவிட்டு அவதிப்படும் பெண்கள் தான் இக்காலத்தில் அதிகம்... ஆனால், ஸ்ரீராம் குடும்பத்தை போன்ற பெருந்தன்மையான உறவுகள் அப்பெண்களுக்கு வாய்ப்பது தான் அறிது.
முதல் கதை என்று எங்கும் உணர முடியாத அழகான, அருமையான கதையோட்டம்... எழுத்து உங்கள் கைவசப்பட்டிருக்கிறது ஹேமா...புதுமையான சொற்களை பயன்படுத்தி இருக்கும் விதம் என்னை வெகுவாக ஈர்த்தது...உங்களது அடுத்த கதையும்... இனிவரும் படைப்புகளும் இதேபோல் பலமடங்கு வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..

Review by Ms. Cynthia Devi on Apr 24,2016
ஹாய் ஹேமா
உங்களின் முதல் கதை போலவே இல்லை ரொம்ப
சிறப்ப எழுதி இருக்கீங்க மா .. ஒரே மூச்சில் படித்து விட்டேன் ரொம்ப எமோஷனல் களம்
வெகு அருமையா நகர்ந்தது ...
சில இடங்களில் கோபம் வந்தது... சில
இடங்களில் கண்ணீர் சுரந்தது ... சில இடங்களில் மகிழ்ச்சி பொங்கியது .. மொத்தத்தில்
படித்து முடிக்கும் முன் அதுனுள் மூழ்கி போனேன் சூப்பர்.......
thanks for this emotional story congrats...
Review by
Meena on Jan 28,2016
Hi Hema,
Very nice story... And close to a reality story.. Hero pathu company vechu iruppar.. Heroine ulaga azhagi....Inda mari illama.. Very practical... It did nt look like ur first story.......The flow was very good... Keep it up.

Review by Ms. SDuraisamy on Dec 25,2015
Hema,
LOVELY, LOVELY story.
Last episode-la eppadi ellarum inaiya porangannu yosanai oditte irundhadhu. Azhaga, Koyil-la kondu vandhu inaichiteenga ellaraiyum. Both sets of parents being there was such a classy touch.
And, ore oru seyal-la, Harini manasula arichitirundha edhir kaalam patriya kelviyai, Sri thudaitha vidham arumai.
Ha, Kovil-la thaan aval kaiyal seidha sweet avan saapidanumnu irundhirukku - superb.
Nijamave, the understanding that has now developed between the two, and also Harini's perceptions/perspectives about her in-laws, her own parents, Sri's understanding of his wife's sensitive nature, ellame will help develop their relationship in a positive way.
THANKS FOR SUCH A LOVELY, REALISTIC story, narrated in a smooth, flowing manner with no hesitations, no diversions, no theatrics. Avvalavu thelivana ezhuthu nadai, thelivana sindhanaigal, karuthukkal, eliya iniya nadaiyil manam muzhukka niraindhu, updates padichal adhan thaaakam adutha update padikkum varai irukkumaru (adhai thaandiyum), sindhikka vaitha, manathalum, unarvugalalum relate panna vaitha azhagiya kadhai. THANKS, HEMA !!
CONGRATULATIONS on a lovely story, very well handled and narrated with smooth panache !
SINCERE BEST WISHES for the publication of this, and for all your future efforts !
Thank you.
-Siva
Review by Ms.Vaisri on Dec 25,2016
அழகான கதை. மனதிற்கு இதமான
முடிவு. குடும்பம் எப்படி இருக்க வேண்டும், அனுசரித்து போக வேண்டும், வளைந்து கொடுத்து வாழ வேண்டும் என்பதைக் அழகாய் ஶ்ரீராம், ஹரிணி மூலமாய்
சொல்லிட்டீங்க.
Thanks for giving a lovely story
Review by Sujatha Karthik on Dec 24,2015
Hi hema,
Perfect ending.Temple scene super.arumaiya oru famiy subject
eduthu romba natural present panniteengha.first story padikumbothu herione mela
kadupu vara mari pannai story ending pavam ponnu seidha thappa unarthutannu
eppo sri seruvannu ethirparka vaichu arumaiya kondu poneengha.Atlast over
konjals appudi ellam illaima ellathaiyum azhagha kuduka vendiya idathil neat
presentation.Thanks for you story.Way to go.All the best for next story
Review by Ms. Srikumar Savi on Dec 25,2015
உங்களின் முதல் படைப்பே வெற்றிகரமாக
அமைந்ததற்கு வாழ்த்துக்கள்.
மென்மேலும் வளர வாழ்த்துகின்றேன்.
மீண்டும் ஒரு வெற்றி கதையுடன் வாருங்கள்
.காத்திருக்கின்றேன் ஆவலுடன்.
Review by Ms. Kokila on Dec 24, 2015
மனதிற்கு இதமா நிறைவா இருந்தது... இந்த கதை
நல்ல படியாக பப்ளிஷ் ஆகவும்.. உங்கள் அடுத்த கதைக்கும் மனபூர்வமான வாழ்த்துக்கள்.
Review by Ms.
Srisuja on Dec 25,2015
Your story is
simply superb.........Just could not believe that this is your first
story.........Whatever is happening in so many families like misunderstanding
between husband and wife, you have narrated it so well.............ALL THE BEST
FOR YOUR FUTURE STORIES TOO............
Review by Ms.
Veekay on Dec 24,2015
Very nice
story. Illara vaazhkkaiyai aarambikkum pengal eppadi nadanthu kolla vendum
enbathai miga azhagaaga solli irukkireergal. Athuvum indraiya kaalakattathil
nadakkum prachinigalaiyum atharkkaana theervaiyum romba azhagaaga
kooriyulleergal. Indraiya thalaimuraiyil nadakkum vishayam thaan. athai eppadi
solve panna vendum endru koorum oru azhgaana kadhai.
Fantastic story. Vaazhthukkal.
Review by Ms.
Magno on Apr 7, 2016
Hi Hema !
Very good
story and good narration !! Doesn't look like your first story tho !
Good
characters and the heroine character .. What to say ?? Typical nowadays !! In
story we can see happy ending .. But real life I have seen many friends life
ruined due to ego !!
Very natural
and simple subject and I liked it.
Thank you and
good luck for upcoming works. !!
Review on Ms.
Mary on Dec 25,2015
Hai hema,
Kadaiya romba arumaya mudichirukinga......
Nalla
edharthama,azaga irunthdhu....
Ungal Mudhal
kadhaieney solla mudiyaadu..avvalavu arumaiya irunthadu ungaludaiya ezuthu
nadai.....
Vazthukkal.....
Ms. Neela Mani Aug 25 2018
ஹாய்
ஹேமா!
உங்க நீ..நான் ..நாம்
வாழவே என்ற கதையை நேத்து தான் படித்து முடிச்சேன். இப்ப உங்க ப்ளோக்ல நிறைய பேர்
அதுக்கு ரிவியூஸ் போட்டிருந்ததை பாத்தேன். சோ கதை சுருக்கம் சொல்லப் போவதில்லை.
நான் ஏற்கனவே பல முறை சொல்வதைப் போல கிட்டத்தட்ட 500 பக்கம் உள்ள கதையில் வாசகரின் கவனம் அசையாமல் பிடித்து வைப்பது சாமானியமில்லை. புக்கை எடுத்து படிக்க ஆரம்பிச்சி முடிச்சிட்டு தான் வெச்சேன் என்பது தான் எழுத்தாளருக்கான மிகப் பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.
அதை நீங்கள் சாதித்து விட்டதில் முதலில் எனது பாராட்டுக்கள் தோழி!

இரண்டாவது
அந்தக் கதையின் முடிவு எனக்கு ஒரு நிறைவைத் தந்தது. கணவன் மனைவி உறவு பலப்படவும்
பிளவு படவும் அவர்கள் மட்டுமே எப்போதும் காரணமாக இருப்பதில்லை. கூட இருக்கும்
நெருங்கிய சொந்தங்களும் கூட காரணம் என்பதை இந்த நாவலின் மூலம் அழகாக சொல்லி
விட்டீர்கள்.
எல்லை
மீறாத மெல்லிய ரொமான்சுடன் ஹரிணி-ஸ்ரீ யின் நேசத்தை ரொம்ப அழகாக
சொல்லியிருக்கிறீர்கள்.
ஹரிணி,
அவள் அப்பா,
அம்மா அனைவரும் ரியல் லைப்
பாத்திரங்கள். ஸ்ரீ மனைவியின் மேல் காதல் அதே நேரத்தில் பெற்றோர் மேல் அசைக்க
முடியாத அன்பு இரண்டுக்கும் இடையில் தடுமாறுகிறான். இதை அழகாக சொல்லியிருந்தீர்கள்.
ஸ்ரீயின்
அம்மா வாணி கற்பனை கதாபாத்திரம் (எந்த மாமியார் ஒன்றுமே இல்லாத காரணத்திற்கு சண்டை
போட்டுக்கிட்டு போகிற மருமகளை இவ்வளவு அனுசரணையாக புரிந்து கொள்வார்) என்றாலும்
மனதிற்கு அவ்வளவு இதம்.
வாழ்த்துக்கள் Hema Jay . உங்க மற்ற கதைகளை படித்து விட்டு வருகிறேன் தோழி!

No comments:
Post a Comment