அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
'விழிகள் தீட்டும் வானவில்' புத்தக வடிவில் வெளியாகும் மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எண்ணற்ற புத்தம் புது நூல்கள் வெளியாகி அடைமழையென பொழியும் சென்னை புத்தகக் கண்காட்சியில் நமது இருப்பும் சின்னஞ்சிறு துளியாக இணைவது இதமளிக்கிறது. பெரிய பெரிய ஜாம்பவான்கள் நீந்தும் ஆழ்கடலில் ஒரு குட்டிக் கூழாங்கல்லுக்கு உண்டாகும் உவகை!
'விழிகள் தீட்டும் வானவில்' - வாழ்ந்து வீழ்ந்த குடும்பத்தை தோளில் சுமக்கும் ஒரு இளைஞனின் போராட்டத்தை முடிந்தளவு அழுத்தங்களை தவிர்த்துவிட்டு இலகுவாக சொல்ல முயன்ற கதை. சுய விருப்பு வெறுப்பு துறந்து கடமைகளில் உழலும் ஆகாஷ்களும், அவனை அவனுக்காகவே நேசித்து கரம் கோர்க்கும் நேத்ராக்களும் நம்மிடையும் ஏராளம் உண்டு. என்னால் இயன்ற இச்சிறு கற்பனைப் பூச்சு அவர்களுக்கான சமர்ப்பணம்.
இறையருளை வணங்கி, என்றும் உங்கள் ஆதரவை வேண்டி...
அன்புடன்,
ஹேமா.
"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)
Subscribe to:
Post Comments (Atom)
-
மார்ச்' 30 வார கண்மணியில் எனது நாவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'தூரங்கள் நகர்கின்றன' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியாகி உள்ளது.
-
நினைவெல்லாம் செண்பகப்பூ நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக...
2 comments:
is it available in amazon
It is not available right now. Will be made available after two months.
Post a Comment