அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! எனது அடுத்த நாவலான ‘பூவிதழ் தூரிகை’ புத்தகமாக வண்ணம் கொண்டுள்ள சந்தோசத் தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இக்கணத்தைச் சாத்தியப்படுத்திக் கொடுத்துள்ள இறையருளின் கருணைக்கு நன்றி! எனது அனைத்து முயற்சிகளுக்கும் தோள் கொடுத்துத் துணை நிற்கும் குடும்பத்தினருக்கும் எழுத்தாளர் வாசகத் தோழமைகளுக்கும் ஆழ்ந்த அன்பும், மனமார்ந்த நன்றிகளும்!
ஒருபக்கம் வழி வழியாய்ப் போதிக்கப்பட்ட கட்டுப்பெட்டித்தனங்கள், மறுபக்கம் அதீதப் பெண்ணியத்தின் புரட்சிக் குரல்கள். இவ்வெதிரெதிர் துருவங்களுக்கு இடையே நின்று வாழ்க்கையை எதார்த்தமாக நேர்மையாக அணுகினால் நன்றாக இருக்குமே என்ற விருப்பத்தின் சிறு இழையே இக்கதை. இயல்பான ஆணும் பெண்ணும்; அவர்கள் வாழ்வின் சுவாரஸ்யப் பக்கங்களும் இந்நாவல் வழி உங்கள் கண் முன்னால்!
உங்கள் உள்ளம் வருடக் காத்திருக்கும் ‘பூவிதழ் தூரிகை’-ஐ வாசித்துத் தங்கள் மேலான கருத்துக்களை hemajaywrites@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் பிரியா நிலையம் அரங்கு எண் 74ல் புத்தகங்கள் கிடைக்கப்பெறும். ஆன்லைனில் ஆர்டர் செய்ய : WeCanShopping
No comments:
Post a Comment