மனங்கொத்திப் பறவை நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்கள் பகிரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏!
Ms. Alamu Palaniappan Nov 22 2021
Hema 's "மனங்கொத்திப் பறவை"
சமீபத்தில் என் ஆதர்ச கேரள நடிகை ஒருவரின் பேட்டியைப் பார்க்க நேர்ந்தது......ஒரே வரி....இன்ஸ்டா பதிவு
Success Women's Definition .......என்றதற்கு அவரின் பதில்: சக்ஸஸ் விமன் என்றதற்கு டெபனிஷன் என்றால் at the end of the day நம் மனதில் ஒரு சமாதானம், சந்தோஷம் .......சுகமாயிட்டு ராத்திரி தூங்கினால் சக்ஸஸ் தான்.....நம் மனசு சமாதானம் அடைந்தால் போதுமானது " என்றார்.....மிகச் சாதாரணமாகத் தோன்றினாலும் இப்போதைய வாழ்வு முறையில் இது சாத்தியமானதா ? என்று கேள்வி தோன்றாமலில்லை... இதற்கான பதிலே ஹேமாவின் இந்தக்கதை.
இன்றைய Career Oriented பெண் தான் நாயகி கயல் , வாழ்வில் ஒவ்வொரு அடியாக எடுத்து நல்ல உயரத்தை அடைந்த போதும் , இன்னும் இன்னும் உயர நினைக்கும் அவளது நியாயமான ஆசைக்காக அவள் "வேண்டாம்" என்று உதறிச்சென்ற பொக்கிஷங்கள் என்னென்ன?
மனம் சமாதானம் அடைந்தாளா? அவளுக்குள் (நம் அனைவருக்குள்ளும்) இருக்கும் அந்த மனங்கொத்திப்பறவை அவளைக்கேட்கும் சில கேள்விகளுக்கான விடைகள் ?
"வேண்டாம்" என்று போனபின் மீண்டும் அவை மீது பற்றுக்கொள்வதும் அவற்றை கைக்கொள்வதும் வாழ்வில் அவ்வளவு சுலபமா? அது ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டதா.? இதற்கெல்லாம் விடை தான் இந்தக்கதை.
உங்களின் நாயகர்களில் நந்தா எனக்கு மீண்டும் சிபியை ஞாபகப்படுததினான்.....வேற்றுமைகள் நிறைய இருந்த போதும் அந்த ஒறறுமைகளில்...... கயல் இன்றைய தலைமுறை....ஒன்றும் சொல்வதற்கில்லை இவர்களைப்பற்றி, தானாக மாறினால் தான் உண்டு....
எப்போதும் உங்க கதைகளில் வரும் அந்தத் துணை கதாபாத்திரங்கள் மனதை நிறைப்பார்கள்... இதில் வாணியும் , தினேஷீம்.
சௌந்தரி அம்மா நியாயமான அம்மா என்ற போதும் கயலின் பார்வையில் அவர் வில்லி......நந்தா இறுதியில் அவரைக்கேட்கும் "நறுக்" கேள்வியில் கயல் மனது போல் என் மனதும் சமாதானமடைந்தது.
"ஆகாஷ் " அந்தச்சின்னஞ்சிறு மழலையின் மன நிலையை இதற்கு மேல் அழகாக காட்ட முடியாது. கயலை இழுக்க அவன் ஒரு பிடிப்பாகிறான்..... கேரியருக்காக குழந்தைப்பேறையும் தள்ளிப்போடும் இன்றைய பெண்களின் பிற்கால நிலை அந்த வயதைக்கடந்த நமக்கு கவலைக்குரிய விஷயமாகிறது.
அந்த இறுதி அத்தியாயம் எப்போதும் போல் "அழகு" .
என் மனதைவிட்டு நீங்காத மற்றுமொரு கதை என்பதில் ஐயமில்லை. மனமார்ந்த
வாழ்த்துகள்
ஹேமா.-----------------------------------------------------------
Ms. Sharmila Nov 22 2021
Hi Hema, Hope you are doing well. Read your Manankothi paravai! What are amazingly put together novel! Every situation, emotion and sentiment is well handled. Absolutely enjoyed reading it. I felt that I am not alone. The way you had balanced, criticized Kayal’s situation was mind blowing! I was emotional too while reading Kayal’s helpless situation! I felt her mom was rude!! Nanda is a very patient and sensible character. Loved Vani’s role. Such a lovely family!! Beautifully written. I was even emotional at many places!! Very articulate and well-written.
Keep writing, Hema. Good writing is rare these days.
-----------------------------------------------------------------------
Ms. Manimala - Nov 22 2021
First of all congrats for ur new book. I hv read the same in kindle. Excellent as usual. Ipdiyum nadakuma nu ovoru novel layum ninaika veikaringa. But career break apdingaratu ladies ku marriage ku aprom n child birth ku aprom iruke. Athu normal la kuda considered here la. Post delivery depression lam yarukum periya level la knowledge illa.
Career kaha family ya pirinju pora heroine but ava realise panrate covid nala thano. Normal office irunta varaikum ava feel pana mari teriyaliye. Tidirnu ivaluku taniya irukom nu feel vanta udane ellarum ethupanga la.
Ipo same story oru hero ku nadanta irunta epdi irukum nu yosikiren. Hero will go to abroad for his career when his wife is pregnant n will not cm bk for 4 or 5 yrs then will cm bk apdina family apdina ethukum illaya.
May be heroine mistake is she took the divorce. Payanukaha pakaratu nalla iruntatu. Mostly Indian families la adjustment la marriage porate pasangalukaha than.
Excellent mam. Ella novels um tiripi tiripi padipen.
Best wishes for u to write more n more
------------------------------------------------------------------
Ms. Anu - Dec 5 2021
வணக்கம் மேடம்,
எப்படி இருக்கீங்க.. 'மனம் கொத்தி பறவை' படித்தேன்.. வழக்கம் போல அருமை.. செம்ம plot.. No words..
எந்த character என்றாலும் நீங்கள் சொல்லும் விதத்தில் யாராலும் தன்னுடன் சுலபமாக பொருத்தி பார்க்க கூடிய அளவு வெகு இயல்பாய் present பண்றீங்க..
கயல், நந்தா, வாணி, தினேஷ் மற்றும் படைக்க பட்ட characters எல்லாம் அருமை..
plot எந்த field ஐ சுத்தி வந்தாலும் இப்படி இறங்கி அடிக்கறீங்களே, உண்மையா நீங்க யாரு, என்ன பண்றீங்க, சொல்லுங்க (just kidding )..
சின்ன விஷயங்களில் கூட உங்கள் detailing கண்டு வியக்கிறேன்..
Appraisal, rating இடையில் குடும்பம், குழந்தை என்று வேலை செல்லும் பெண்கள் படும் பாட்டை சொன்ன விதம் true to the core..
"இந்தப் பருவத்தை ஒவ்வொரு இளம் தாயும் உறுதியுடன், தீரா மன வலிமையுடன் தான் கடந்து வர வேண்டியிருக்கிறது" வரிகள் எவ்வளவு உண்மை..
அதையெல்லாம் எப்படி கடந்து வந்தோம் என்று நினைத்தாலே மலைப்பாக இருக்கு..
எடுத்த கருத்தை எப்பொழுதும் போல அருமையாக சொல்லிட்டீங்க..
My hearty wishes and take care..
---------------------------------------------------------------
Ms. Srividya - Dec 10 2021
மணம்கொத்தி பறவை was awesome. நிறைய எழுதுங்கோ பா, மனசுக்கு நிறைவா இருக்கு உங்க novels
Best wishes----------------------------------------------------------------
Ms. Divya Dec 8, 2021
மனங்கொத்தி பறவை, Hema Jay ...
எப்போதுமே இவரோட கதைகள் எடுத்தா வைக்க முடியாத ஒரு நடைல தான் இருக்கும்....அதே வரிசையில் நேத்து இரவு என் தூக்கத்தை களவாடியது இந்த கதை,படிச்சு முடிச்சதும் அதோட தாக்கம் குறையல எனக்கு இன்னும்...
கயல், தன் குடும்பத்தோட நிலையை உணர்ந்து படித்து, வேலைல அமர்ந்து ஒரு கட்டத்துல அந்த வேலையால தன் வாழ்வே மதில் மேல பூனையான நிலையில இருக்கும் போது,ஒரு வேகத்துல மதிலுக்கு அந்த பக்கம் குதிச்சு திரும்பவும் இந்த பக்கம் வர முடியுமான்னு ஏக்க படறா,இந்த பக்கம் வந்தாலா இல்லயான்றது தான் கதை...
என்ன தான் கயல் தன்னோட பக்கம் இருக்க நியாயங்களை சொன்னாலும்,நந்தா சொல்றா போல ஒரு கமிட்மென்ட் ல ஃபிக்ஸ் ஆனா அதுக்கான ஃபுல் responsiblity நமக்கானது தான்,அதுலயும் தாய்மை, எதுவேணும்னாலும் திரும்ப கிடைக்கும், ஆனா குழந்தை மிஸ் பண்ற அந்த கால கட்டம் எவ்ளோ பணம்,பதவி,மதிப்பு,மரியாதை இது எதுவாலயும் இட்டு நிரப்ப முடியாதது.
நந்தா இப்படி ஆளுங்க இருக்காங்களான்னு தோணுது,இருந்தா சந்தோஷம், குழந்தைக்காக அவனோட எஃபோர்ட்,பொறுமை,எல்லார் பக்கமும் யோசிச்சு பேசறது எல்லாமே அருமை,
ஆகாஷ் ஒரு சில இடத்தில இந்த குழந்தையோட ஏக்கம்,அவன் கயல் கிட்ட காட்டும் உரிமை எல்லாமே மனச பாதிச்சுடுச்சு இன்னும் நிறைய இதுபோல எழுதணும்,
சிஸ்வாழ்த்துகள்
------------------------------------------------------------------
Ms. Vedha Vishal - Nov 28 2021
மனங்கொத்திப் பறவை Hema Jay
இரட்டை மாட்டு வண்டியில் ஒன்று மட்டும் சற்றே வேறுபக்கம் இழுத்தாலும், மொத்த வண்டியும் தடுமாறத்தான் செய்யும். பந்தயப்புறாவை கூட்டுக்குள் அடைத்தால்? அவரவர் நியாயம் அவரவருக்கு.
சமூக நியதி என்பது time tested என்பதை நம்பும் என்னைப் போன்றவர்களுக்கு, என்னதான் தியாகம் தாய்க்கு மட்டுமே சொந்தமானதுஅல்ல என்றாலுமே, மனதை அந்தக் குழந்தையின் அலைப்புறுதல்உறு(வரு)த்துகிறது. அதனாலேயே கயலின் வெற்றிக்குப் பின் வரும் வெறுமையை விட நந்தாவும், குழந்தையும் என் உணர்வுகளை அதிகம் பாதிக்கிறார்கள். Empowerment என்பது தன் வட்டத்திற்குள் தன் ஆளுமையை, எண்ணங்களை, செயல்களை அழுத்தமாக பதிவு செய்வதே. எப்படியும் ஒரு நாளின் கடைசியில் இளைப்பாற இடமும், சாய்ந்து கொள்ளத் தோளும், அது என்ன உறவாக இருந்தாலும், தேவையாகத்தானே இருக்கிறது?
An emotional roller coaster. Enjoyed n cried😢🙈😍
Very Well written Hema dear💛⚘💛
-------------------------------------------
Ms. Chitra - Nov 28 2021
எனக்கும் நந்தாவும் குழந்தையும் தான் பிடிச்சது கயல் அவ அம்மாவோட சண்டை பிடிக்கும் போது எல்லாம் தோணுச்சு.இந்த வயதிலும் உன் அம்மாவை நீ எதிர்பார்க்கும் போது,அம்மாவின் அரவணைப்பு ரொம்ப தேவையான நேரத்தில் விட்டுட்டு போனாயே என்று மனசுக்குள் திட்ட தான் சொல்லுச்சு
--------------------------------------
Ms. Sri - Nov 28 2021
இப்போ தான் படிச்சி முடிச்சிட்டு வரேன்.கயல் நந்தா எல்லோரும் supernu சொல்லாம் னு வந்தேன்.உங்க போஸ்ட் கண்ணில் பட்டது.
இவங்க ஒவொவரு கதையும் நம்மை அப்படியே கட்டி போடுது இல்லை.
ஹேமா கலக்கிட்டாங்க.
--------------------------------------------
Ms.Subadra - Nov 21 2021
Hema..Story nalla iruku hema..nethu mathiyame padichiten..!
----------------------------------------------------------------------
Ms. Usha Suresh - March 6 2022
Enjoyed
reading manamkothi paravai
Realistic
All mothers generally support daughters here she is different
Almost lot of people struggling to come up in life or sometimes it
becomes living up to jones, priorities in life are like kayals
Waiting for your next
---------------------------------------------------------------------------------
Amazon reviews :
No comments:
Post a Comment