ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
உங்களுடன் ஒரு சிறு பகிர்வு!
சென்ற வாரத்தில் ஒரு தோழி இந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். மனங்கொத்திப் பறவை என்ற தலைப்புடன் வந்த கடிதம் என்பதால் 'மனங்கொத்திப் பறவை'க்கான விமர்சனம் என்றே நினைத்துப் பிரித்தேன். ஆனால், கடைசியாக அவர் குறிப்பிட்டிருந்தது...!!!
சில கடிதங்கள் நம்மை நெகிழ வைக்கும், கண் கலங்க வைக்கும். வீட்டில் எல்லோரிடமும் காட்டி பெரிதாக அளந்து செல்ப் டப்பா அடிக்க வைக்கும். ஆனால் இந்தக் கடிதம் மேற்சொன்ன எல்லா உணர்வுகளையும் மீறி என்னை பேச்சற்று இருக்கச் செய்தது.