"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, January 23, 2023

மிளிர் - Reviews

                                                    https://www.amazon.in/dp/B0BN1Y2PD4

                                                    https://www.amazon.com/dp/B0BN1Y2PD4

Feb 23 2023 Ms. Arthy Ravi 

மிளிர் - அருமையான எழுத்தாக்கம். நம்மில் ஓடும் பல சிந்தனைகளை இக்கதையில் காணும் போது மனம் துள்ளுகிறது. சபாஷ் போட வைக்கிறது. பல தெளிவான பலரைத் தெளிய வைக்கிற கருத்துகள் இந்த அழகான கதையின்
பின்னலில்!
மெல்லிசையாய் ஒரு காதல்!
அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல். உங்கள் சரி பாதி தமிழ் வாசிக்கிறவராக இருந்தால் இப்புத்தகத்தை வாசிக்கக் கொடுங்கள். மூத்த சந்ததியினரும் வாசிக்க வேண்டியது. இளையவர்களும் வாசிக்கலாம்.
Applauses Hema Jay! Keep writing more! 😍😍🤗❤️👏🏼👏🏼👏🏼

Nov 23 2022 Ms. Amirtha Seshadri

மிளிர்- hema jay

படிப்பதில் ஆரம்பித்து வேலை என எல்லாவற்றையும் போராடி பெற்ற காவ்யா, ஆணாதிக்க மனம் கொண்டவனுடன் நிச்சயத்தை திருமணத்தை நிறுத்தி, வேலைக்கு வெளிநாடு செல்லும் பெண், ஏற்பாடு செய்வது அவளை முதன்முதலில் ஒரு மழைநாளில் சந்தித்து, உடனே அவள் மேல் ஈர்ப்பு தோன்றிய, அன்றே தன் ரூம்மேட்க்கு நிச்சயமான பெண் என தெரிந்து ஆன் சைட்க்கு வர....
காவ்யா வெளிநாட்டு வேலைக்கு வந்ததால், அவள் குடும்பத்தின் பெண்களின் பார்வையும் விசாலமாக,
அவள் பெற்றோர் தரப்பு நியாயங்கள் என..
தமிழ் தரப்பில் கோதை எப்படி அக்கா தம்பி இணைகிறார்கள்...
என கவிதையாய் ஒரு கதை. நவீன் க்கு பல் வலி விட்டு போனதே ஒரு நல்ல வழி...😁😁😁.
ஒரே ஒரு குற்றம் தமிழும் காவ்யாவும் இணைவதை காட்டாமல் விடுவது
Hema Jay 😬😬😬😬
விரிய விரிய வானம்!
அவள் செழியன் எப்போதும் சொல்வது இது. வானம் எப்போதும் விரிந்து தான் கிடக்கிறது. எல்லாப் பறவைகளாலும் பறந்து விட முடிகிறதா, என்ன? வானம் விரிந்தே கிடந்தாலும் சிறகுகள் கட்டப்பட்ட பறவைக்கு சேர்ந்து கடக்க முந்தாத, முரண்டாத, முகம் சுணங்காத தோழமையும் காதலுமான ஒரு துணைப் பறவை தேவை, அவளுக்குக் கிடைத்த செழியனைப் போல. காதல் இணையின் ஒத்திசைவும், ஊக்கமும் துணை இருந்தால் எந்த வானத்தையும் எளிதாகக் கடந்து விடலாம் என்று தோன்ற, இறகின் சுமை கொண்டவளாய் எழுந்து.....

விழிகள் தீட்டும் வானவில் - வாசகர் கடிதம்

 விழிகள் தீட்டும் வானவில் - வாசகர் கடிதம்

https://www.amazon.in/dp/B0893JSH25







Monday, January 9, 2023

இதுவரை அச்சுப் புத்தகங்களாக வெளிவந்துள்ள நாவல்கள்

வாசக நண்பர் ஒருவர் இதுவரை வெளிவந்துள்ள என் நாவல்களின் பட்டியலைக் கேட்டிருந்தார். அவ்வப்போது சிலர் கேட்பதுண்டு என்பதால் தகவலுக்காக இங்கும் பகிர்ந்து வைக்கிறேன்.

In the order of latest to first -

* மலரவிழ் (2023)
* மிளிர்
* மனங்கொத்திப் பறவை
* கடல் சேரும் விண்மீன்கள் (தூரங்கள் நகர்கின்றன & கடல் சேரும் விண்மீன்கள்)
* நினைவெல்லாம் செண்பகப்பூ
* இதழ் வரி கவிதை
* ஙஞணநமன மெல்லினமாம்!
* பூக்கள் விற்பனைக்கல்ல
* ஆனந்தி
* ஆயிரம் ஜன்னல் மனசு
* பூவிதழ் தூரிகை
* காதல் கஃபே
* மலரினும் மெல்லிய
* விழிகள் தீட்டும் வானவில்
* பனி இரவும் தனி நிலவும்
* பட்டாம்பூச்சி பற பற
* நீ நான் நாம் வாழவே (2016)

மின்னூல்களின் வழியான வாசிப்பு பெருகிவிட்டாலும் அச்சுப் புத்தகங்களின் மதிப்பு என்றும் குறைவில்லாதது. வாங்கி வாசித்தேன், நூலகத்தில் படித்தேன் என்று நண்பர்கள் செய்தி பகிரும்போது அன்றைய நாளே அழகாகி விடுகிறது. என் புத்தகங்களைப் பதிப்பித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் பிரியா நிலையத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்! தற்போது வெளியான ‘மலரவிழ்’ நாவலுடன் என் அனைத்து புத்தகங்களும் சென்னை புத்தகக் காட்சியில் பிரியா நிலையம் (அரங்கு எண் 43- 44 - 8th row) ல் கிடைக்கும்.

Tuesday, January 3, 2023

மலரவிழ் - புதிய நாவல் புத்தக வெளியீடு

 ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! அல்லவை விலக்கி நல்லவை ஈர்க்கும் ஆண்டாக நம் அனைவருக்கும் இவ்வாண்டு சிறக்கட்டும். 🙏

புத்தாண்டு வாழ்த்துகளுடன் ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை உங்களுடன் பகிர வந்துள்ளேன். 2023 ஜனவரி வெளியீடாக எனது புதிய நாவல் ‘மலரவிழ்’ வெளிவந்துள்ளது.