https://www.amazon.in/dp/B0BN1Y2PD4
https://www.amazon.com/dp/B0BN1Y2PD4
Feb 23 2023 Ms. Arthy Ravi
Nov 23 2022 Ms. Amirtha Seshadri
மிளிர்- hema jay
ஹேமாவின் மிளிர்.... நாயகி காவ்யா... படிப்பு .. வேலை என தான் விரும்பிய ஒவ்வொன்றுக்கும் போராடும் சூழ்நிலையில்.... நகரின் பெரும் செல்வந்தர் வீட்டின் சம்பந்தம் கூடி வர... நிச்சயதார்த்தம் முடிகிறது. திருமணம் வெகு அருகில் என்ற நிலையில் ... மணமகன் தினேஷின் ஆணாதிக்க மனப்பான்மையும்.. அகங்காரமும்... அருவருக்கத்தக்க செயல்களும் கண்டு வெறுத்து ... காவ்யா திருமணத்தை நிறுத்திவிடுகிறாள். அதன் பிறகு அவளுக்கு எதிர்பாராமல் கிடைக்கும் வெளிநாட்டு வாய்ப்பு. அதில் குடும்பத்தினரின் அதிருப்தி.. எதிர்ப்புகளை சமாளித்து அயர்லாந்துக்கு விமானம் ஏறுகிறாள். அவளுக்கு துணையாக கிளம்பும் நவீனால் கலகலப்புக்கு பஞ்சமில்லை. அயர்லாந்தில் கால் பதிக்கும் காவ்யாவை நட்போடு அரவணைத்துக் கொள்கிறான் அவளின் சுபீரியர் தமிழ் செழியன்... நட்பும் புரிதலுமாக துவங்கும் பழக்கம்... செழியனின் அக்கறையிலும் புரிதலிலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர... அதன் பிறகு ஒவ்வொரு நிகழ்வும் கவிதையாக சொல்லியிருக்கீங்க ஹேமா
மேகி...நவீன்...கோதை கதையை சுவாரஸ்யமாக்குகிறார்கள். விரிய விரிய வானம்...ஆனாலும் அதன்கீழ் சில பறவைகள் மட்டுமே சிறகை விரித்து பறந்து இலக்கை அடைகிறது. சிறகுகள் கட்டப்பட்ட தன் இணையின் தளைகளை தகர்த்து அவளுக்கு துணையாக...தோழமையும் காதலுமாக காவ்யாவின் செழி நம் மனதை கவர்ந்து வெகுவாக கொள்கிறான்.ஹேமா...மிளிர் அழகான கதை... உங்கள் நடையில் மேலும் மெருகேறி ஜொலிக்கிறது. உண்மையான காதல் என்பது பரஸ்பர மதிப்பும் மரியாதையுடன் அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது தான் என்பதை அழகா சொல்லியிருக்கீங்க. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹேமா.... உங்க ஒவ்வொரு எழுத்தும் பெண்களை மதித்து..மரியாதை செய்து.. பெருமைப்படுத்துவதாகவே இருக்கிறது.சகி..ஞஙணநமன மெல்லினம்..மனங்கொத்தி பறவைகள் வரிசையில் மற்றுமொரு மணிமகுடமாய் மிளிர் .மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மா. நவீன் தன் பல்(ல)வலி யிலிருந்து விடுபடுவது ஆறுதல்.காவ்யா செழியன் திருமணத்தை மிஸ் பண்ண ஃபீல்
Nov 25 2022 - Ms. Chitra Ganesan
ஹேமா ஜெய் அவர்களின் மிளிர் உண்மையில் மிக அழகாக மிளிர்கிறது.
கதையில் நடக்கும் நிகழ்வுகள் இன்னும் எத்தனையோ குடும்பங்களில்,பெண்களுக்கு நடப்பது தான்.அதுவே கதையோடு ரொம்ப ஒன்ற வைக்கிறது.
காவ்யா நம்மில் ஒருத்தி.பாசாங்கு இல்லாத எழுத்து.
காவியாவின் செழி மனசை டச் பண்ணுறான்.
எல்லாத்தையும் விட நவீன் செம கலகலப்பு.அவனின் வாழ்க்கையில் நடந்த துயரம் அந்த நேரம் அவனுக்கு மீள முடியா கஷ்டத்தை கொடுத்து இருந்தாலும் எனக்கு ஒரு வகையில் நிம்மதியாக இருந்தது.😁
அப்பாடா எஸ்கேப் ஆகிட்டான் என்று😜
நவீனுக்கு ஒரு தனி கதை கொடுங்களேன் ஹேமா.😁
வாழ்த்துகள் Hema Jay 😍😍
Nov 28 2022 - Ms. Rosei Kajan
ஹேமா நானும் வாசிச்சிட்டேன் . ஆசையாக வாசிக்க எடுத்த நான் ஏமாறவில்லை. கதை அருமை.வாழ்த்துகள் மா
July 20 2022 Ms. Meenakshi
Hai hema Iam Meenakshi from chennai nanganallur. I have read mostly all your novels. Today I read Milir. Awesome it is. Story very normal story but your way of writing superb. All quotes in the novel semma. Keep writing this type of novels. I enjoyed your story. very decent way of bringing all characters and little Feminism. Thank you for giving me a nice feeling that i have read a Nice novel. On the whole simply கலக்கிட்டீங்க.
No comments:
Post a Comment