"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Wednesday, March 8, 2023

ஒரு புதிய முயற்சி

ஹாய்! வாசக நண்பர்களுக்கு அன்பு வணக்கம்!!
‘ஹேமா, நீ ஆன்லைனில் எழுதுவதில்லை. அச்சுப்புத்தகம்/கிண்டில் போன்ற ஆப்கள் தவிர உன் கதைகளை வேறெங்கு படிக்கலாம்?’ ‘எனக்கு தமிழ் பேசத் தெரியும், சரளமாகப் படிக்கத் தெரியாதே, எப்படி உன் கதையை வாசிப்பது?’ ‘புஸ்தகா மூலம் நான்கு ஒலி புத்தகங்கள் வெளி வந்துள்ளன என்றாய். மற்றவை?’ ‘உன் புத்தகங்களைப் படிக்க விருப்பம் தான். கண்கள் ஒத்துழைப்பதில்லை’ - இவை அனைத்தும் அவ்வப்போது நான் எதிர்கொள்ளும் உரையாடல்கள். கடைசியாகக் குறிப்பிட்டது என் அம்மா உட்பட நம்மில் பலருக்கும் உள்ள ஆதங்கம். அவரவரே வரி வரியாக வாசித்துத் துய்க்கும் வாசிப்பு ருசிக்கு மாற்று வேறெதுவும் இல்லை என்றாலும் பயணத்திலும், வேலைகள் செய்து கொண்டும் கதைகள் பேசுவதும் கேட்பதும் நம் அனைவருக்கும் விருப்பமான ஒன்று தானே! எனவே, மேற்கண்டவைகளுக்கு சிறு மாற்றுத் தீர்வாக - இனி எனது நாவல்களை யூ-ட்யூப் வாயிலாக செவி வழி புத்தகங்களாகவும் கேட்டு மகிழலாம் மக்களே!
It’s a very tiny baby step! சிற்சில வருடங்களுக்கு முன்பு ஒரு தீபாவளி சமயம் சுயநளபாகத்தில் விளைந்த முறுக்கு அதிரசங்களை நொறுக்கிக் கொண்டே இப்படியொரு சிறுபிள்ளை விருப்பமாகத் துளிரிட்டது தான் எழுதிப் பார்க்கலாமே என்கிற எண்ணம்😀. ஆர்வமும் அதற்கு இணையான தயக்கமுமாக ஆரம்பித்த இப்பயணத்தில் எத்தனை எத்தனை நட்புகள், அன்பு, பிணைப்பு இங்கு உருவாகியுள்ளது, எவ்வளவு கற்றுக்கொண்டிருக்கிறேன், என்னுலகம் எத்தனை விரிந்திருக்கிறது என்று எண்ணிப் பார்க்கும்போது நெகிழ்வாக உள்ளது. All because of your continuous support & feedback. Do extend your warm support for this effort too.❤️
‘ஹேமா ஜெய் ஆடியோ நாவல்ஸ்’ஐ உங்கள் விருப்ப அட்டவணையில் சேர்த்துக்குங்க. https://www.youtube.com/@hemajaynovels
யூ-டியூப் தளம் எனக்குப் புதிது என்பதால் ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டு தான் செய்ய முயல்கிறேன். கற்றல் உற்சாகமளிக்கிறது. எனினும், தெரிந்து கொள்ள வேண்டியது ஏராளம். ஏராளம். கொஞ்சம் பயமுறுத்துகிறது. நிறைய நேரம் கேட்கிறது. Hope I will learn at least few basics in this exercise. My heartfelt gratitude to Ezhil who taught me the technicalities. You are a great teacher Ezhil Ezhil Anbu. Thank you so much🙏❤️! Nitha Nithani Prabu, Rosei akka Rosei Kajan, Alamu Alamu Palaniappan, Priya Mohan, Arthy Arthy Ravi and Sudha Sudha Thirumalai- Thanks a bunch for your valuable insights!❤️
உங்கள் மனம் கவர்ந்த “இதழ் வரி கவிதை” நாவலை முழுமையாக சேனலில் பதிவேற்றி இருக்கிறோம். கதைகளைக் கேளுங்கள். எப்படி மேம்படுத்தலாம் என்பது குறித்த உங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். Do Like, Comment, Share & Subscribe! Looking forward for your support!!
அன்புடன்,
ஹேமா ஜெய்

No comments: