"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Wednesday, March 22, 2023

'மலரவிழ்' நாவல் - கிண்டிலில்

டியர் மக்களே,

'மலரவிழ்' நாவல் இப்போது கிண்டிலில்.
Enjoy reading!🙂 Do share a word if you like the heart of the story.💕
புத்தகத்தின் முன்னுரையில் இருந்து -
ஒவ்வொரு மலருக்கும் மலரும் தருணம் என்று ஒன்று உண்டு தானே. சில கதிரவனின் முகம் காட்டலில். சில பளபளவென்று பொழுது புலர்ந்து வரும்போது. சில மாலையின் சுகந்தமான காற்றில். சில நிலவின் தண்மையான பொழிதலில். இவற்றுக்கு விதிவிலக்காக மொட்டவிழும் தருணம் வாய்த்தும் சில மலர்கள் மூடியே கிடப்பதும் உண்டு. அது அவற்றின் குற்றமல்ல. அக செழிப்பையும் தாண்டி சூழலும், புற காரணிகளும் தானே ஒவ்வொரு மலரின் மலர்வையும் தீர்மானிக்கின்றன. அப்படிக் கூம்பி கிடக்கும் சில மலர்களின் விழிப்பையும், இதழ்விரிப்பையும் சொல்லும் கதை தான் “மலரவிழ்”.

மலரவிழ் | Malaravizh (Tamil Edition)
இக்கதையில் உலா வரும் மனிதர்களை நிச்சயம் நீங்களும் கடந்து வந்திருப்பீர்கள். ஜேனும் அரவிந்தனும் நாம் அறியாதவர்கள் அல்ல. இவர்களின் வாழ்க்கை இல்லாததை இருப்பதாகச் சித்தரிக்கும் கட்டுக்கதையும் அல்ல. இருவரின் வயதும், சூழலும், பின்புலமும், சிக்கல்களும் வெவ்வேறு தான் எனினும் அவர்களை அருகருகே கொண்டு வந்து நிறுத்தும் பொதுவான புள்ளி ஒன்று உண்டு. குரலற்றவர்களின் குரலாக அவர்களின் ரணத்தையும், அனுபவங்களையும் படிப்பினைகளையும் பகிரும் நோக்கமே இவ்வெழுத்திற்கான வித்து. “மலரவிழ்” குறித்த தங்களின் எண்ணங்களை hemajaywrites@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள். உங்களது ஆதரவுக்கும் மதிப்புமிகு விமர்சனங்களுக்கும் எனது நன்றிகள் பல!🙂💕

No comments: