"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Tuesday, January 3, 2023

மலரவிழ் - புதிய நாவல் புத்தக வெளியீடு

 ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! அல்லவை விலக்கி நல்லவை ஈர்க்கும் ஆண்டாக நம் அனைவருக்கும் இவ்வாண்டு சிறக்கட்டும். 🙏

புத்தாண்டு வாழ்த்துகளுடன் ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை உங்களுடன் பகிர வந்துள்ளேன். 2023 ஜனவரி வெளியீடாக எனது புதிய நாவல் ‘மலரவிழ்’ வெளிவந்துள்ளது. 

என் புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிடும் பிரியா நிலையத்தினருக்கும், புத்தக வடிவமைப்பில் திருத்தங்கள் செய்து உதவிய ஐயப்பன் Ayyappan Mahesh மற்றும் மகேஸ்வரிக்கும் உளம் நிறைந்த நன்றிகள்!🙏

முகப்பு அட்டையை வடிவமைத்துத் தந்த தோழி எழில் அன்பு-க்கு Ezhil Anbu ஸ்பெஷல் நன்றிகள்! மிளிர் மற்றும் சகிக்கு முகப்பு அட்டை அமைத்துத் தந்ததும் இவர் தான். இப்போது தான் பெயர் சொல்ல அனுமதி தந்துள்ளார் 🙂🙂. எத்தனை முறை மாற்றங்கள் சொன்னாலும் அலுக்காமல் என் எண்ணங்களுக்கு வண்ணம் தந்தவர். உளமார்ந்த அன்பும் நன்றிகளும் எழில்! 🙂🙏

சென்னை புத்தகக் காட்சியில் (Jan 6th - Jan - 22) பிரியா நிலையம் 8 th row stall number 43,44ல் "மலரவிழ்" மற்றும் என்னுடைய நாவல்கள் அனைத்தும் கிடைக்கப் பெறும். வாங்கி வாசித்து உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பல சவால்களுக்கும் சோதனைகளுக்கும் இடையே எழுத்தைப் பற்றிக் கொண்டு ஆசுவாசமடைவது வாசகர்கள் உங்கள் ஆதரவினால் மட்டுமே சாத்தியமாகிறது. என் முயற்சிகள் அனைத்திற்கும் ஆதரவும் ஊக்கமும் அளித்து வரும் வாசகர்களுக்கும், என் நலம் விரும்பும் நட்புகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்! 🙏🙏

‘மலரவிழ்’ - முன்னுரையில் இருந்து -
—----------------------
ஒவ்வொரு மலருக்கும் மலரும் தருணம் என்று ஒன்று உண்டு தானே. சில கதிரவனின் முகம் காட்டலில். சில பளபளவென்று பொழுது புலர்ந்து வரும்போது. சில மாலையின் சுகந்தமான காற்றில். சில நிலவின் தண்மையான பொழிதலில். இவற்றுக்கு விதிவிலக்காக மொட்டவிழும் தருணம் வாய்த்தும் சில மலர்கள் மூடியே கிடப்பதும் உண்டு. அது அவற்றின் குற்றமல்ல. அக செழிப்பையும் தாண்டி சூழலும், புற காரணிகளும் தானே ஒவ்வொரு மலரின் மலர்வையும் தீர்மானிக்கின்றன. அப்படிக் கூம்பி கிடக்கும் சில மலர்களின் விழிப்பையும், இதழ்விரிப்பையும் சொல்லும் கதை தான் “மலரவிழ்”.

இக்கதையில் உலா வரும் மனிதர்களை நிச்சயம் நீங்களும் கடந்து வந்திருப்பீர்கள். ஜேனும் அரவிந்தனும் நாம் அறியாதவர்கள் அல்ல. இவர்களின் வாழ்க்கை இல்லாததை இருப்பதாகச் சித்தரிக்கும் கட்டுக்கதையும் அல்ல. இருவரின் வயதும், சூழலும், பின்புலமும், சிக்கல்களும் வெவ்வேறு தான் எனினும் அவர்களை அருகருகே கொண்டு வந்து நிறுத்தும் பொதுவான புள்ளி ஒன்று உண்டு. குரலற்றவர்களின் குரலாக அவர்களின் ரணத்தையும், அனுபவங்களையும் படிப்பினைகளையும் பகிரும் நோக்கமே இவ்வெழுத்திற்கான வித்து.

“மலரவிழ்” குறித்த தங்களின் எண்ணங்களை hemajaywrites@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
—----------------------

அன்புடன்,
ஹேமா ஜெய்

மலரவிழ்-ஐ ஆன்லைன் விற்பனை நிலையங்களில் பெற -
https://www.wecanshopping.com/malaravizh
https://www.udumalai.com/malaravil.htm

1 comment:

freepdfdownload said...
This comment has been removed by a blog administrator.