"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Wednesday, January 3, 2024

‘பூவிதழ் தூரிகை’ - முழு ஆடியோ நாவல்

ஹாய் மக்களே,

என்னளவில் மிகப் புதிய விஷயமொன்றாக இருந்ததைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் தொடங்கியது தான் @hemajaynovels - நம் யூட்யூப் சேனல். (https://www.youtube.com/@hemajaynovels) எனினும் நடுவில் பெரிய தேக்கம் வந்து விட்டது. தொடங்கிய ஒலி புத்தகங்களை இடை நிறுத்த கூடாதே என்று பதிவுகள் இட்டாலும் எதிலும் ஒன்றி கவனம் செலுத்த முடியவில்லை.


ஆடியோ புத்தக உருவாக்கத்தில் என் பங்களிப்பை விட இந்நாவல்களுக்குக் குரல் தந்து உயிர் கொடுக்கும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்-களின் உழைப்பும் முனைப்புமே பிரதானம். அவர்கள் அக்கறையுடன் செய்து கொடுத்தவற்றை உடனுக்குடன் வெளியிட முடியாததும், வந்த கமென்ட்களுக்குக் கூடப் பதிலளிக்க முடியாததும் ரொம்பவே தொந்தரவு செய்தது. உறுத்தியது. நம்மை மீறிய தருணங்களில் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருப்பதே உசிதம் என ஆரம்பித்த பல வேலைகளைக்  கிடப்பில் போட்டேன். மேலும் அழுத்தத்திற்கு உட்படுத்திக் கொள்ள வேண்டாமென்று சில தாமதங்களை உணர்ந்தே செய்ய வேண்டியிருந்தது. Stay Dry When Waves Are High என்பது போல :)  வாசிப்பும் எழுத்தும் Youtube வேலைகளும் அவற்றுள் முக்கியமானவை.


இப்புத்தாண்டில் தேக்கம் கொண்ட பணிகளை மீண்டும் தூசு தட்டிச் சிறுகச் சிறுகத் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். சேனல் தொடங்கிய நேரம் ஒலி புத்தகங்கள் தவிர வேறு விஷயங்கள் குறித்தும் பேசவும் பகிரவும் எண்ணியிருந்தேன். மெள்ள அவற்றுக்கான முன்னெடுப்புகளையும் செய்யத் தொடங்க வேண்டும், of course with all your support :)  ஒரு கை ஓசையாகாது தானே. எங்கள் முயற்சிகளுக்கு உங்கள் ஆதரவும் தேவை.


2024-ன் முதல் வேலையாக, இன்று ‘பூவிதழ் தூரிகை’ நாவலை முழு ஆடியோ நாவலாகப் பதிவேற்றியுள்ளோம். கீழே இணைப்பு கொடுத்துள்ளேன். உங்கள் மனம் கவர்ந்த யாழினி மற்றும் அர்ஜுன். கேளுங்கள். கேட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நட்புகளுக்கும் பரிந்துரையுங்கள். நம் சேனலையும் மறவாமல் Subscribe செய்து கொள்ளுங்கள். Keep supporting.


https://youtu.be/VgpQj4k-OBI?feature=shared

 

 


Channel link -


https://www.youtube.com/@hemajaynovels 


நத்தையின் வேகத்தில் எனினும் நகர்ந்து கொண்டிருக்கவே விழைவு. இறையருள் துணை நிற்க வேண்டும்.


அன்புடன்,

ஹேமா ஜெய்

No comments: