"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Wednesday, November 11, 2020

ஆனந்தி - விமர்சனங்கள்

ஆனந்தி நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏!

Ms. Thirumathi Lavanya - Apr 25 2021

ஹேமா ஜெய் - ஆனந்தி
எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலை. கதையை வாசிக்க வாசிக்க காட்சிகள் என் கண் முன்னே அப்படியே விரிந்து கொண்டு போயின. கதை
அருமையாக
இருந்தது ஹேமா. விசைத்தறி கூடங்கள் பற்றியும், அதில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை முறை பற்றியும் மிகவும் அழகாகக் கண் முன்னே காட்டிவிட்டீர்கள். சவிதா போன்ற பெண்களின் வாழ்க்கை வெறும் கற்பனையாக மட்டுமே இருக்க வேண்டும் என மனம் பதைக்கிறது. கதை முழுவதும் ஆனந்தி, ஆனந்தி, ஆனந்தி மட்டுமே. எல்லாவற்றையயும் தைரியமாக எதிர்கொள்கிறாள். சாய்வதற்கு ஒரு தோள் கிடைத்திருக்கு என்ற எண்ணத்தில். இறுதியாக அவள் எடுத்திருக்கும் முடிவும் மிகவும் எதாரத்தமான ஒன்றே. கண்கள் கலங்கிவிட்டன. நன்றி ஹேமா இப்படி ஒரு கதையைத் தந்ததற்கு.

----------------------------------------------------------------

Ms.Rosei Kajan - Apr 20 2021

விசைத்தறிப்பட்டறை அதோடு தொடர்பான தொழில்கள் அவற்றில் ஈடுபடும் மனிதர்கள், கடுமையான உழைப்பாளிகளான அவர்களின் எளிய வாழ்வு முறை என்று தங்கு தடையின்றி நகரும் ஹேமாவின் 'ஆனந்தி' யில், பக்கத்துக்குப் பக்கம் காட்சிகள் ஒவ்வொன்றும் மிகவும் தத்துரூபமாக கண்முன்னால் வலம் வருகின்றது. இந்தக் கதை ஒரு திரைப்படமாக இருந்தால் எப்படியிருக்கும் என்று நினைக்காதிருக்க முடியவில்லை.
கடுமையான உழைப்பாளிகளாகவிருந்தாலும் அவர்கள் வாழ்க்கை முறையால் இல்லாமை அவர்களோடே பயணப்படுவது, பிறப்பிலிருந்து தன் தொடர்பாக எந்தவொரு விதத்திலும் முடிவெடுக்க முடியாத பொம்மைப்போன்று ஆட்டுவிக்கப்பட்டாலும் முழுமையான சுமைதாங்கிகளாக நடமாடும் பெண்கள், அவர்களுள் நிறைந்துள்ள பாசம், இல்லாமையிலும் அவர்களில் உள்ள நேர்மை, மிகவும் எளிமையான விருப்புகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள அவர்கள் படும் பாடு என்று, ஒரு சமுகம் தொடர்பாக மிக மிக எளிமையாக, சுவாரசியமாக, அப்படியே மனதில் பதிந்து கிடந்திடும் வகையில் கதை சொல்லியிருக்கிறார், ஹேமா.
1 5 அத்தியாயங்கள் தான், எங்குமே தேவையற்ற இழுவைகள் இல்லை. கதையை தொடர்ந்து சுவாரசியமாக்குவதே இதுதான். ஆழ்ந்து கதைவாசிக்க விருப்பமானவர்கள் ஒரு சொல்லையும் வாசிக்காது கடக்க முடியாது. ஆங்காங்கே சொற்கள் சில எனக்குப் புரியவில்லை. விசைத் தறி தொர்பான பெயர்களும் அப்படியே அறிமுகம் இல்லாதவை. ஆனாலும் வாசிப்பில் துளி குறை வரவில்லை.
சவிதா என்ற பாத்திரம் பற்றி சொல்லியிருக்கும் முறை, அதிலுள்ள நாசுக்கு Hats off you Hema! இலக்கியத் தரமானது என்று ஆசையாக வாசிக்க எடுத்துவிட்டு அருவருத்து அரைகுறையாக நிறுத்திவிட்டுப் போகும் தேவையிருக்கவில்லை. எந்தவிடயமும் சொல்ல ஒரு முறை, வரையறை உண்டு. ஒருவரின் எழுத்து அதை எழுதுபவர் பற்றி நிச்சயம் சொல்லிச் செல்லும், இப்படியான தருணங்களே சாட்சி. proud of you!
ஆனந்தி , எட்டு வயதில் தொடங்கி அவள் வாழ்வு அவள் கையில் இல்லை. அவள் மனதில் உள்ள எளிமையான ஆசைகள், உணர்வுகள் அவ்வளவு
அருமையாக
, அவளோடு இருந்து அவள் பற்றி பார்த்தறிவது போலவே காட்டப்பட்டுள்ளது.
கதையின் முடிவு அருமையோ அருமை . நல்ல படிப்பறிவுள்ள வசதியான பெற்றோரின் மத்தியில், தாம் பெற்ற குழந்தைகளா தத்தமக்கான தனிப்பட்ட தேவைகள், உணர்வுகள், முன்னேற்றங்களா என்று வருகையில் தமக்கானதற்கு முன்னுரிமை கொடுத்திட முன்வருவதைக் காண முடிகின்றது. ஆனந்தி, அவர்களுக்கு முன்னால் மிக எளிமையாக ஒரு கேள்வியை வைத்துச் செல்கின்றாள். உன் உணர்வுகளும் தேவைகளும் முன்னேற்றங்களும் நிச்சயம் தேவைதான்; அப்படியிருக்கையில்,நீ ஏன் இன்னொரு உயிரை உலக்குக்கு அறிமுகம் செய்வான்? அந்தரிக்க ஏங்கித் தவிக்க வைப்பான்? ஒரு பிள்ளைக்கு வசதி வாய்ப்புகள் தராத இன்றியமையாத உணர்வைத் தரக்கூடியது பெற்றோரின் அரவணைப்பும் அனுசரணையும். அதில் சமரசம் ஏன் என்று சொல்லிச் செல்லும் ஆனந்தியின் வாழ்க்கை, ஓரளவுக்கேனும் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை மனதுள் எழுகின்றது. அவளோடு சிறிது நேரம் கதைத்துக்கொண்டிருக்க வேணும் போல் மனதுள் ஏங்க வைத்து விட்டீங்க ஹேமா.
அவக் அவக் என்று சின்னப் பிள்ளைகள் சுடச் சுட சோறு சாப்பிடும் காட்சி எனக்கு என்றுமே மறக்காது. இப்படிப் பல காட்சிகள் சொல்லலாம்.
கார்த்தி - இவன் பற்றி நினைக்கையில் …
ஹேமா இவன் அடுத்து என்ன செய்வான்?
சாத்தியங்களுக்கு உட்பட்டு கற்பனை கண்டபடி ஓடுது. வாசகர்கள் ஒவ்வொருவருள்ளும் ஓடும். அதுவே உங்கள் மனதுள் ஓடினால் எப்படியிருக்கும்! முடிந்தால் நீங்களே சொல்லி விடுங்களேன். வாசிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்.
மேலும் சிறப்பாக எழுத அன்பான
வாழ்த்துகள்
ஹேமா!
ஒன்று சொல்ல மறந்துவிட்டேனே! ‘பரிசுகள்’ மனதுக்குப் பிடித்தவையாக கிடைப்பதும் அது தரும் சந்தோசமும் தனி.
பரிசாகக் கிடைத்த ‘ஆனந்தி’யும் அப்படியே! 😍
---------------------------




Mr. Srinivasan - May 27, 2020

Madam,

I started reading the novel yesterday and completed this morning. You have very nicely portrayed Anandhi. Her final decision is very practical, though paining for her and Karthi. Thank you so much!

My thanks to the friend who had helped you with the minutest details of weaving/spinning.

Though Anandhi has her own desire, due to her very early marriage, children and an ill-treating husband, to marry Karthi, her sacrifice for the sake of her daughter is laudable!

I have observed that in one place Anandhi's age is mentioned as 28 and at other place as 26.

Kudos Madam,


S Srinivasan

------------------------------

Ms. Vanathi - June 10, 2020

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை

ஒளவையார் எழுதிய பாடல் தான் நினைவுக்கு வருகிறதென்றால் மிகையாகாது..

ஆனந்தி...ஹேமா அவ‌ர்க‌ளி‌ன் கதை படிக்கும் நேரத்தில் ந‌ம்மை அறியாமல் இமை ஓரங்களில் ஒரு துளி நீர்...
ஆனந்தி, சவீதா போன்ற பல பெண்கள் நம் கண் பார்வையில் உள்ளனர். ஆனந்தி, கார்த்தி.... அவ‌ர்க‌ளி‌ன் அம்மா, ஆனந்தியின் உடன் பிறந்தவர்கள், எல்லோரும் நம் உடன் இருக்கும் அண்டை வீட்டினர் தான் இந்த கதா பாத்திரங்கள்..
ஆனந்தி சிறு வயதில் திருமணம் செய்து, கணவன் சரியில்லாத காரணத்தால் அவளின் இரு பி‌ள்ளைக‌ள் வளர்க்கும் பொறுப்பு, பி‌ள்ளைக‌ள் வளரும் பொழுது அவளுக்கு என்று ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை, கார்த்தி, ஆனந்தி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.. ஆனால் விதி வலியது போலும்..
இருவரின் வாழ்க்கையும் கேள்வி குறியா? இல்லை முற்றும் இல்லை தொடரும் என்பதை இந்த கதையில் நேர்த்தியாக சொல்லி இருக்காங்க ஹேமா.

இவர்களை பாராட்டி ஆக வேண்டும்... கணவன் சரி இல்லை என்றாலும்.... குழந்தைகள் மட்டும் வாழ்க்கை என்று இல்லமால் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பது மிகவும் நன்று. அதை ஊரார், உறவுகள் எல்லோரும் கிண்டல், கேலி செய்தாலும் திருமணம் வரை கொண்டு சென்றது எனக்கு ஒரு சந்தோஷம் எனில் மிகையாகாது.... ஆனால்... விடை தான்.. மிக பெரிய கொடுமை..

நம் நாட்டில் மட்டுமே அது ஏன் தான் பெண்ணாக பிறந்தா அடுத்தவருக்கு மட்டுமே வாழ வேண்டும் என்று நினைப்பது... விட்டு கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை... போலும்...
வறுமையின் காரணமாக கிட்னி விற்பது... படத்தில் பார்த்து இருக்கிறோம்.. இவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறது... இந்த கதை படிக்கும் நேரத்தில்... இன்றைய நிலையில்... ஆனந்தி போன்ற வறுமையில் வாடும் மனிதர்கள் ஒரு வேளை உணவிற்கும் எப்படி எல்லாம் கஷ்ட பாடுவார்கள் என்று நினைக்கும் பொழுது நெஞ்சில் ஒரு பெரிய வலி... வறுமை, பசி, பட்டினி, காதல், ஏமாற்றம், இறப்பு எல்லாம் கலந்தது தான் இந்த வாழ்க்கை.
உங்களின் எழுத்துக்களின் மைல் கல்... இந்த கதை. மிகவும் இயல்பாக, வாழ்க்கையின் யதார்த்தம் அப்படியே கண் பார்வை கொண்டு வருகிறீர்கள்... எனில் மிகையாகாது.👍 👌

------------------------------------------

Ms. Buddy - June 4, 2020

ஆனந்தி - கதை ரொம்ப நல்லா இருந்தது. எதார்த்தமான முடிவு. ஆனந்தியும் கார்த்தியும் மனசுல இடம் பெற்றுவிட்டனர்.

En friend sonnanga Hema. Congrats! Kindle la podunga seekiram.

------------------------------------------------------

Ms. Usha - Jul 7, 2020

Reading Anandhi. Learning about a part of society, You have researched a lot. Lot of people in the world slogging for 3 meals a day.

Finished reading today with a heavy heart At least she is getting out of the present situation for the betterment of her children but still feel sorry for her Sad that a small girl has been brain washed

 -------------------------------------------------------

 Ms. Divya Sivakumar on Sep 20 2020

 

ஆனந்தி -
Hema Jay
இவங்களோட கதைகள் நம்ம சுத்தி இருக்க வாழ்வியலோட கலந்து இருக்கும்....எல்லா கதைலையும் ஏதாவது ஒரு விஷயத்த நச்சுனு நடுமண்டைல அடிச்சா போல சொல்லிருப்பாங்க....பெரும்பாலும் ஒரு சின்ன பகுதியாக தான் வரும் மனம் கனக்கும் நிகழ்வுகள்...பட் இதுல கதையோட்டமே கனமானது தான்..
8 வயசுல இருந்து பட்டறை வேலைக்கு போய் வெறுத்து போன ஆனந்திக்கு கல்யாணம் மூலமாக ஒரு சுதந்திரம் கிடைக்கும்னு நம்பி அதுல அடியெடுத்து வச்சா அதும் நரகமாகி 2 பிள்ளைகளோடு தனிச்சு வாழ ஆரம்பிக்குறா...அப்போ அவ சந்திக்கிற கஷ்டங்கள்,சுத்தி இருக்கி

யோட முடிவு என்ன??என்ன ஆனா???இப்படி பட்ட கேள்விகளுக்கு விடையா அமைது முடிவு....
இதுல என்ன ரொம்ப பாதிச்சது சவிதாவோட முடிவு...இதுபோல நிறைய விட்டில் பூச்சிகள் இப்போ அதிகமா இருக்கு...
சுமதி ரொம்ப அழுத்தமா பதிஞ்ச கேரக்டர்...
மலர் அண்ட் செந்தில் அருமையான குணமுள்ள எதார்த்தவாதிங்க....
இங்க பணம் தான் எல்லாத்தையும் நிர்ணயிக்கும் காரணி அப்டின்றத வலிக்க வலிக்க சொல்லிருக்காங்க...
வாழ்த்துகள் ஸிஸ்...அடுத்த கதைக்கு வெயிட்டிங்.❤️❤️❤️❤️

 

Reviewed in India on 26 September 2020


No comments: