பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் என்னுடைய சிறுகதையான ‘பெண் விழை’ யும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சிறுகதை வந்து சேர்ந்த அடுத்த கணமே acknowledgment அனுப்பியது, போட்டி முடிவுத் தேதி என்று அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 14 அன்றே எவ்வித தாமதமும் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் பட்டியலை அனுப்பி தகவல் தெரிவித்தது, “வெற்றி, தோல்வி என்பது இரண்டாம் பட்சம்தான். பங்கேற்பு தான் களத்தில் இருக்கிறோம் என்பதற்கான சாட்சி. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பங்கேற்றவர்களுக்கு கூடுதல் வாழ்த்துகள்” என அனைவருக்கும் வாழ்த்துகளைப் பரிமாறியது என இப்போட்டியில் பிடித்த விஷயங்கள் நிறைய இருந்தன. இவ்வித prompt & precise தகவல் பரிமாற்றம் பங்கேற்பவர்களுக்குக் கூடுதல் ஊக்கம் தரும் தானே!
No comments:
Post a Comment